ஜபம்-பதிவு-759
(சாவேயில்லாத
சிகண்டி-93)
பரசுராமர் :
அம்பையே
நான்
தோற்று விட்டேன்
உனக்குக் கொடுத்த
வாக்கை என்னால்
காப்பாற்ற
முடியவில்லை
அம்பை :
பரசுராமரே
தோற்றது
நீங்கள் கிடையாது
தோற்றது அந்த
பீஷ்மன் தான்
தவறு செய்தவன்
உங்கள் சீடன்
பீஷ்மன்
என்று தெரிந்தும்
பீஷ்மனைப் போரில்
கொல்வதற்காக
எப்போது ஆயுதம்
எடுத்தீர்களோ
அப்போதே
நீங்கள் வெற்றி
பெற்று வீட்டீர்கள்
பீஷ்மன்
உங்களை வீரத்தால்
வெற்றி பெற
நினைக்கவில்லை
சூழ்ச்சி செய்து
உங்களை
கோழைத் தனமாக
வெற்றி பெற
நினைத்தான்
சூழ்ச்சி செய்து
உங்களை வீழ்த்தி
வெற்றி பெற
நினைத்த கோழை
பீஷ்மனுடன்
இனி போரிட
மாட்டேன் என்று
ஆயுதங்களை
கீழே வைத்து விட்டு
போரிலிருந்து
விலகியதால்
நீங்கள் தோற்று
விட்டீர்கள் என்று
எப்படி
சொல்ல முடியும்
சூழ்ச்சியால்
உங்களை
வீழ்த்த நினைத்த
அந்த பீஷ்மன்
தான் தோற்றான்
வெற்றி
பெறுவதற்காகவே
பிறந்தவர் நீங்கள்
உங்களை
வீழ்த்துவதற்கு
இந்த உலகத்தில்
யாரும்
பிறக்கவுமில்லை
இனி பிறக்கப்
போவதும் இல்லை
உங்களுக்கு
நிகரானவர்கள்
இந்த உலகத்தில்
யாரும் கிடையாது
எனக்குக் கொடுத்த
வாக்கிற்காகக்
கடைசி வரை
போரிட்டீர்கள்
எனக்கு ஏற்பட்ட
அவமானத்தைத்
துடைப்பதற்காகப்
போரிட்டீர்கள்
என்னை வாழ
வைப்பதற்காகப்
போரிட்டீர்கள்
நியாயத்திற்காகப்
போரிட்டீர்கள்
தவறு செய்தவன்
உங்கள் சீடன்
என்று தெரிந்தும்
அவனைக்
கொல்வேன் என்று
உறுதியுடன்
போரிட்டீர்கள்
நீங்கள் செய்த
இந்த
செயல்களே நீங்கள்
அனைவரையும்
விட உயர்ந்தவர்
என்பதைக்
காட்டி விட்டது
பீஷ்மனை
உங்களால் கொல்ல
முடியாததற்குக்
காரணம்
உங்கள் கைகளால்
பீஷ்மன் சாகக்கூடாது
என்று காலம்
எழுதி வைத்து
இருக்கலாம்
காலம் தன்னுடைய
தீர்ப்பை
வழங்கும் போது
பீஷ்மன் யார்
கைகளில்
சாவான் என்பது
தெரிந்து விடும்
இந்த உலகத்தில்
பிறந்தவர்
இறந்தே ஆக
வேண்டும் என்பது
இயற்கை நியதி
இறப்பிலிருந்து
யாரும் தப்பிக்க
முடியாது
எவ்வளவு பெரிய
வரத்தைப்
பெற்றவர்களும்
இறந்திருக்கிறார்கள்
என்பது
அனைவரும்
அறிந்த உண்மை
இதற்கு பீஷ்மன்
ஒன்றும்
விதிவிலக்கல்ல
பீஷ்மன் யார்
கைகளில் சாவான்
எப்படி சாவான்
என்பதை
வருங்காலம்
நமக்கு உணர்த்தும்
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------20-05-2022
-------வெள்ளிக் கிழமை
///////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment