August 08, 2022

ஜபம்-பதிவு-822 (சாவேயில்லாத சிகண்டி-156)

 ஜபம்-பதிவு-822

(சாவேயில்லாத

சிகண்டி-156)

 

 (அஸ்தினாபுரத்தின்

அவையில்

திருதராஷ்டிரன்

பீஷ்மர் துரோணர்

விதுரர் கிருபர்

அஸ்வத்தாமன்

கர்ணன் உட்ப்ட

பலர் அமர்ந்து

இருக்கின்றனர்.

அப்போது

கிருஷ்ணன்

பேசத்

தொடங்குகிறார்.)

 

கிருஷ்ணன் :

சிகண்டியும்

இங்கே தான்

அமர்ந்திருக்கிறார்

போலிருக்கிறதே

 

துரியோதனன் :

துரியோதனன்

இருக்கும்

இடத்தில்

ஆண் பெண்

மாற்றுப்

பாலினத்தவர்

என்ற வேறுபாடு

எல்லாம்

கிடையாது

அனைவரும்

சமம்

 

பீஷ்மர்

சிலர் எதற்காக

அமர்ந்திருக்கிறோம்

என்ற காரணம்

கூட தெரியாமல்

அமர்ந்திருக்கின்றனர்

 

சிகண்டி :

இங்கே அமர்ந்திருக்கும்

அனைவருமே

காரணம் தெரிந்து தான்

அமர்ந்திருக்கிறார்களா

பீஷ்மர் அவர்களே

 

திருதராஷ்டிரன் :

இந்த அவை எதற்காகக்

கூட்டப்பட்டிருக்கிறதோ

அதைப்பற்றி மட்டும்

பேசுங்கள்

 

விதுரர் :

கிருஷ்ணனுக்கு

உரிய அரசு

மரியாதை

வழங்க

வேண்டும்

 

துரியோதனன் :

கிருஷ்ணனுக்கு

உரியஅரசு

மரியாதை அவர்

அஸ்தினாபுரத்துக்குள்

நுழைந்த போதே

அஸ்தினாபுரத்தால்

அவருக்கு

வழங்கப்பட்டது

 

அஸ்தினாபுரத்தால்

வழங்கப்பட்ட

அரசு மரியாதையின்

மதிப்பு தெரியாமல்

அஸ்தினாபுரத்தால்

வழங்கப்பட்ட

அரசு மரியாதையை 

ஏற்க அவர்

மறுத்து விட்டார்

 

என்னை

இழிவுபடுத்துவதாக

நினைத்துக் கொண்டு

அஸ்தினாபுரத்தை

இழிவு படுத்தினார்

 

அஸ்தினாபுரத்தின்

பெருமையை

இழிவு படுத்தினார்

 

அஸ்தினாபுரத்தின்

பாராம்பரியத்தை

இழிவு படுத்தினார்

 

அஸ்தினாபுரத்தின்

வீரமிக்க

வரலாற்றை

இழிவு படுத்தினார்

 

அஸ்தினாபுரத்தை

இழிவு

படுத்தியவருக்கு

 

அஸ்தினாபுரத்தின்

அரசு மரியாதையை

ஏற்க

மறுத்து விட்டவருக்கு

 

அஸ்தினாபுரத்தின்

அரசு மரியாதையை

உதாசீனப் படுத்தியவருக்கு

 

அஸ்தினாபுரத்தை

அவமதிக்கும் வகையில்

நடந்து கொண்டவருக்கு

 

அஸ்தினாபுரத்தால்

வழங்கப்பட்ட

அரசு மரியாதையை

புறக்கணித்தவருக்கு

 

மீண்டும் எப்படி

அரசு மரியாதை

வழங்க முடியும்

 

வேண்டும்

என்றால்

நீங்கள்

மரியாதை

கொடுங்கள்

 

நீங்கள் தான்

ஏற்கனவே

கிருஷ்ணனுக்கு

மரியாதை

கொடுத்தவர்

தானே

 

 

அவரை

உங்கள் வீட்டிற்கு

அழைத்து வந்து

தங்க வைத்து

உபசரித்தவர்

தானே

 

சாப்பாடு போட்டு

பசியாற்றியவர்

தானே

 

உறவு கொண்டாடி

மகிழ்ந்தவர் தானே

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----05-08-2022

-----வெள்ளிக் கிழமை

 

//////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment