ஜபம்-பதிவு-533
(அறிய
வேண்டியவை-41)
திருஷ்டத்யும்னன்
:
“அஸ்வத்தாமா
என்னை
வாளால்
ஒரே
வீச்சில் என்னை
கொன்று
விடு என்னை
சித்திரவதை
செய்யாதே!”
அஸ்வத்தாமன்
:
“என்
தந்தையை
கொன்று
விட்டு
நிம்மதியாகத்
தூங்குகிறாயா
- உனக்கு
நிம்மதியான
சாவை
நான்
தரமாட்டேன் “
“ஒரு
வீரனுக்குரிய
சாவையும்
நான்
உனக்குத்
தர மாட்டேன்”
“உன்னை
சித்திரவதை
செய்து
தான் கொல்வேன்”
(என்று
சொல்லிக்
கொண்டே
கைகளால்
குத்து
விட்டும்
காலால்
எட்டி
உதைத்தும்
திருஷ்டத்யும்னனைக்
கொன்றான்
)
(அஸ்வத்தாமன்
திரௌபதியின்
தம்பியரான
உத்தமௌஜாவையும்,
யுதாமன்யுவையும்
வாளால்
வெட்டிக்
கொன்றான் ;
பீஷ்மர்
இறப்பிற்குக்
காரணமான
சிகண்டி
அஸ்வத்தாமனைக்
கண்டதும்
எழுந்து
வந்தான்
சிகண்டியின்
தலையை
வெட்டி
சிகண்டியைக்
கொன்றான்
அஸ்வத்தாமன்
;
ஒரு
கூடாரத்தில்
ஐந்து
நபர்கள்
உறங்கிக்
கொண்டிருப்பதைக்
கண்டான்
அஸ்வத்தாமன்
அவர்கள்
பாண்டவர்கள்
என்று
நினைத்து
ஒரு
மந்திரத்தை
ஜெபித்து
தனது
வில்லிருந்து
ஒரு
பாணத்தை
விடுகிறான்
- அது
ஐந்து
பாணங்களாக
மாறுகிறது
உறங்கிக்
கொண்டிருக்கும்
ஐவரையும்
கொன்று
விடுகிறது ;
அலறுகின்றவர்களையும்
ஓடுகின்றவர்களையும்
விடாது
அஸ்வத்தாமன்
துரத்திக்
கொண்டு சென்று
ஆட்டுக்
குட்டிகளை
வெட்டுவது
போல
துரத்தி
துரத்தி
சுழன்று
சுழன்று
வெட்டிக்
கொன்றான் ;
விராடனின்
புதல்வர்கள்
துருபதனின்
பௌத்திரர்கள்
முதலிய
எல்லோரையும்
வாளால்
வீசி வெட்டினான் ;
பாஞ்சாலர்கள்
அனைவரையும்
கொன்றான் ;
தன்னுடைய
வெறி
தீராத
காரணத்தினால்
பாண்டவர்களின்
பாசறையில்
இருந்த
மிருகங்களையும்
தன்னுடைய
வாளால்
கொன்றான் ;
மரணத்தை
வழங்க வந்த
மரணதேவனைப்போல
வாளை
கையில்
ஏந்திக்
கொண்டு
அங்கும்
இங்கும்
ஓடி
கண்ணில்
பட்ட
அனைவரையும்
தன்னுடைய
வாளால்
வெட்டிக்
கொன்றான் ;
அஸ்வத்தாமனின்
கொலை
வெறிக்கு
பயந்து
ஓடியவர்கள்
மிரண்டு
ஓடிய
யானைகளின்
காலில்
மிதி
பட்டு
இறந்தனர் ;
அந்த
இடம்
முழுவதும்
இரத்தம்
ஆறாக
பெருக்கெடுத்து
ஒடியது ;
மரண
ஓலம் அந்த
இடத்தையே
அதிர
வைத்தது
ஒரே
கூக்குரலும்
அழுகையும்
அந்த
இடம் முழுவதும்
நிரம்பி
இருந்தது ;
ஒரு
மந்திரத்தை
ஜெபித்து
தன்னுடைய
வில்லிலிருந்து
ஒரு
பாணத்தை
விடுகிறான்
அது
ஒரு தீ
உருண்டையாக
மாற்றம்
அடைந்து
அந்த
இடத்தில்
விழுகிறது
அந்த
இடம்
முழுவதும்
தீப்பிடித்து
எரிகிறது ;
அந்த
பாசறையில்
இருந்து
தப்பிப்
பிழைப்பதற்காக
ஓடியவர்கள்
பாசறையை
விட்டு
வெளியே
வரும்
போது
அவர்களை
கிருபரும்
கிருதவர்மாவும்
கொல்கின்றனர்
;
தீப்பற்றி
எரிந்து
கொண்டிருக்கும்
அந்த
வெளிச்சத்தின்
உதவியினால்
அஸ்வத்தாமன்
பாண்டவர்களின்
பாசறையில்
இருந்த
அனைவரையும்
கொன்றான் ;
படுகொலைகள்
அனைத்தையும்
செய்து
முடித்து
விட்டு
அஸ்வத்தாமன்
வெளியே
வந்த
போது விடிந்து
விட்டிருந்தது
இரவு
அந்த
பாசறைக்குள்
அஸ்வத்தாமன்
நுழைந்த
போது
எந்தவிதமான
அமைதி
இருந்ததோ
அப்படியே
விடியும்
போதும் இருந்தது ;
விடியற்காலையில்
அஸ்வத்தாமன்
பாண்டவர்கள்
பாசறையை
விட்டு
வெளியே
வந்த போது
ஒருவரும்
இல்லை
என்று
சொல்லத்தக்க
விதத்தில்
பாசறையில்
இருந்த
அனைவரும்
கொல்லப்பட்டு
இருந்தனர் )
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
24-06-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment