ஜபம்-பதிவு-750
(சாவேயில்லாத
சிகண்டி-84)
(பீஷ்மரிடம்
சென்ற
கங்காதேவி
பீஷ்மரிடம்
பேச
ஆரம்பித்தாள்)
கங்காதேவி :
மகனே பீஷ்மா
நீ அம்பையை
சிறை
எடுத்ததைத்
தான்
பரசுராமர் தவறு
என்கிறார்
பிரம்மச்சாரியாக
இருப்பவன்
எதற்காக ஒரு
பெண்ணை
சிறை எடுத்தான்
பீஷ்மன் செய்த
செயல் சரியான
செயலா
என்று பரசுராமர்
மட்டுமல்ல
இந்த உலகமே
கேள்வி கேட்கிறது
இந்த கேள்விக்கு
எவ்வளவு பதில்
சொன்னாலும்
பரசுராமர்
ஏற்றுக் கொள்ளும்
நிலையில் இல்லை
இந்த கேள்வி
உன்னுடைய
வாழ்க்கை
முழுவதும்
உன்னைத்
துரத்தப் போகிறது
நீ இறந்த பிறகும்
உன்னைத்
துரத்தப் போகிறது
இந்த கேள்வி
உன்னுடைய
வாழ்க்கையில்
ஒரு கேள்விக்
குறியாகவே
இருக்கப் போகிறது
நீ எங்கு சென்றாலும்
இந்த கேள்வி
உன்னைத் தொடர்ந்து
கொண்டே தான்
இருக்கும்
உன்னுடைய புகழுக்கு
களங்கத்தை
ஏற்படுத்திக்
கொண்டே
தான் இருக்கும்
மற்றவர்கள்
சொன்னார்கள்
என்பதற்காக
நாம் எந்த ஒரு
செயலையும்
செய்யக் கூடாது
செயலைச் செய்வதற்கு
முன்னர் நமக்கு
ஏதேனும் பாதிப்பு
ஏற்படுமா என்பதை
ஆராய்ந்து
பார்க்க வேண்டும்
நமக்கு பாதிப்பு
எதுவும் இல்லை
என்று தெரிந்தால்
மட்டுமே
அந்தச் செயலைச்
செய்ய வேண்டும்
நமக்கு பாதிப்பு
ஏற்படும் என்று
தெரிந்தால்
அந்தச் செயலை
நாம் செய்யக்
கூடாது
பாதிப்பு ஏற்படும்
என்று தெரிந்தும்
நாம் அந்தச்
செயலைச் செய்தால்
செய்த செயலுக்கு
நாம் தான்
பொறுப்பேற்க
வேண்டும்
செயலுக்குரிய
விளைவானது
நன்மையில் முடிந்தால்
அனைவரும்
சொல்லியதை கேட்டு
செய்தார்கள்
என்று
இந்த உலகம்
சொன்னவர்கள்
அனைவரையும்
புகழும்
ஆனால் செய்த
செயலுக்குரிய
விளைவானது
தீமையாக இருந்தால்
செயலைச்
செய்தவன் தான்
பொறுப்பேற்க
வேண்டும்.
செயலைச்
செய்தவனைத்
தான்
இந்த உலகம்
குற்றம் சொல்லும்
செயலைச் செய்யச்
சொன்னவர்களை
இந்த உலகம்
குற்றம் சொல்லாது
நீ செய்த
செயலின்
விளைவானது
தீமையை உண்டாக்கி
விட்ட காரணத்தினால்
இந்த உலகம்
உன்னை குற்றவாளி
என்கிறது
மற்றவர்கள்
சொன்னார்கள்
என்பதற்காக
ஒரு செயலைச்
செய்து
சிக்கலில் மாட்டிக்
கொண்டதற்கு
நீ ஒரு
உதாரணமாக
இப்போது
திகழ்ந்து
கொண்டிருக்கிறாய்
இந்த உலகத்தின்
முன்
நீ ஒரு
குற்றவாளியாக
நிறுத்தப்பட்டிருக்கிறாய்
பீஷ்மா
--------ஜபம்
இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------01-05-2022
-------செவ்வாய்க்
கிழமை
//////////////////////////////////////////////////
No comments:
Post a Comment