ஜபம்-பதிவு-833
(சாவேயில்லாத
சிகண்டி-167)
திருதராஷ்டிரன் :
விதுரா
நிதானத்தை இழக்காதே
பொறுமையுடன்
நடந்து கொள்
பொறுமைக்கு
இலக்கணமாகத்
திகழ்பவன் நீ
அமைதிக்கு
உதாரணமாக
இருப்பவன் நீ
சாந்த
சொரூபமாக
வாழ்பவன் நீ
துரியோதனனுடன்
சண்டையிடாதே
அமைதியாக இரு
கோபத்தை விடு
நிதானமாக நட
கிருஷ்ணன் :
தன்னுடைய
தாயை இழந்தவர்கள்
யாராக இருந்தாலும்
எதிர்ப்பது என்பது
உண்மை தானே
அதைத் தானே
விதுரரும் செய்தார்
தன் தாயை
இகழ்ந்தவனை
சண்டைக்கு இழுத்தார்
சொல்ல முயன்றார்
அதில் தப்பில்லையே
விதுரருடன்
சண்டையிட்டால்
துரியோதனன் இறந்து
விடுவான் என்று
நினைக்கிறீர்களா
பயப்படுகிறீர்களா
திருதராஷ்டிரன் :
நான் ஏன்
பயப்பட வேண்டும்
கிருஷ்ணன் :
ஏனென்றால்
விதுரரின் வில்
உலகை அழிக்கும்
வல்லமை உடையது
அந்த வில்லின் முன்
துரியோதனன்
ஒன்றும் இல்லை
விதுரரை எதிர்த்து
துரியோதனன்
சண்டையிட்டால்
துரியோதனன் இறந்து
விடுவான் என்ற
காரணத்தினால் தானே
விதுரரை
சமாதானப்படுத்தினீர்
விதுரர் :
ஆமாம்
என்னுடைய வில்
உலகை அழிக்கக்
கூடியது
என்னுடன் சரிசமமாக
போரிடத் தகுதியற்றவன்
துரியோதனன்
என்னுடைய வில்லுக்கு
பதில் சொல்ல
முடியாதவர்கள்
இந்த உலகத்தில்
யாரும் இல்லாத போது
துரியோதனனுடன்
சண்டையிட்டு
என்னுடைய தகுதியை
நான் குறைத்துக்
கொள்ள
விரும்பவில்லை
உலகத்தை அழிக்கும்
இந்த வில்லை
துரியோதனனுக்கு
எதிராகவும்
பயன்படுத்த மாட்டேன்
அவனுக்கு ஆதரவாகவும்
பயன்படுத்த மாட்டேன்
இந்த வில் என்
கையில் இருந்தால்
தானே நான்
சாப்பிட்ட சாப்பாட்டுக்கு
உனக்கு நன்றிக்
கடனாக போரிட
கூடிய நிலை ஏற்படும்
அந்த நிலை எனக்கு
ஏற்படாமல் இருக்க
வேண்டுமானால்
இந்த வில் என்
கையில்
இருக்கக் கூடாது
இந்த வில்
என்னுடைய கையில்
இல்லை என்றால்
உனக்கு ஆதரவாக
நான் போரிட
வேண்டிய அவசியம்
இல்லை
என்று சொல்லி
வில்லை உடைத்து
போட்டு சென்று விட்டார்
கிருஷ்ணன் :
விதுரர் வைத்திருந்த வில்
விஷ்ணுவின் வில்
கோதண்டம் எனப்படும்
அந்த வில்லை எவராலும்
வெல்ல முடியாது.
அர்ஜுனன் கையில்
உள்ள வில்
பிரம்மாவுடையது
காண்டீபம் என்பது
அதற்குப் பெயர்
விதுரர் கோதண்டத்துடன்
வந்து நின்று
போரிட்டால்
அர்ஜுனனால் கூட தன்
வில்லான காண்டீபம்
கொண்டு கொண்டு
அவரை வெல்ல முடியாது
இத்தகைய சிறப்பு
வாய்ந்த வில்லை
வைத்திருந்த
விதுரரின் துணையை
இழந்துவிட்டாய்
மிகப்பெரிய பலம்
உன்னை விட்டு
சென்று விட்டது
இது உனக்கு பெரிய
இழப்பு தானே
துரியோதனா
துரியோதனன் :
நான் அப்படி
நினைக்கவில்லை
கிருஷ்ணன் :
ஏன் நினைக்கவில்லை
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----05-08-2022
-----வெள்ளிக் கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment