ஜபம்-பதிவு-754
(சாவேயில்லாத
சிகண்டி-88)
வெற்றியை காலத்தின்
கைகளில்
ஒப்படைத்து
விடுவோம்
வெற்றி யார்
பெற வேண்டும்
என்று காலம்
விரும்புகிறதோ அவர்
வெற்றி பெறட்டும்
செல் ஆயுதங்களை
எடுத்துக் கொள்
உனக்கும் எனக்கும்
இடையே போர்
ஆரம்பித்து விட்டது
குருவுக்கும் சீடனுக்கும்
இடையே போர்
ஆரம்பித்து விட்டது
பரசுராமருக்கும்
பீஷ்மனுக்கும்
இடையே போர்
ஆரம்பித்து விட்டது
(பீஷ்மர் தேரில்
ஏறியவுடம்
இருவருக்கும் போர்
ஆரம்பித்து விட்டது
போரில்
சாதாரண அஸ்திரங்கள்
தெய்வீக அஸ்திரங்கள்
ஆகிய அனைத்தும்
பயன்படுத்தப்பட்டன
போரில் சில
சமயங்களில்
பரசுராமருக்கு காயம்
ஏற்பட்டது
இரத்தம் வழிந்தது
சில சமயங்களில்
பீஷ்மருக்கு
காயம் ஏற்பட்டு
இரத்தம் வழிந்தது
ஒரு கட்டத்தில்
பீஷ்மரின் தேரோட்டி
காயம் பட்டு இறந்து
விட்ட காரணத்தினால்
பீஷ்மனுக்கு
தேரோட்டியாக
அவருடைய தாய்
கங்காதேவியே
பீஷ்மருக்கு
தேரோட்டியாக
தேரில் அமர்ந்து
தேரை ஒட்டினார்
போர்
முடிவடையாமல்
நீண்டு கொண்டே
சென்றது
(22-ம் நாள் இரவு
பிராமணர்கள் பித்ருக்கள்
ராத்திரியில்
சஞ்சரிக்கும் பூதங்கள்
ராஜஸ்ரேஷ்டர்கள்
ஆகிய
அனைவரையும்
வணங்கிய பீஷ்மர்.
அவர்களிடம் வேண்டினார்)
பீஷ்மர் :
வீழ்த்த முடியாதவர்
என்று
இந்த உலகத்தால்
அழைக்கப்படும் பரசுராமரை
விழ்த்தும் வழி
தெரியாமல்
தவித்துக் கொண்டு
இருக்கிறேன்
இதனால் எனக்கும்
பரசுராமருக்கும் இடையே
நடைபெறும் போரானது
முடிவில்லாமல் நீண்டு
கொண்டே பொகிறது
போரை
முடிப்பதற்குரிய
வழி தெரியாமல்
தவித்துக் கொண்டு
இருக்கிறேன்
பரசுராமரை எப்படி
வீழ்த்த வேண்டும்
என்ற உபாயத்தை
இன்று எனக்கு
நீங்கள்
வெளிப்படுத்த வேண்டும்
(என்று வணங்கி
விட்டு பீஷ்மர்
தூக்கத்தில்
இருந்த போது
விடியற்காலையில்
வலப்பக்கமாக படுத்து
உறங்கிக் கொண்டு
இருந்தார்,
அப்போது
எட்டு பிராமணர்கள்
அவருடைய கனவில்
தோன்றி பேசத்
தொடங்கினர் )
எட்டு பிராமணர்கள் :
பீஷ்மா
கவலைப்படாதே
போரில் நீ தான்
வெற்றி பெறப்
போகிறாய்
பரசுராமரால்
உன்னைத்
தோற்கடிக்க முடீயாது
பிரம்மாவைத்
தேவதையாக உடையதும்
எல்லாவற்றையும்
சாதிக்கும் வல்லமை
படைத்ததுமான
பிரஸ்வாபம் என்ற
பெயர் கொண்ட
அஸ்திரம்
உனக்கு
மட்டுமே தெரியும்
அதனை எப்படி
பயன்படுத்த வேண்டும்
என்ற முறையும்
இந்த உலகத்தில்
உனக்கு மட்டுமே
தெரியும்
பரசுராமருக்கும்
இந்த உலகத்தில்
உள்ள
வேறு யாருக்கும்
இந்த அஸ்திரத்தைப்
பற்றித் தெரியாது
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------20-05-2022
-------வெள்ளிக் கிழமை
///////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment