ஜபம்-பதிவு-755
(சாவேயில்லாத
சிகண்டி-89)
இந்த அஸ்திரம்
முந்தின ஜென்மத்தில்
நீ அறிந்திருந்தாய்
பிரஸ்வாபம் அஸ்திரத்தை
நீ எப்போது
பயன்படுத்த
வேண்டும் என்று
நினைக்கிறாயோ
அப்போது
பிரஸ்வாபம் அஸ்திரத்தை
வரவழைக்கும் மந்திரம்
செலுத்தும் மந்திரம்
திருப்பி
வரவழைக்கும் மந்திரம்
திருப்பி
அனுப்பும் மந்திரம்
ஆகிய அனைத்தும்
உனக்கு தெளிவாக
வெளிப்படும்
பிரஸ்வாபம்
அஸ்திரத்தை
வரவழைத்து அதனை
பரசுராமர் மீது செலுத்து
பரசுராமர்
போர்க்களத்தில்
தூக்கத்தில்
ஆழ்ந்து விடுவார்
பிறகு அவரை
தூக்கத்திலிருந்து
எழுப்பி விடுவாய்
போர்க்களத்தில் ஒருவர்
இறந்தாலும் தூங்கினாலும்
தோற்றவராகவே
கருதப்படுவார்
பிரஸ்வாபம்
அஸ்திரத்தை
வரவழைத்து அதனை
பரசுராமர் மீது செலுத்தி
போர்க்களத்தில்
அவரை தூங்கச்
செய்து விடு
பரசுராமர்
போர்க்களத்தில் தூங்கினால்
அவர்
தோற்று விடுவார்
நீ வெற்றி
பெற்று விடுவாய்
இதனால்
பரசுராமரின் உயிருக்கு
எந்தவிதமான
பாதிப்பும் ஏற்படாது
அதனால்
பிரஸ்வாபம் அஸ்திரத்தை
பரசுராமரின் மேல்
பிரயோகம் செய்
(என்று சொல்லி
விட்டு எட்டு
பிராமணர்களும்
மறைந்து விட்டார்கள். )
23-ம் நாள்
காலை தூக்கத்திலிருந்து
பீஷ்மர் எழுகிறார்
23-ம் நாள்
பரசுராமருக்கும் பீஷ்மருக்கும்
இடையே
குருக்ஷேத்திரத்தில்
நடைபெற்ற
போரின் இறுதி நாள்
பரசுராமரை
வீழ்த்துவதற்கான வழி
கிடைத்து விட்ட
மகிழ்ச்சியில்
போருக்காகத் தன்னை
தயார்படுத்திக் கொண்டு
குருக்ஷேத்திரத்தை
அடைந்தார்
பீஷ்மர்
குருக்ஷேத்திரத்தில்
இருவரும் தெய்வீக
அஸ்திரங்களைப்
பயன்படுத்தி
உக்கிரமாகப் போரிட்டனர்
கோபத்தின்
உச்சிக்குச் சென்ற
பரசுராமர்
பிரம்மாஸ்திரத்தை
பீஷ்மர் மேல் ‘
செலுத்தினார்
பிரம்மாஸ்திரத்திற்கு
எதிரான அஸ்திரம்
இந்த உலகத்தில்
பிரம்மாஸ்திரம்
மட்டுமே என்ற
காரணத்தினால்
பீஷ்மரும்
பரசுராமருக்கு எதிராக
பிரம்மாஸ்திரத்தை
செலுத்தினார்
இரண்டு
பிரம்மாஸ்திரங்களும்
பீஷ்மரையோ
பரசுராமரையோ
அடையாமல்
நடுவானில்
ஒன்றை ஒன்று
சந்தித்துக்
கொண்ட போது
முழு ஆகாயமும்
தீக்கிரையானது
போல் இருந்தது
ரிஷிகளும்
கந்தருவர்களும்
தேவதைகளும்
அஸ்திரத்தின் சக்தியினால்
மிகுந்த துன்பத்தை
அடைந்தனர்
கடல்கள் பொங்கத்
தொடங்கின
மலைகளில் உள்ள
பாறைகள் உடையத்
தொடங்கின
எரிமலைகள்
வெடிக்கத் தொடங்கின
தாவர வகைகள்
அனைத்தும்
எரியத் தொடங்கின
உயிரினங்கள்
சாம்பலாகி காற்றில்
கரையத் தொடங்கின
அந்த இடமே
புகையால்
சூழப்பட்டு இருந்தது
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------20-05-2022
-------வெள்ளிக் கிழமை
///////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment