ஜபம்-பதிவு-823
(சாவேயில்லாத
சிகண்டி-157)
கிருஷ்ணன் :
துரியோதனா
விதுரரை
குறை
சொல்லாதே
அவர்
அழைத்து
நான்
செல்லவில்லை
நானே
தான் அவர்
வீட்டிற்கு
சென்றேன்
அவர் மீது
எந்தத்
தவறும்
இல்லை
தவறு
செய்யாத
விதுரர் மீது
ஏன்
கோபப்படுகிறாய்
நான் வந்ததின்
நோக்கத்தினை
அறிந்ததால்
தான் அவர்
என்னை
உபசரித்தார்
துரியோதனன் :
நீ வந்ததின்
நோக்கம்
என்னுடைய
சித்தப்பாவிற்கு
தெரிந்திருக்கிறது
எங்களுக்குத்
தெரியவில்லை
கிருஷ்ணன் :
நான்
சமாதானத்தை
நிலைநாட்ட
தூதுவனாக
வந்திருக்கிறேன்
கர்ணன் :
சமாதானத்தை
நிலைநாட்ட
வேண்டிய
அவசியம்
இப்போது
ஏன் ஏற்பட்டது
கிருஷ்ணன் :
போர் நடக்காமல்
இருக்க வேண்டும்
என்பதற்காக
கர்ணன் :
போர் நடக்கப்
போகிறதா என்ன
கிருஷ்ணன் :
போரை நீங்கள்
உருவாக்கி
விடக்கூடாது
அல்லவா
அதற்காகத் தான்
கர்ணன் :
போரை
நாங்கள் தான்
உருவாக்குவோம்
என்கிறீர்களா
கிருஷ்ணன் :
பாண்டவர்களுக்குரிய
பங்கை
திருப்பித்
தராவிட்டால்
போர் நடந்து
தானே ஆக
வேண்டும்
அப்படி என்றால்
போரை
நீங்கள் தானே
உருவாக்கியதாக
அர்த்தம்
துரியோதனன் :
பாண்டவர்களுக்குரிய
பங்கு எது
கிருஷ்ணன் :
இந்திரப்பிரஸ்தம்
துரியோதனன் :
அது அஸ்தினாபுரம்
போட்ட பிச்சை
கிருஷ்ணன் :
இல்லை
சமாமாகப்
பிரிக்கப்பட்டது
துரியோதனன் :
பிச்சைப் பொருளை
அஸ்தினாபுரத்தை
பத்திரமாக வைத்து
பாதுகாக்கத் தெரியாத
சூதாடி யுதிஷ்டிரன்
அதை சூதாடி
தோற்றான்
கிருஷ்ணன் :
இல்லை
சூது செய்து
தோற்கடித்தார்கள்
துரியோதனன் :
யாரும் சூது
செய்யவில்லை
இதைத் தான்
பணயமாக
வைத்து சூதாட
வேண்டும் என்று
யாரும்
சொல்லவும்
இல்லை
வற்புறுத்தவும்
இல்லை
சூதாடியான
யுதிஷ்டிரனே
சூதாட்டத்தில்
நாட்டை
வைத்தான்
தம்பிகளை
வைத்தான்
மனைவியை
வைத்தான்
தோற்றான்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----05-08-2022
-----வெள்ளிக் கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment