ஜபம்-பதிவு-756
(சாவேயில்லாத
சிகண்டி-90)
பூமியில் உள்ள
உயிரினங்கள் எப்படி
உயிருக்கு பயந்து
அங்கும் இங்கும்
ஓடினவோ
அதைப்போலவே
ஆகாயத்தில்
வசிப்பவர்களும்
ஆகாயத்தில்
வசிக்க முடியாமல்
அங்கிருந்து ஓடினர்
மனிதர்கள்
தேவர்கள் அசுரர்கள்
விலங்குகள் பறவைகள்
என்ற பாகுபாடு
இல்லாமல்
அனைத்து
உயிரினங்களும்
பிரம்மாஸ்திரத்தின்
சக்தியைத் தாங்க
முடியாமல்
கூக்குரலிட்டன
உலகத்திலேயே
சக்தி வாய்ந்த
அஸ்திரமாகக்
கருதப்படுவதும்
மிகப்பெரிய
அழிவைத்
தரக்கூடியதுமான
பிரம்மாஸ்திரத்தின்
சத்தியை
தாங்க முடியாமல்
அனைவரும் மிகுந்த
துன்பத்திற்கு
உள்ளாயினர்
இது தான்
சமயம் என்று
பீஷ்மர்
பிரஸ்வாபம்
அஸ்திரத்தை
பரசுராமர் மேல்
செலுத்த வேண்டும்
என்று
யோசித்த போது
அவருடைய
நினைவுக்கு
பிரஸ்வாபம்
அஸ்திரத்தை
வரவழைக்கும் மந்திரம்
செலுத்தும் மந்திரம்
திருப்பி
வரவழைக்கும் மந்திரம்
திருப்பி
அனுப்பும் மந்திரம்
ஆகிய அனைத்தும்
அவருக்கு
ஒன்றன் பின் ஒன்றாக
நினைவுக்கு
வர ஆரம்பித்தது
முதலில் பீஷ்மர்
வலது கையை
வலது பக்கம் நீட்டி
பிரஸ்வாபம்
அஸ்திரத்தை
வரவழைக்கும்
மந்திரத்தை
உச்சரித்த போது
பிரஸ்வாபம் அஸ்திரம்
பீஷ்மரின்
வலது கையில்
வந்து அமர்கிறது
இரண்டாவதாக
பிரஸ்வாபம் அஸ்திரத்தை
செலுத்தும்
மந்திரத்தை உச்சரித்து
பிரஸ்வாபம்
அஸ்திரத்தை
பரசுராமர் மேல்
செலுத்துகிறார்
பீஷ்மர்
தன்னை நோக்கி
வந்து கொண்டிருக்கும்
அஸ்திரத்தின்
தன்மை தெரியாத
காரணத்தினால்
அந்த அஸ்திரத்திற்கு
எதிர் அஸ்திரம்
செலுத்த முடியாமல்
யோசித்த நிலையில்
தன்னை நோக்கி
வந்து கொண்டிருக்கும்
அஸ்திரத்தையே
பார்த்தபடி
அமைதியாக நின்று
கொண்டிருந்தார்
பரசுராமர்
பீஷ்மர் செலுத்திய
பிரஸ்வாபம் அஸ்திரம்
பரசுராமரை நோக்கி
சென்று கொண்டிருந்த
சமயத்தில்
நாரதர் அந்த
இடத்தில்
தோன்றி
பீஷ்மரிடம் பேசத்
தொடங்கினார்
நாரதர் :
பீஷ்மா என்ன
காரியம் செய்யத்
துணிந்தாய்
பரசுராமரை வீழ்த்த
வேண்டும் என்றால்
அவரை
போர்க்களத்தில்
தூங்க வைக்க
வேண்டும் என்ற
தவறான
செயலைச் செய்யச்
சொன்னது யார்
நீ செய்யும்
இந்தச் செயல்
தவறான செயல்
என்று உனக்குத்
தெரியவில்லையா
தவறானவர்கள்
உன்னைத் தவறான
செயலைச்
செய்யச் சொல்லி
உன்னைத் தவறாக
வழி நடத்தி
இருக்கிறார்கள்
என்பதை
நீ புரிந்து
கொள்ளவில்லையா
நீ செய்யும்
இந்தத் தவறான
செயலால்
பரசுராமருக்கு
மட்டுமல்ல
உனக்கும் நீங்காத
அவப்பெயர் ஏற்படும்
என்பதை நீ
யோசிக்கவே இல்லையா
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------20-05-2022
-------வெள்ளிக் கிழமை
///////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment