May 20, 2022

ஜபம்-பதிவு-753 (சாவேயில்லாத சிகண்டி-87)

 ஜபம்-பதிவு-753

(சாவேயில்லாத

சிகண்டி-87)

 

குருஷேத்திரத்தில்

பீஷ்மர் தேரிலும்

பரசுராமர் தரையிலும்

நின்று

கொண்டிருக்கிறார்கள்

 

பீஷ்மர் :

போரிடுவதற்கு

போர்க்களம் வருபவன்

கவசம் அணிந்து

வர வேண்டும்

 

தரையில் நிற்பவன்

தரையில்

நிற்பவனோடும்

தேரில் இருப்பவன்

தேரில்

இருப்பவனோடும்

தான் போரிட

வேண்டும் என்பது

போர் நியதி

 

பரசுராமரே

நீங்கள் கவசம்

அணிந்து

தேரில் வாருங்கள்

நான் உங்களுடன்

போர் புரிகிறேன்

 

பரசுராமர்:

பீஷ்மா

இந்தப் பூமியே

என்னுடைய தேர்

வேதங்களே

என்னுடைய குதிரைகள்

வேத மாதாக்களான

காயத்ரி சாவித்ரி

சரஸ்வதி இவர்களே

என்னுடைய கவசம்

 

பார்

என்னைப் பார்

நன்றாக

என்னைப் பார்

 

பீஷ்மர்

பரசுராமரை

பார்த்த போது

அந்த இடமே

அவருக்கு மாறுவது

போல இருந்தது

பீஷ்மரின்

கண்ணுக்கு தெரிந்த

அந்தக் காட்சி

பீஷ்மரால் நம்ப

முடியாததாக இருந்தது

 

எல்லா

ஆயுதங்களாலும்

நிரப்பப்பட்டதும்

அழகுகள் அனைத்தும்

பொருந்தியதும்

ஆச்சர்யமான

காட்சிகளையுடைதும்

பரிசுத்தமானதும்

விரிவானதும்

தேவலோகத்திற்கு

இணையானதும்

திவ்யமான

குதிரைகள்

பூட்டப்பட்டதும்

பொன்னால்

அலங்கரிக்கப்பட்டதுமான

தேரின் நடுவே

நின்று கொண்டு

இருந்தார்

பரசுராமர்

 

சந்திரன் சூரியன்

வரையப்பட்ட

கவசத்துடன்

வில்லைத் தரித்து

அம்பறாத் துணிகளைக்

கட்டிக் கொண்டு

உடும்புத் தோலினால்

செய்யப்பட்ட

விரலுறை

பூண்டவராயிருந்தார்

பரசுராமர்

 

அந்தத் தேருக்கு

தேரோட்டியாக

பரசுராமரின்

இனிய நண்பர்

அக்ருதவ்ரணர்

இருந்தார்

 

தேரில் இருந்து

கீழே இறங்கிய

பீஷ்மர்

பரசுராமரிடம்

செல்கிறார்

 

பீஷ்மர்:

பரசுராமரே

போரில் நான்

வெற்றி பெற

எனக்கு ஆசி

கூறுங்கள்

 

பரசுராமர் :

பீஷ்மா

போரில் எதிரி

வெற்றி பெற

வேண்டும் என்று

என்னால் எப்படி

ஆசி கூற முடியும்

 

நீடுழி வாழ்க

என்று நான்

வாழ்த்தினால்

போரில் நீ

கொல்லப்படாமல்

இந்த உலகத்தில்

நீண்ட காலம்

நீ வாழ்தற்குரிய

நிலையை

உருவாக்கி விடும்

எனவே

நீடுழி வாழ்க

என்று என்னால்

வாழ்த்த

முடியாது

 

உண்மை யார்

பக்கம் இருக்கிறதோ

அவர் வெற்றி

பெறுவார் என்று

நான் சொன்னால்

ஏதேனும் ஒரு

காரணத்தால் நீ

வெற்றி பெற்று

விட்டால்

தவறான

செயலைச் செய்த

உன் பக்கம் தான்

உண்மை இருக்கிறது

என்று இந்த

உலகம்

எடுத்துக் கொள்ளும்

 

ஆகவே எந்த

ஒன்றையும்

என்னால்

சொல்ல முடியாது

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------20-05-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment