ஜபம்-பதிவு-834
(சாவேயில்லாத
சிகண்டி-168)
துரியோதனன் :
நான் அவர் தாயை
இகழாவிட்டாலும் அவர்
எனக்காக போர்
செய்து இருக்க மாட்டார்
கிருஷ்ணன் :
ஏன் அவ்வாறு சொல்கிறாய்
துரியோதனன் :
அவர் எனக்காக
போரிடாமல்
இருப்பதற்காக சந்தர்ப்பம்
பார்த்துக் கொண்டு
இருந்தார்
கிடைத்தது
பயன்படுத்திக் கொண்டார்
நாடகமாடி விட்டு
சென்று விட்டார்
திரௌபதி நிகழ்த்திய
நாடகம் போலவே
இவரும் நாடகத்தை
நடத்தி விட்டு
திறம்பட நடத்தி விட்டு
சென்று விட்டார்
கிருஷ்ணன் :
ஏன் அவ்வாறு
சொல்கிறாய்
துரியோதனன் :
திருதராஷ்டிரன்
பாண்டு விதுரர்
மூவருக்கும்
தந்தை ஒன்று
தாய் மூன்று பேர்
ஆனால்
அஸ்தினாபுரத்தின்
அரியணைக்கு
போட்டியிடும்
உரிமையும்
அஸ்தினாபுரத்தை
ஆளும் உரிமையும்
திருதராஷ்டிரனுக்கும்
பாண்டுவுக்கும் மட்டுமே
கொடுக்கப்பட்டு
இருந்தது
விதுரருக்கு
கொடுக்கப்படவில்லை
ஏனென்றால்
திருதராஷ்டிரனும்
பாண்டுவும்
ராஜகுமாரிகளுக்குப்
பிறந்தவர்கள்
ஆனால்
விதுரனோ
வேலைக்காரிக்குப்
பிறந்தவர்
தாழ்ந்த ஜாதிக்குப்
பிறந்தவர்
வைசியகுல
பெண்ணுக்குப்
பிறந்தவர்
திருதராஷ்டிரனையும்
பாண்டுவையும்
அஸ்தினாபுரத்தின்
அரசராக ஏற்றுக்
கொண்ட உலகம்
விதுரரை அரசராக
ஏற்றுக் கொள்ளவில்லை
அவரையும் அவருடைய
தாயாரையும் ஷத்திரியர்கள்
ஒதுக்கியே
வைத்திருந்தனர்
அரச வம்சத்தில்
விதுரருக்குரிய
மரியாதையும்
அவருடைய
தாயாருக்குரிய
மரியாதையும்
இருவருக்கும்
கிடைக்கவேயில்லை
அவர்கள் இருவருக்கும்
கிடைத்தது வாழ்க்கையில்
அவமானம் மட்டுமே
தங்களுக்கு நேர்ந்த
கொடுமைகளுக்கும்
அவமானத்திற்கும்
இழிவான
செயல்களுக்கும்
பழி தீர்ப்பதற்காக
நேரம் பார்த்துக்
கொண்டே இருந்தார்
விதுரர்
ஷத்திரியர்களின்
அவமானத்தால்
பாதிக்கப்பட்ட அவர்
ஷத்திரியர்களுக்கு
ஆதரவாக போரிட
விரும்பவில்லை
ஷத்திரியர்களை
பழிவாங்குவதற்கான
சந்தர்ப்பத்திற்காகக்
காத்துக் கொண்டே
இருந்தார்
நான் அவரைப் பற்றி
சொன்ன வார்த்தைகளை
தனக்கு சாதகமாகப்
பயன்படுத்திக் கொண்டார்
வில்லை ஒடித்தார்
ஷத்திரியர்களுக்கு
ஆதரவாகப் போரிட
மாட்டேன் என்றார்
சென்று விட்டார்
தனக்கு கிடைத்த
சந்தர்ப்பத்தை
போர் நடக்கப்போகும்
இந்த சமயத்தில்
சரியாகப்
பயன்படுத்திக்
கொண்டார்
அவர்
வில்லை ஒடித்தது
நான் சொன்ன
வார்த்தைக்காக அல்ல
ஷத்திரியர்களுக்கு
ஆதரவாக
தன்னுடைய வில்லை
பயன்படுத்தக் கூடாது
என்பதற்காகத் தான்
ஷத்திரியர்களுக்கு
ஆதரவாக
போரிடக் கூடாது
என்பதற்காகத் தான்
அவர் கையில்
வில் இருந்தால்
ஷத்திரியர்களுக்கு
ஆதரவாக போரிட
வேண்டிய நிலை வரும்
வில்லை ஒடித்து
விட்டால் ஷத்திரியர்களுக்கு
ஆதரவாக போரிட
வேண்டிய நிலை
வராது என்ற
காரணத்திற்காகத் தான்
நன்றாக நாடகமாடி விட்டு
தன்னுடைய
வில்லை ஒடித்து
விட்டுச் சென்று விட்டார்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----05-08-2022
-----வெள்ளிக் கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment