ஜபம்-பதிவு-827
(சாவேயில்லாத
சிகண்டி-161)
இவர்கள்
ஐவரும்
வெவ்வேறு
ஆண்களுக்குப்
பிறந்தவர்கள்
பாண்டுவுக்குப்
பிறக்காத
இவர்களை
எப்படி
பாண்டவர்கள்
என்று
சொல்ல
முடியும்
குந்திக்கும்
மாத்ரிக்கும்
பிறந்தவர்கள்
என்று தானே
சொல்ல
வேண்டும்
என்பதை நான்
சொல்லவில்லை
இந்த உலகமே
சொல்கிறது
அது மட்டுமல்ல
தனக்கு போட்டியாக
மாத்ரி வந்து
விடக்கூடாது
என்பதற்காக
மாத்ரியை
உயிரோடு
நெருப்பில்
எரித்து கொன்று
விட்டார் குந்தி
என்று நான்
சொல்லவில்லை
இந்த உலகமே
சொல்கிறது
இந்த உலகம்
சொல்வது
தவறு என்றால்
இந்த உலகம்
சொல்வது
தவறு என்று
சொல்வதற்கு
குந்தி இந்த
அவைக்கு
வர வேண்டும்
சத்தியம்
உரைப்பதற்கு
குந்தி இந்த
அவைக்கு வர
வேண்டும்
யுதிஷ்டிரன், பீமன்,
அர்ஜுனன், நகுலன்,
சகாதேவன் ஆகிய
ஐந்து பேரும்
பாண்டுவுக்குத் தான்
பிறந்தார்கள் என்று
சொல்ல வேண்டும்
மாத்ரியை தான்
உயிரோடு
நெருப்பில் எரித்து
கொல்லவில்லை
என்று சொல்ல
வேண்டும்
இந்த உலகம்
சொல்வது
அனைத்தும்
பொய்
என்றும்
சத்தியம்
உரைக்க
வேண்டும்
அப்படி
அவர் இந்த
அவைக்கு வந்து
சத்தியம் உரைத்தால்
இந்திரப்பிரஸ்தம்
மட்டுமில்லை
அஸ்தினாபுரத்தையே
நான் தருகிறேன்
கிருஷ்ணன் :
குந்தியைப் பற்றி
இந்த உலகம்
சொல்வது
அனைத்தும்
பொய்
துரியோதனன் :
துரியோதனனை
கெட்டவன் என்று
இந்த உலகம்
சொன்னால்
இந்த உலகம்
சரியாகத் தான்
சொல்கிறது
என்கிறாய்
குந்தியைக்
கெட்டவள் என்று
இந்த உலகம்
சொன்னால்
இந்த உலகம்
தவறாகச்
சொல்கிறது
என்கிறாய்
உனக்கு
பிடித்தவர்
என்றால்
அவர்
செய்தது
தவறாக
இருந்தாலும்
சரியானது
என்பாய்
உனக்குப்
பிடிக்காதவராக
இருந்தால்
அவர் செய்தது
சரியாக
இருந்தாலும்
தவறானது
என்பாய்
ஆளைப்
பார்த்துத் தான்
சரியானது
தவறானது
என்று
சொல்வாய்
ஒருவர் செய்த
செயலைப் பார்த்து
சொல்ல மாட்டாய்
அப்படி தானே
இது தானே
உன்னுடைய
குணம்
கிருஷ்ணா
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----05-08-2022
-----வெள்ளிக் கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment