August 08, 2022

ஜபம்-பதிவு-829 (சாவேயில்லாத சிகண்டி-163)

 ஜபம்-பதிவு-829

(சாவேயில்லாத

சிகண்டி-163)

 

அதனால் தான்

துச்சாதனனை

அனுப்பி

அவளை இழுத்து

வரச்சொன்னேன்

 

எஜமானன்

என்ற முறையில்

அடிமையான

திரௌபதியை

எப்படி நடத்த

வேண்டுமோ

அப்படித் தான்

நான் நடத்தினேன்

 

ஆனால்

அடிமையான

திரௌபதி

ஒரு எஜமானிடம்

எப்படி நடந்து

கொள்ள

வேண்டுமோ

அப்படி நடந்து

கொள்ளவில்லை

 

இந்த உலகம்

நான் திரௌபதியை

அவமானப் படுத்தியதாக

எடுத்துக் கொண்டது

அசிங்கப் படுத்தியதாக

எடுத்துக் கொண்டது

இழிவு படுத்தியதாக

எடுத்துக் கொண்டது

 

ஒரு எஜமான்

ஒரு அடிமையை

எப்படி நடத்த

வேண்டுமோ

அப்படித்

தான் நான்

திரௌபதியை

நடத்தினேன்

 

என் மீது எந்தத்

தவறும் இல்லை

 

ஒரு எஜமானிடம்

ஒரு அடிமை

எப்படி நடந்து

கொள்ள

வேண்டுமோ

அப்படி நடந்து

கொள்ளாத

திரௌபதி மீது

தான் தவறு

உள்ளது

 

கிருஷ்ணன் :

ஒரு பெண்ணை

அதுவும்

ஒரு மன்னனுக்கு

மகளாக

இருந்தவளை

மன்னனுக்கு

மனைவியாக

இருந்தவளை

உனக்கு

அண்ணியாக

இருப்பவளை

உன் தந்தைக்கு

மருமகளாக

இருப்பவளை

இப்படி

செய்யலாமா

நீ செய்தது

சரியா

 

துரியோதனன் :

நான் செய்தது

சரி தான்

நான் செய்ததில்

தவறேதும்

இல்லை

 

திரௌபதியின்

சுயம்வரத்தில்

திரௌபதியை

திருமணம்

செய்வதற்காக

நடைபெற்ற

போட்டியில்

கலந்து

கொள்வதற்காக

வந்திருந்த

56 நாட்டைச்

சேர்ந்த

மன்னர்கள்

கூடியிருந்த

அவையில்

பெருந்திரளான

மக்கள்

அமர்ந்திருந்த

அவையில்

ஒரு நாட்டின்

மன்னனை

உலகம் போற்றும்

சிறந்த வீரனை

என்னுடைய

நண்பன் கர்ணனை

கர்ணன் தாழ்ந்த

ஜாதியைச்

சேர்ந்தவன்

அவன் இந்த

போட்டியில்

கலந்து கொள்ள

தகுதியற்றவன்

அவனுக்கு நான்

மாலையிட

விரும்பவில்லை

தாழ்ந்த ஜாதியான

கர்ணனை

என்னுடைய

கணவாக ஏற்றுக்

கொள்ள மாட்டேன்

என்று அனைவர்

முன்னிலையிலும்

ஜாதி வெறி

கொண்டு

அவமானப்படுத்தினாள்

திரௌபதி

 

இந்திரப் பிரஸ்தத்தில்

தவறி தண்ணீரில்

விழுந்த என்னை

அதுவும்

அஸ்தினாபுரத்தின்

இளவரசனை

ஒரு விருந்தாளியை

எப்படி மதித்து

நடத்த வேண்டுமோ

அப்படி மதித்து

நடத்தாமல்

குருடன் மகன்

குருடன் என்று

ஆணவத்தில் சிரித்து

அவமானப்படுத்தினாள்

திரௌபதி

 

என்னுடைய

நண்பனான

கர்ணனையும்

என்னையும்

அவமானப்படுத்திய

திரௌபதியை

எனக்கு

அடிமையான போது

அவமானப்படுத்தினேன்

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----05-08-2022

-----வெள்ளிக் கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment