ஜபம்-பதிவு-638
(அறிய
வேண்டியவை-146)
“எந்த ஒரு
செயலுக்காக நான்
இவ்வளவு நாள்
காத்துக்
கொண்டிருந்தேனோ
எந்த ஒரு செயலை
நிறைவேற்ற
வேண்டும் என்று
நான் செயல்பட்டுக்
கொண்டிருந்தேனோ
அந்த நாள்
நாளை வருகிறது”
“எதற்காக உழைத்துக்
கொண்டிருந்தேனோ
எது செயலுக்கு
வர வேண்டும்-என்று
இத்தனை நாள்
எதற்காகக் காத்துக்
கொண்டிருந்தேனோ
நாளை அதை
செயல்படுத்தக் கூடிய
வாய்ப்பு எனக்குக்
கிடைத்து இருக்கிறது”
“என்னுடைய கனவை
நினைவாக்கக் கூடிய
நாள் தான்
நாளை வரவிருக்கிறது
நான் எதிர்
நோக்கிக் காத்துக்
கொண்டிருந்ததும் - அந்த
நாளுக்காகத் தான்”
“நான் எதிர்பார்த்த
நாள் தான்
நாளை வரவிருக்கிறது
நாளை நடக்கவிருக்கும்
அந்த நாளுக்காகத்
தான் நீங்கள்
எனக்காகச்
செயல்பட வேண்டும்”
“நான் என்ன
எண்களைக்
கேட்கிறேனோ
அந்த எண்களை
எனக்காக நீங்கள்
அளிக்க வேண்டும்”
“நாளை ஒரு நாள்
மட்டும்
நீங்கள் எனக்காகச்
செயல்பட்டு
நான் கேட்கும்
எண்களை எனக்கு
அளித்து விட்டு
என்னை வெற்றி
பெறச் செய்தால்
என்னுடைய
கனவுகளை
நிறைவேற்றி விட்டால்
நான் உங்களை
என்றும் தொந்தரவு
செய்ய மாட்டேன்”
“என்னருமைப்
பகடைகளே
நான் யாரையும்
கெடுக்க
சொல்லவில்லை”
“யார்
வாழ்க்கையையும்
அழிக்கச்
சொல்லவில்லை”
“நான் அப்படி
நினைக்கவும்
இல்லை”
“பிறரை
அழித்துத் தான்
வாழ வேண்டும்
என்ற அவசியமும்
எனக்கு இல்லை”
“என்னுடைய
தங்கைக்கும்
அவளுடைய
கணவனுக்கும்
அவர்களுடைய
குழந்தைகளுக்கும்
கிடைக்க வேண்டிய
உரிமைக்காகப்
போராடுகிறேன்”
“என்னுடைய
தங்கையின்
கணவர் குருடன்
என்பதற்காக
நிராகரிக்கப்பட்ட
அரசாளும் உரிமை
அவருடைய
மகனுக்கும்
நடந்து விடக்கூடாது
என்பதற்காகப்
போராடுகிறேன்”
“எங்களிடமிருந்து
பறிக்கப்பட்ட
உரிமைகளை
பெறுவதற்காகப்
போராடிக்
கொண்டிருக்கிறேன்
அதில் ஒன்று தான்
இந்த பகடை
விளையாட்டு”
"இந்த பகடை
விளையாட்டை
வைத்துத்தான்
நாங்கள் இழந்த
அனைத்து
உரிமைகளையும்
பெறப் போகிறோம்"
“எங்களுடைய
உரிமைகளைப்
பெறுவதற்காகத் தான்
போராடுகிறேனே தவிர
மற்றவர்களை அழித்து
அவர்களுடைய
உரிமைகளை
பெறுவதற்காக நான்
போராடவில்லை”
“நாங்கள் செல்லும்
பாதையில் உள்ள
தடைகளை எடுத்து
விட்டு செல்கிறோம்”
“எங்களுடைய
வாழ்க்கையில்
குறுக்கிடும்
தடைகள் தான்
இந்த பாண்டவர்கள்
இந்த பாண்டவர்களை
மட்டும் நாங்கள்
தோற்கடித்து விட்டால்
அவர்களை முற்றிலுமாக
அழித்து விடுவோம்”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------21-10-2020
/////////////////////////////////
No comments:
Post a Comment