ஜபம்-பதிவு-535
(அறிய
வேண்டியவை-43)
(திருஷ்டத்யும்னன்
சிகண்டி
ஆகியோருடன்
ஐந்து
பேருடைய
உடல்கள்
கிடத்தப்பட்டிருந்தன
;
அஸ்வத்தாமன்
கொன்றாக
நினைத்துக்
கொண்டிருந்த
பாண்டவர்களுடைய
உடல்கள்
அல்ல
அவைகள்
- அந்த
ஐந்து
பேருடைய
உடல்கள்
திரெளபதியின்
புத்திரர்களான
பிரதி
விந்தியன்,
சுதசோமன்.
சுருதகீர்த்தி,
சதானிகன்.
சுருதவர்மன்
ஆகியோருடைய
உடல்கள்
ஐந்து
பேருடைய
உடலையும்
துளைத்து
நின்று
கொண்டிருந்த
பாணங்களைப்
பார்த்துக்
கேட்டாள்
திரௌபதி)
திரௌபதி
:
“இவை
யாருடைய
பாணங்கள்
“
அர்ஜுனன்
:
“இந்த
பாணங்கள் குரு
துரோணாச்சாரியாருடைய
மகன்
அஸ்வத்தாமனுடையது
“
திரௌபதி
:
“அஸ்வத்தாமனுடைய
தந்தை
துரோணாச்சாரியார்
இரவில்
தூங்கிக்
கொண்டிருப்பவர்களைக்
கொல்வது
தான்
வீரம்
என்று
அவருடைய
மகனுக்கு
சொல்லிக்
கொடுத்தாரா?”
“போர்க்களத்தில்
நின்று
போர் புரிய
தைரியமில்லாதவன்
;
நேருக்கு
நேராக
நின்று
கொண்டு
போர்
செய்ய
தைரியமில்லாதவன்
;
இரவில்
இருளில்
உறங்கிக்
கொண்டிருந்தவர்களைக்
கொன்று
தான்
பெரிய
வீரன்
என்பதை
நிரூபிக்க
முயன்று
இருக்கிறானா?”
“என்னுடைய
கண்மணிகளைக்
கொன்று
இருக்கிறான்;
நான்
பெற்றெடுத்த
பாலகர்களை
அழித்து
இருக்கிறான்;
பாண்டவர்களுக்கு
வாரிசே
இருக்கக்
கூடாது
என்று
இந்த
இழிச்
செயலை
செய்து
இருக்கிறானா
அல்லது
பாண்டவர்கள்
ஐவரையும்
கொல்வதாக
நினைத்துக்
கொண்டு
என்னுடைய
பாலகர்கள்
ஐவரையும்
கொன்று
விட்டானா?”
“எது
நடந்து
இருந்தாலும்
எனக்கு
அஸ்வத்தாமனின்
உயிர்
வேண்டும் ;
அவனை
பிணமாக
என்னிடம்
கொண்டு
வாருங்கள் “
அர்ஜுனன்
:
“அஸ்வத்தாமன்
யாராலும்
கொல்ல
முடியாதவன்
;
அஸ்வத்தாமனை
யாராலும்
கொல்ல
முடியாது ;
அவன்
அமரத்துவம்
பெற்றவன்
;
அவனுக்கு
மரணம்
என்பதே
கிடையாது ;”
திரௌபதி
:
“அஸ்வத்தாமனின்
தலையில்
ஒரு
ரத்தினக் கல்
இருக்கிறது
என்று
கேள்விப்பட்டேன்
அந்தக்
கல் இனி
அவன்
தலையில்
இருக்கக்
கூடாது ;
அந்தக்
கல்
எனக்கு
வேண்டும் ;
அந்தக்
கல்லை
என்னிடம்
கொண்டு
வந்து
தருவீர்களா?”
“அன்பே
பீமா
மனிதர்களிலேயே
நீங்கள்
தான்
பலசாலி
என்பதை
நான்
அறிவேன் ;
துரியோதனனுடைய
தம்பிகளையும்
துரியோதனனையும்
அழித்ததிலிருந்து
உங்கள்
வீரத்தை
நான்
அறிவேன் ;
நீங்கள்
எனக்காக
இந்தச்
செயலைச்
செய்ய
வேண்டும்
செய்வீர்களா?”
பீமன்
:
“உனக்காக
இந்தச்
செயலை
நான்
செய்கிறேன்
;
அஸ்வத்தாமன்
இந்த
உலகத்தில்
எந்த
மூலைக்கு
ஓடி
ஒளிந்தாலும்
அவனைக்
கண்டு
பிடித்து
அவனுடைய
தலையில்
இருக்கும்
அந்த
இரத்தினக்
கல்லை
- உனக்காக
கொண்டு
வருவேன்
திரௌபதி
எனக்காகக்
காத்துக்
கொண்டிரு
“
(என்று
சொல்லி
விட்டு
நகுலனை
சாரதியாக்கிக்
கொண்டு
தேரில்
ஏறி
பீமன்
அஸ்வத்தாமனைத்
தேடிப்
புறப்பட்டான்)
(அவர்கள்
சென்றதும்
கிருஷ்ணன்
தர்மரிடம்
கூறினார் )
கிருஷ்ணன்
;
“பீமனை
தனியே
அனுப்பியது
சரியான
செயல்
இல்லை ;
பீமனை
தனியே
அனுப்பி
இருக்கக்
கூடாது “
“அஸ்வத்தாமனிடம்
பிரம்மாஸ்திரம்
இருக்கிறது
அது
இந்த
உலகத்தையே
அழிக்கக்
கூடிய
ஆற்றல்
படைத்தது
பிரம்மாஸ்திரத்தை
பிரம்மாஸ்திரத்தை
கொண்டு
தான்
தடுக்க
முடியும்
வேறு
எந்த ஒரு
ஆயுதத்தாலும்
தடுக்க
முடியாது”
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
24-06-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment