ஜபம்-பதிவு-831
(சாவேயில்லாத
சிகண்டி-165)
கிருஷ்ணன் :
தவறான
உன்னுடைய செயலை
நீ நியாயப்படுத்துவதால்
நீ செய்தது சரி
என்று ஆகிவிடுமா
சகுனி
உன்னை ரொம்ப
கெடுத்து
வைத்திருக்கிறான்
சகுனியின்
பேச்சைக் கேட்டு
நீ ரொம்பத்
தான் கெட்டுப்
போய் இருக்கிறாய்
அதனால் தான்
நீ செய்த செயலை
சரி என்று சொல்லி
நியாயப்படுத்திக்
கொண்டிருக்கிறாய்
துரியோதனன் :
என் மாமா
சகுனியின்
பெயரைச்
சொல்ல உனக்கு
அருகதை இல்லை
கிருஷ்ணா
சகுனி என்ற
பெயரைச்
சொல்லவும்
ஒரு தகுதி
வேண்டும்
அந்தத் தகுதி
உனக்கு இல்லை
என்னுடைய
மாமாவின் அருகில்
நிற்பதற்குக் கூட
நீ அருகதை
இல்லாதவன்
எவ்வளவு பெரிய
அறிவாளி அவர்
எவ்வளவு பெரிய
ராஜ தந்திரி அவர்
எவ்வளவு பெரிய
திறமைசாலி அவர்
சகல கலைகளையும்
கற்றறிந்தவர் அவர்
அனைத்து
போர்த்தந்திரங்களும்
தெரிந்தவர் அவர்
உலகில்
என்னுடைய
மாமாவைப்
போல் யாரும்
கிடையாது
கிருஷ்ணன் :
ஒரு கெட்டவன்
இன்னொரு
கெட்டவனை
நல்லவன் என்று
சொல்வது
வேடிக்கையாக
இருக்கிறது
துரியோதனன் :
ஆமாம் உனக்கு
வேடிக்கையாகத்
தான் இருக்கும்
என்னுடைய
மாமா சகுனி
தன்னுடைய
மனைவி
பிள்ளைகள்
ஆகிய
அனைவரையும்
காந்தாரத்திலேயே
விட்டு விட்டு
அஸ்தினாபுரம்
வந்தவர்
துரோகத்தால்
வஞ்சிக்கப்பட்ட
கண்ணிழந்த
என்னுடைய
தந்தை
திருதராஷ்டிரருக்காகவும்
இந்த உலகத்தைக்
காணக்கூடாது
என்பதற்காக
கண்களைக் கட்டிக்
கொண்டு இருப்பவரும்
கணவனுக்காகவே
தன்னை
அர்ப்பணித்தவரும்
அமைதியின்
திருவுருவமாக
திகழ்ந்து
கொண்டிருப்பவரும்
பத்தினி தெய்வத்திற்கு
உதாராணமாக
விளங்கிக்
கொண்டிருப்பவரும்
குந்தியைப் போல்
இல்லாமல்
கணவனே தெய்வமென
வாழ்ந்து
கொண்டிருப்பவருமான
என்னுடைய தாய்
காத்தாரிக்காகவும்
முறைப்படி
எனக்கு கிடைக்க
வேண்டிய நாட்டை
ஏமாற்றுக்
காரர்களிடமிருந்தும்
துரோகிகளி
இருந்து மீட்டு
எனக்கு அளிக்க
வேண்டும்
என்பதற்காகவும்
தன்னுடைய
வாழ்க்கையையே
அர்ப்பணித்தவர்
அவர்
மச்சானுக்குநல்ல
மைத்துனனாகவும்
தங்கைக்கு நல்ல
அண்ணனாகவும்
மருமகனுக்குநல்ல
மாமாவாகவும்
வாழ்ந்து
கொண்டிருப்பவர்
அவர்
தனக்காக
வாழாமல்
எங்களுக்காகவே
வாழ்பவர்
அவர்
தனக்கென்று
எந்த ஒரு
சுகமும்
வைத்துக்
கொள்ளாமல்
எங்களுக்கு
மறுக்கப்பட்ட
நீதியை
சுகத்தைப்
பெற்றத் தர
வேண்டும்
என்ற
காரணத்திற்காக
தன்னுடைய
வாழ்க்கையையே
அர்ப்பணித்தவர்
அவர்
ஆனால் நீயோ
எட்டு
பெண்களை
திருமணம்
செய்தவன்
அது போதாது
என்றுபல
பெண்களுடன்
காம லீலை
நடத்திக்
கொண்டிருப்பவன்
-----ஜபம்
இன்னும் வரும்
-----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----05-08-2022
-----வெள்ளிக் கிழமை
//////////////////////////////////////////////
No comments:
Post a Comment