May 20, 2022

ஜபம்-பதிவு-758 (சாவேயில்லாத சிகண்டி-92)

 ஜபம்-பதிவு-758

(சாவேயில்லாத

சிகண்டி-92)

 

நீ ஒருவன் தான்

என்னை

சூழ்ச்சி செய்து

வெற்றி பெற

வேண்டும் என்ற

எண்ணத்தில்

போரிட்டிருக்கிறாய்

 

ஒரு கோழையுடன்

போரிட நான்

விரும்பவில்லை

 

நான் ஒத்துக்

கொள்கிறேன்

 

நான் தோற்று

விட்டதை

ஒத்துக் கொள்கிறேன்

 

பரசுராமராகிய நான்

பீஷ்மனிடம்

தோற்றதை

ஒத்துக் கொள்கிறேன்

 

பீஷ்மா

நீ வெற்றி

பெறுவதற்காக

எத்தகைய செயலையும்

செய்வாய் என்பதை

பிரஸ்வாபம்

அஸ்திரத்தை

எப்போது

என் மீது

செலுத்தினாயோ

அப்போதே நான்

தெரிந்து கொண்டேன்

 

பணம் பதவி

அதிகாரம் புகழ்

ஆகியவற்றுக்கு

அடிமையாக

இருக்கும் நீ

அவைகளை

தக்க வைத்துக்

கொள்வதற்காக

இப்படி ஒரு

கீழ்த்தரமான

செயலைச்

செய்வாய்

என்பதை நான்

எதிர்பார்க்கவில்லை

 

எந்த

குருஷேத்திரத்தில்

என்னை

தூங்க வைத்து

வெற்றி பெற

வேண்டும் என்று

நினைத்தாயோ

அதே

குருஷேத்திரத்தில்

நீ வீழ்த்தப்பட்டு

யாரும் இல்லாத

அனாதையாக

படுத்துக்

கிடக்கப் போகிறாய்

 

ஒரு வீரன் தான்

என்னுடைய சீடனாக

இருக்க முடியும்

ஒரு கோழை

என்னுடைய சீடனாக

இருக்க முடியாது

 

பீஷ்மா

நீ என்னுடைய

சீடனாக

இருப்பதற்கு

தகுதியற்றவன்

 

உயர்ந்த கலைகளை

தகுதியற்ற சீடனுக்கு

கற்றுக் கொடுத்தால்

ஒரு குருவுக்கு

எத்தகைய அவமானம்

ஏற்படும் என்பதை

இந்த பரசுராமரைப்

பார்த்து

இந்த உலகம்

தெரிந்து

கொள்ளட்டும்

 

பணம் பதவி

அதிகாரம் புகழ்

ஆகியவற்றுக்கு

ஆசைப்பட்டு

உயர்ந்த கலைகளைக்

கற்றுக் கொள்ளும்

தகுதியில்லாத சீடன்

எத்தகைய

செயல்களைச்

செய்வான் என்பதை

பீஷ்மா

உன்னைப் பார்த்து

இந்த உலகம்

தெரிந்து கொள்ளட்டும்

 

உயர்ந்த கலைகளை

தகுதியற்ற

சீடனான உனக்கு

கற்றுக் கொடுத்து

உயர்ந்த கலைகள்

களங்கப் படுவதற்கு

நான் காரணமாகி

விட்டேன்

நீக்க முடியாத

பாவத்தைச்

செய்தவனாகி

விட்டேன்

பாவம் என்னைச்

சூழ்ந்துள்ளது

 

பாவத்தை நீக்கும்

மிகப் பெரிய

பொறுப்பு எனக்கு

இருப்பதால்

காட்டிற்கு சென்று

தவம் செய்ய

தீர்மானித்து விட்டேன்

 

இனி நான்

ஆயுதம் எடுத்து

எந்த ஒரு

போரையும் நான்

செய்ய மாட்டேன்

இதுவே எனது

இறுதிப் போர்

 

நான் காட்டிற்கு

செல்கிறேன்

 

(என்று

சொல்லிக் கொண்டே

பரசுராமர்

தன்னுடைய

ஆயுதங்களைக்

கீழே போட்டு விட்டு

தவ வாழ்க்கை

மேற்கொள்வதற்காக

காட்டை நோக்கி

செல்லத்

தொடங்கும் போது

அம்பை அவர்

எதிரே வந்து

நிற்கிறாள்

தன் முன்னால்

வந்து நின்ற

அம்பையைப்

பார்த்து

பரசுராமர் பேசத்

தொடங்குகிறார்)

 

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------20-05-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment