ஜபம்-பதிவு-448
(பரம்பொருள்-200)
“அந்த இடமே
பலத்த சத்தத்தால்
அதிரும் வகையில்
காற்றில்
பரந்த கூந்தலை
தலையில் தாங்கி
;
கருமையான
நிறத்தை
உடலில் தாங்கி
;
ஆவேசத்தை
முகத்தில் தாங்கி
;
கோபக்கனலை
விழிகளில் தாங்கி
;
அச்சமூட்டும்
புருவங்களைத்
தாங்கி ;
நெற்றியில்
நெற்றிச்
சுட்டியைத்
தாங்கி ;
காதில்
கம்மலைத் தாங்கி
;
மூக்கில்
மூக்குத்தியைத்
தாங்கி ;
சிவப்பை
நாக்கில் தாங்கி
;
மண்டை ஓடுகளை
கழுத்தில் தாங்கி
;
காலில்
கொலுசுகளைத்
தாங்கி ;
கையில்
வாளைத் தாங்கி
;
அரவானுக்கு
அருளை வாரி
வழங்குவதற்காக
காளிதேவி
ஆவேசமாக
அரவான் முன்னால்
வந்து நின்றாள்
; ‘
“காளிதேவியின்
முகத்தில்
இருந்த இரத்தம்
அரவானுடைய
இரத்தம் என்று
தெள்ளத்
தெளிவாகத்
தெரிந்தது “
“காளிதேவியின்
நாக்கில்
இருந்து
வழிந்த
அரவானுடைய
இரத்தம்
காளிதேவியின்
உடலை
இரத்தத்தால்
நனைத்துக்
கொண்டிருந்தது
“
“காளிதேவியின்
வாயைச்
சுற்றிலும்
இருந்த
இரத்தத் துளிகள்
காளிதேவி
அரவானுடைய
இரத்தத்தை
குடித்ததற்கான
அடையாளமாக
இருந்து கொண்டு
இருந்தது “
“ஆவேசத்தை
வெளிப்படுத்திக்
கொண்டு
நேரில் தோன்றிய
காளி ;
அச்சத்தை
ஊட்டும் வகையில்
நேரில் தோன்றிய
காளி ;
பயத்தை ஏற்படுத்தும்
வகையில்
நேரில் தோன்றிய
காளி ;
பஞ்ச
பாண்டவர்களையும்
கிருஷ்ணனையும்
பார்த்து விட்டு
கொஞ்சம்
கொஞ்சமாக
அமைதி
நிலைக்கு
திரும்பினாள்
; “
“பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
காளிதேவியை
இரு கரங்களையும்
ஒன்றாகக் குவித்து
வணங்கிய
வண்ணம் நின்று
கொண்டிருந்தனர்
“
“அமைதி நிலைக்கு
திரும்பிய காளி
அரவானை நோக்கி
பேசத் தொடங்கினாள்
“
“மகனே !
அரவான்
நீ செய்த
செயலால்
என்னுடைய தாகம்
தணிந்தது ;
யாராலும் எளிதில்
குளிர்விக்க
முடியாத
என்னுடைய
உள்ளம் உன்னால்
குளிர்ந்தது
;
காலம் காலமாக
வறண்டு கிடந்த
என்னுடைய
மனம்
மகிழ்ந்தது
; “
“யாருமே
செய்ய முடியாத
மிகப்பெரிய
தியாகத்தைச்
செய்து இருக்கிறாய்
“
“தன்னலம்
கருதாது
பொதுநலத்திற்காக
உன்னையே
களப்பலியாகத்
தந்திருக்கிறாய்
“
“உன்னையே
இந்த உலகத்தின்
நன்மைக்காக
ஒப்படைத்திருக்கிறாய்
“
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
15-04-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment