July 09, 2020

அறிய வேண்டியவை-பதிவு-100


               ஜபம்-பதிவு-592
        (அறிய வேண்டியவை-100)

“எங்களைக் கொன்று
நீ அரசாள வேண்டும்
(அல்லது)
உன்னைக் கொன்று
நாங்கள்
அரசாள வேண்டும்
ஒன்று நீ சாக
வேண்டும்
(அல்லது)
நாங்கள் சாக வேண்டும்
இரண்டில் ஒன்று
தான் நடக்க வேண்டும்
இங்கே தானம்
என்பதற்கு
இடம் இல்லை
யாருடைய பிணத்தின்
மேல் யார் ஆட்சி
செய்யப் போகிறார்கள்
என்பது தான்
முக்கியம்”

“உனக்கு ஏற்பட்டுள்ள
துக்கத்தைப்
போக்குவதற்காக
உனக்கு உயிர்பிச்சையும்
அளிக்க முடியாது
உனக்கு உயிர் பிச்சை
அளித்து உயிரோடு
இந்த உலகத்தில்
வாழ்ந்து கொண்டு இரு
துரியோதனா
என்று உனக்கு
சொல்ல முடியாது”

“நீ செய்த எந்த
ஒரு அதர்மச்
செயலையும்
மன்னித்து விட்டு
மறந்து விட்டு  
உனக்கு
உயிர்பிச்சை தரலாம்
ஆனால் கௌரவர்கள்
அவையில் நீ
திரௌபதியை
அவமானப்
படுத்தியதை
மன்னிக்கவும்
முடியாது
மறக்கவும்
முடியாது என்ற
காரணத்தினால் தான்
உனக்கு உயிர்பிச்சை
அளிக்க
முடியாது என்றேன்”

“துரியோதனா போரின்
இறுதிக் கட்டத்திற்கு
வந்து விட்டோம்
வெற்றியை சுவைத்து
உயிரோடு இருப்பவர்
இந்த பூமியை
ஆளட்டும்
தோல்வியை சுவைத்து
உயிரை விட்டவர்
இந்த பூமியில்
உறங்கட்டும்
வெளியே வா
துரியோதனா
வந்து போரிடு “

துரியோதனன் :
“நீங்கள் அனைவரும்
தோழர்களுடனும்
ரதங்களுடனும்,
வாகனங்களுடனும்
இருக்கிறீர்கள்
ஆனால் நானோ
காயப்படுத்தப்பட்ட
சரீரத்தை
உடையனாய்
இருக்கிறேன்
களைத்திருப்பவனாய்
இருக்கிறேன்
வேதனைப்
பட்டவனாய்
இருக்கிறேன்”

“என்னுடைய உடலில்
உள்ள சக்திகள்
அனைத்தும்
என்னை விட்டு
போனவனாய்
இருக்கிறேன் 
ரதத்தை
இழந்தவனாய்
இருக்கிறேன்
வாகனத்தை
பறிகொடுத்தவனாய்
இருக்கிறேன்”

“தனியாக இருக்கும்
நான் அனைத்தையும்
இழந்து விட்டு
தனிமையில்
இருக்கும் நான்
எப்படி அனைத்தையும்
வைத்துக்
கொண்டிருக்கும்
உங்களுடன்
போரிட முடியும்
கும்பலாக வந்து
போரிடுவதற்காகக்
காத்துக்
கொண்டிருக்கும்
உங்களுடன் போரிட
முடியும் - நீங்கள்
அனைவரும்
ஒன்றாகச்
சேர்ந்து என்னுடன்
போரிடுவதற்காக
வந்திருக்கிறீர்கள்
தனியாக நிற்பவனிடம்
கும்பலாகச் சேர்ந்து
போரிடலாமா
இது தர்மம் ஆகுமா”

தர்மர் :
“தர்மத்தை நீ
பேசும் போது தான்
விசித்திரமாக
இருக்கிறது”

துரியோதனன் :
“தர்மத்தைக்
கடைபிடிக்கிறோம்
என்று வாய்
வார்த்தையால்
மட்டும்
சொல்லி விட்டு
அதர்மத்தை
பின்பற்றி
அனைவரையும்
கொன்று விட்டு
வெற்றி பெறப்
போகிறோம் என்று
ஆணவத்தில் ஆடிக்
கொண்டிருக்கும்
நீங்கள்
தர்மத்தைப் பற்றி
பேசலாம் நான்
பேசக்கூடாதா?”

“தர்மத்தைக்
கடைபிடிக்கிறோம்
தர்மத்தைப்
பின்பற்றுகிறோம்
என்று சொல்லி
விட்டு தர்மவான்களாக
பாண்டவர்களாகிய
நீங்கள் இந்த
உலகத்தில் நடித்துக்
கொண்டிருப்பதைப்
பார்த்து இந்த உலகம்
வேண்டுமானால்
நம்பலாம்
ஆனால் நான்
நம்ப மாட்டேன் “

“சஷத்திரியர்கள்,
பாஹ்லீகர்கள், பீஷ்மர்,
துரோணர், கர்ணன்,
சூரனான ஜெயத்ரதன் ,
பகதத்தன்,
மத்ர ராஜனான சல்யன்,
பூரிச்ரவஸ், புத்திரர்கள்,
ஸுபலனுடைய
குமாரனான சகுனி
ஆகியோர்களுக்கு
நான் பட்ட
நன்றிக் கடன்
ஒன்று பாக்கி
இருக்கிறது - அந்த
நன்றிக் கடனை நான்
அடைக்க வேண்டும்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 09-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment