August 08, 2022

ஜபம்-பதிவு-825 (சாவேயில்லாத சிகண்டி-159)

 ஜபம்-பதிவு-825

(சாவேயில்லாத

சிகண்டி-159)

 

விதுரர் :

சோதிடத்தில்

வல்லவனான

சகாதேவன்

கணித்துப்

பார்த்து

ஒரு வருடம்

அஞ்ஞாத வாசம்

முடிவடைந்து

விட்டது

என்று சொல்லிய

பிறகே

வீராட நாட்டில்

அர்ச்சுனன்

வெளிப்பட்டான்

 

கிருபர் :

வீராட தேசத்தில்

அர்ச்சுனன்

வெளிப்பட்ட

நேரத்தைக்

குறித்துக் கொண்டு

கணக்கீடு செய்து

பார்த்ததில்

ஒரு வருடம்

அஞ்ஞாத வாசம்

முடிந்த பிறகே

அர்ச்சுனன்

வெளிப்பட்டான்

என்று காலக்கணக்கு

தெள்ளத் தெளிவாகச்

சொல்கிறது

 

துரியோதனன் :

அந்த அடிமைகள்

செய்த தவறை

தவறில்லை

என்று

சொல்வதற்கு

பீஷ்மர் துரோணர்

விதுரர் கிருபர்

என்று பொய்யை

உண்மையாக்க

வருகிறீர்களே

 

இதே தவறை

இந்தத் துரியோதனன்

செய்து இருந்தால்

நீங்கள் அனைவரும்

இவ்வாறு பேசுவீர்களா

 

துரோணர் :

துரியோதனா

ஆள் பார்த்து

பேசுபவர்கள்

நாங்கள் அல்ல

நடந்த நிகழ்வை

வைத்துப் பேசுகிறோம்

காலக் கணக்கை

வைத்துக் கொண்டு

பேசுகிறோம்

 

நாங்கள்

சொல்வதை

நீ ஏற்றுக்

கொள்ள

மாட்டாயா

 

துரியோதனன் :

நீங்கள்

அனைவரும்

சொல்வது

ஏற்றுக்

கொள்ளும்

நிலையில்

இல்லையே

குருதேவா

 

கிருபர் :

ஏன் ஏற்றுக்

கொள்ளும்படியாக

இல்லை

 

துரியோதனன் :

நீங்கள் அனைவரும்

அந்த அடிமைகளை

காப்பாற்ற முயற்சி

செய்து

கொண்டிருக்கிறீர்கள்

 

அந்த அடிமைகள்

மீண்டும்

12 வருடங்கள்

காட்டிற்கும்

ஒரு வருடம்

அஞ்ஞாத

வாசத்திற்கும்

சென்று

விடக்கூடாது

என்பதற்காக

வாதிட்டுக்

கொண்டு

இருக்கிறீர்கள்

 

அவர்கள் மேல்

உள்ள பாசத்தால்

அவர்களை

காப்பாற்ற

போராடிக்

கொண்டிருக்கிறீர்கள்

 

நடந்த நிகழ்வானது

சரியானது என்று

நிரூபிக்க

முயற்சி செய்து

கொண்டிருக்கிறீர்கள்

 

காலக்கணக்கை

உங்களுக்கு

ஏற்றவாறு

மாற்றி

அமைத்துக்

கொண்டிருக்கிறீர்கள்

 

அவர்களை

காப்பாற்ற

வேண்டும்

என்ற

காரணத்தால்

உண்மையாக

நடந்து

கொள்ள

மறுத்துக்

கொண்டிருக்கிறீர்கள்

 

நியாயத்தை

பேச

மறுக்கின்றீர்கள்

 

நீதியை

சாகடிக்க

முயன்று

கொண்டிருக்கிறீர்கள்

 

திருதராஷ்டிரன் :

துரியோதனா

பெரியவர்கள்

சொல்வதைக்

கேள்

 

அவர்களுடைய

வார்த்தைக்கு

மரியாதை கொடு

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----05-08-2022

-----வெள்ளிக் கிழமை

 

//////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment