August 08, 2022

ஜபம்-பதிவு-830 (சாவேயில்லாத சிகண்டி-164)

 ஜபம்-பதிவு-830

(சாவேயில்லாத

சிகண்டி-164)

 

தவறு

செய்தவர்கள்

தவறுக்குரிய

தண்டனையை

அனுபவித்துத்

தான் ஆக

வேண்டும்

அதைத் தான்

திரெளபதி அன்று

அனுபவித்தாள்

 

திரௌபதி செய்த

தவறுக்குரிய

தண்டனையை

அன்று

அஸ்தினாபுரத்தின்

அவையில்

பெற்றுக் கொண்டாள்

 

நான் செய்த

செயலில்

எந்தத் தவறும்

இல்லை சரியாகத்

தான் செய்தேன்

 

கிருஷ்ணன் :

உலகம்

சொல்கிறது

நீ செய்தது

தவறு என்று

 

துரியோதனன் :

உன்னைப்

போன்ற

சுயநலவாதிகளும்

யோசிக்கும்

திறமை

இல்லாதவர்களும்

என்னை எதிரியாக

நினைப்பவர்களும்

என் மேல்

காழ்ப்புணர்ச்சி

கொண்டவர்களும்

என்னைப் பார்த்து

பொறுமைப்

படுபவர்களும்

என்னுடைய

வளர்ச்சியை

விரும்பாதவர்களும்

தான் நான்

செய்த செயல்

தவறு என்கின்றனர்

 

என்னைப் புரிந்து

கொண்டவர்கள்

நான் செய்த

செயலை

சரி என்றே

சொல்கின்றனர்

 

கிருஷ்ணன் :

எப்படி சொல்கிறாய்

 

துரியோதனன் :

திரௌபதிக்கு

அவமானம்

நடந்ததாக

சொல்லப்படும்

நிகழ்ச்சி

நடந்தபோது

அந்த அவையில்

பீஷ்மர் துரோணர்

விதுரர் கிருபர்

போன்றவர்களும்

அறிவிற்

சிறந்தவர்கள்,

நீதிமான்கள்

என்று பலரும்

அந்த அவையில்

தானே இருந்தனர்

 

அவர்கள்

அமைதியாகத்

தானே

இருந்தனர்

 

கிருஷ்ணன் :

இல்லை நீ

செய்த செயலை

எதிர்த்துக்

கொண்டு தான்

இருந்தனர்

 

துரியோதனன் :

இல்லை

 

அவர்கள்

திரௌபதியை

அவமானப்படுத்த

வேண்டாம்

என்று தான்

சொன்னார்களே

தவிர நான் செய்தது

தவறு என்று

சொல்லவில்லையே

 

ஏனென்றால்

ஒரு எஜமான்

ஒரு அடிமையை

எப்படி நடத்த

வேண்டுமோ

அப்படித் தான்

நான் நடத்தினேன்

 

ஒரு அடிமையை

எப்படி

அவமானப்படுத்த

வேண்டுமோ

அப்படித் தான்

அவமானப்படுத்தினேன்

 

ஒரு அடிமையை

எப்படி இழிவு

படுத்த வேண்டுமோ

அப்படித் தான்

இழிவு படுத்தினேன்

 

நான் செய்த

செயல்

சரியானது தான்

என்று தெரிந்த

காரணத்தினால்

தான்

ஒரு எஜமான்

ஒரு அடிமையை

எப்படி நடத்த

வேண்டுமோ

அப்படி நடத்திய

காரணத்தினால்

தான்

அவர்கள்

அனைவரும்

திரௌபதியை

அவமானப்படுத்த

வேண்டாம் என்று

கோரிக்கை தான்

வைத்தார்களே

தவிர நான்

செய்ததை

தவறு என்று

சொல்லவில்லையே

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----05-08-2022

-----வெள்ளிக் கிழமை

 

//////////////////////////////////////////////

No comments:

Post a Comment