ஜபம்-பதிவு-633
(அறிய
வேண்டியவை-141)
துரியோதனன் :
“நீங்கள்
இப்போது
செய்யும்
செயலால்
என்ன
நன்மை
நடக்கப்
போகிறது”
சகுனி :
“ஒரு
செயலானது
ஆரம்பிக்கும்
போது
அச்செயல்
நன்மை
தரும்
செயலா
அல்லது
தீமை
தரும்
செயலா
என்பதை
தீர்மானிக்க
முடியாது”
“செயலின்
முடிவில்
அச்செயல்
தரும்
விளைவைப்
பொறுத்துத்
தான்
அச்செயல்
நன்மை
தரும்
செயலா
அல்லது
தீமை
தரும்
செயலா
என்பதை
தீர்மானிக்க
முடியும்”
“ஆகவே
நான்
செய்யும்
செயல்
முடியும்
வரை
பொறுமையாக
இரு
மருமகனே”
(துரியோதனன்
சகுனியின்
முன்னால்
அமைதியாக
நின்று
கொண்டிருந்தான்
துரியோதனன்
அமைதியாக
நின்று
கொண்டு
இருந்ததால்
கர்ணனும்
அமைதியாக
நின்று
கொண்டிருந்தான்
அந்த
அறையில்
என்ன
நடக்கப்
போகிறது
துரியோதனனுடைய
மாமா
சகுனி
என்ன
செய்யப்
போகிறார்
என்பதை
காண்பதற்காக
கர்ணன்
அமைதியாக
எதுவும்
பேசாமல்
அமைதியாக
நின்று
கொண்டிருந்தான்
அந்த
அறையே
அமைதியால்
சூழப்பட்டிருந்தது)
(ஒரு
பணிப்பெண்
வருகிறாள்
அனைவரையும்
வணங்குகிறாள்
சகுனியைப்
பார்த்து
சொல்கிறாள்)
பணிப்பெண் :
“தங்களைக்
காண
புரோசனன்
வந்திருக்கிறார்”
சகுனி :
“புரோசனனை
வரச்
சொல்”
(புரோசனன்
வருகிறான்
அனைவரையும்
பார்க்கிறான்
வணங்குகிறான்)
சகுனி :
“நான்
எதற்காக
உன்னை
அழைத்திருக்கிறேன்
என்று
தெரியுமா?”
புரோசனன் :
“எனக்கு
அளிக்கப்பட்ட
வேலையைப்
பற்றி
கேட்பதற்காக
என்னை
அழைத்து
இருக்கிறீர்கள்”
சகுனி :
“நான்
சொன்னபடி
செய்தாயா?”
புரோசனன் :
“செய்தேன்”
சகுனி :
“பாண்டவர்கள்
இப்போது
உயிரோடு
இருக்கிறார்களா?”
புரோசனன் :
“உயிரோடு
இல்லை”
சகுனி :
“எப்படி
சொல்கிறாய்”
புரோசனன் :
“அரக்குமாளிகைக்கு
தீ
வைத்ததினால்
பாண்டவர்கள்
மற்றும்
அவருடைய
தாயார்
குந்தி
தேவி
ஆகிய
ஆறு
பேரும்
மரணம்
அடைந்தார்கள்”
சகுனி :
“நீ
சொல்லும்
செய்தி
உண்மையா?”
புரோசனன் :
“ஆமாம்
உண்மை”
சகுனி :
“பாண்டவர்கள்
உயிரோடு
இருக்கிறார்கள்
துருபதனின்
மகளான
பாஞ்சாலியை
திருமணம்
செய்து
கொண்டிருக்கிறார்கள்
என்ற
செய்தியைக்
கேள்விபட்டேன்
இந்த
செய்தி
உண்மையா
அல்லது
பாண்டவர்கள்
இறந்து
விட்டார்கள்
என்று
நீ
சொல்லும்
செய்தி
உண்மையா
எந்த
செய்தி
உண்மை?”
புரோசனன் :
“பாண்டவர்கள்
உயிரோடு
இருக்கிறார்களா?”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
05-08-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment