August 05, 2020

அறிய வேண்டியவை-பதிவு-139

ஜபம்-பதிவு-631

(அறிய வேண்டியவை-139)

 

"ஏற்கனவே

இந்த நாட்டில்

உள்ள மக்கள்

அனைவரும்

வாரணாவதத்தில்

பாண்டவர்களை

கொல்வதற்கு

சதித்திட்டம்

தீட்டியவர்கள் என்று 

திருதராஷ்டிரன்,

துரியோதனன்,

சகுனி என்று

நம் மூவருடைய

பெயர்களைத் தான்

சொல்லிக் கொண்டு

இருக்கிறார்கள் "

 

"இந்த

சதித்திட்டத்திற்கு

உதவியதாக  

கர்ணனுடைய

பெயரையும்

சேர்த்து

சொல்லிக் கொண்டு

இருக்கிறார்கள் "

 

"பாண்டவர்கள்

உயிரோடு

இருக்கிறார்கள்

என்று தெரிந்தும்

நாம் அவர்களை

அழைத்து

வரவில்லை

என்றால்

பாண்டவர்களை

கொல்வதற்காக

நாம் மூவரும்

சேர்ந்து தான்

சதித்

திட்டத்தை தீட்டி

செயல்படுத்தினோம்

என்று இந்த

நாட்டில் உள்ள

மக்கள் அனைவரும்

பேச ஆரம்பித்து 

விடுவார்கள்"

 

"திருதராஷ்டிரன்

தன்னுடைய

மகனுக்கு

முடிசூட்டுவதற்காக

பாண்டவர்களை

கொன்று விட்டார்

என்று பேச

ஆரம்பித்து

விடுவார்கள்"

 

"மக்கள்

பேசக்கூடிய இந்த

பேச்சை நிறுத்த

வேண்டும் என்றால்

நாம்

பாண்டவர்களை

அஸ்தினாபுரம்

அழைத்து

வரத்தான்

வேண்டும்"

 

துரியோதனன் :

"மக்களைப் பார்த்து

பயப்படுகிறீர்களா?"

 

திருதராஷ்டிரன் :

"மக்களைப் பார்த்து

மன்னன்

பயந்தாலும்

மன்னனைப் பார்த்து

மக்கள்

பயந்தாலும்

நாட்டை

ஆள்வதற்குரிய

தகுதியை மன்னன்

இழந்துவிட்டான்

என்று பொருள்"

 

"மக்களைப்

பார்த்து நான்

பயப்படவில்லை

மக்களை புரிந்து

கொண்டதால் தான்

இந்த செயலுக்கு

ஒத்துக் கொண்டேன்"

 

"மக்களுடைய

எண்ணங்கள்

என்ன என்பதை

அறிந்து

கொண்டதால் அதை

நிறைவேற்றுவதற்கு

முயற்சி செய்து

கொண்டிருக்கிறேன்"

 

"மக்களைப்

புரிந்து கொண்டு

மக்களுடைய

எண்ணங்களுக்கு

ஏற்றபடி நான்

நடந்து

கொள்வதால் தான்

இன்று நான்

அரியணையில்

இருக்கிறேன்"

 

"நான் சொன்ன

வார்த்தைகளில்

உள்ள

அர்த்தங்களை

நீ புரிந்து

கொண்டால்

மக்களைப்

புரிந்து

கொள்வாய்"

 

"மக்களைப்

புரிந்து

கொண்டால்

பாண்டவர்ளை

அஸ்தினாபுரம்

அழைத்து

வருவதற்கு

விதுரரை

அனுப்பியது

சரிதான்

என்று நீயும்

ஒத்துக் கொள்வாய்"

 

"மகனே

நம் மேல் களங்கம்

வராமல் இருக்க

வேண்டுமானால்

நம் மேல் குற்றம்

சாட்டப்படாமல்

இருக்க

வேண்டுமானால்

நாம் தான்

குற்றவாளி

என்று இந்த நாடு

நம்மை

சொல்லாமல்

இருக்க

வேண்டுமானால்

பாண்டவர்களை

அஸ்தினாபுரம்

அழைத்துத் தான்

வர வேண்டும்"

 

"நீயும்

பாண்டவர்களை

வரவேற்றுத் தான்

ஆக வேண்டும்"

 

"பாண்டவர்களை

வரவேற்பதற்கு

தயாராக

இரு மகனே"

 

துரியோதனன் :

"விடைபெறுகிறேன்

தந்தையே!

 

(என்று

சொல்லி விட்டு

துரியோதனன்

அந்த

இடத்தை விட்டு

கோபத்துடன்

வெளியேறினான்)

 

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

 

----------- 05-08-2020

/////////////////////////////////


No comments:

Post a Comment