November 11, 2020

ஐயப் படாஅது-திருக்குறள்-பதிவு-2

                                                             திருக்குறள்-

ஐயப் படாஅது-பதிவு-2

 

“எங்கே

வைத்திருந்தோம்

என்பதும்

தெரியவில்லை

இந்த இடத்தில்

இருக்கலாம்

அல்லது

இந்த இடத்தில்

இருக்கலாம்

என்ற நினைப்பில்

ஒவ்வொரு இடமாக

தேடுகிறோம்

தொலைந்த பொருள்

இந்த இடத்தில்

இருக்கலாம் என்று

யூகத்தின்

அடிப்படையில்

தேடிக்

கொண்டிருக்கிறோம்

பொருள்

கிடைக்கவில்லை,”

 

“தொலைந்து போன

பொருள்

எவ்வளவு தேடியும்

கிடைக்காததால்

தேடுவதை நிறுத்தி

விடுகிறோம்”

 

“சிறிது நேரம்

அமைதியாக

உட்கார்ந்து

கொண்டிருக்கிறோம்”

 

“எதையும் சிந்திக்காமல்

அமைதியாக

உட்கார்ந்து

கொண்டிருக்கிறோம் “

 

“தொலைந்து

போன பொருளைப்

பற்றி எந்தவிதமான

நினைவுகளும்

இல்லாமல்

அமைதியாக

உட்கார்ந்து

கொண்டிருக்கிறோம்”

 

“தேடிக் கொண்டிருந்த

பொருளைப்

பற்றி சிறிது கூட

யோசிக்காமல்

அமைதியாக

உட்கார்ந்து

கொண்டிருக்கிறோம் “

 

“நாம் அமைதியாக

சிறிது நேரம்

அமர்ந்து

கொண்டிருக்கும் போது

அந்த ஆழ்ந்த

அமைதியின்

நடுவில்

அந்த ஆழ்ந்த

அமைதியில்

நாம் திளைத்துக்

கொண்டிருக்கும்

சமயத்தில்

அந்த அமைதி

இருளைக்

கிழித்துக் கொண்டு

ஒரு மின்னல்

பளிச்சிடுவது போல

எதிர் பாராத

நேரத்தில்

எதிர் பாராத

தருணத்தில்

எதிர் பாராத

சமயத்தில்

தொலைந்த போன

பொருள் எங்கே

வைத்தோம் என்பது

நம்முடைய

நினைவுக்கு

வருகிறது”

 

“தொலைந்து போன

பொருள் எங்கே

வைத்தோம்

என்பது

நம்முடைய

நினைவுக்கு

வந்தவுடன்

அந்த இடத்திற்கு

சென்று

பார்க்கிறோம்

தொலைந்து

போனதாக

நினைத்து

தேடிக் கொண்டு

இருக்கக்கூடிய

அந்த பொருளானது

அந்த இடத்தில்

பார்க்கிறோம்”

 

“தொலைந்து

போன பொருள்

கிடைத்து

விட்டது

என்று மகிழ்ச்சி

கொள்கிறோம்”

 

“அதாவது

காணாமல் போய்

விட்டதே என்று

காணாமல்

போன

ஒன்றைத்

தேடும் போது

மனமானது

வேலை

செய்கிறது”

 

“தேடுவதை

நிறுத்தி விட்டு

அமைதியாக

உட்கார்ந்த பிறகு

அறிவானது

வேலை செய்கிறது”

 

“மனமும் அறிவும்

இரண்டும் வெவ்வேறு

பாதைகளில்

பயணிப்பவை

இவைகள் இரண்டும்

என்றுமே

ஒன்றாக இணையாது

இரண்டும்

வெவ்வேறு

துருவங்கள்

இரண்டும்

வெவ்வேறு

முனைகள்”

 

“மனமானது

இயங்கும் போது

அறிவானது

இயங்காது

அறிவானது

இயங்கும் போது

மனமானது

இயங்காது”

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------11-11-2020

////////////////////////////////////////

No comments:

Post a Comment