பதிவு-3-புத்தேள்
திருக்குறள்-
ஹிட்லர்
உயிரோடு
இருந்த போதும்
நம்பிக்கையை
காப்பாற்றியவர்
ஹிட்லர்
இறந்த பிறகும்
அவருடைய
நம்பிக்கையை
காப்பாற்றியவராக
இருந்தவர் தான்
தனக்காக வாழாமல்
ஹிட்லருக்காகவே
வாழ்ந்தவர் தான்
அவர் தான்
கோயபெல்ஸ்
கோயபெல்ஸ்
1897
அக்டோபர் 29–ல்
ஜெர்மனியின்
RHEYDT
என்ற
நகரில் பிறந்தார்
பெற்றோர்
இட்ட பெயர்
பால் ஜோசப்
கோயபெல்ஸ்
அவரது
இளமைப்பருவம்
வலிகளும்,
வேதனைகளும்
நிரம்பியது.
பிறந்த சில
காலத்திலேயே
நிமோனியாவின்
பாதிப்பால்
அவதிப்பட்டார்
அவர் உயிர்
பிழைத்தது
பெரிய விஷயம்.
மறு பிறப்பு
என்று
கூட சொல்லலாம்.
நான்காவது வயதில்
கடும் காய்ச்சல்
OSTEOMYELITIS
என்ற நோய்
தாக்கியதில்
படுத்த
படுக்கையானார்
கால் எலும்புகளில்
பாதிப்பு
நடக்க முடியாமல்
படுத்த
படுக்கையாகவே
இருந்தார்
அதற்காக செய்த
ஆபரேஷனும்
தோல்வி அடைந்தது.
இடது காலை விட
வலது கால்
சிறியதாகிப்
போனது.
ஊன்று கோல்
பயன்படுத்தக்
கூடிய நிலைக்கு
ஆளானார்
கோயபெல்ஸ்.
கோயபெல்ஸ் தன்
பள்ளி நாட்களில்
அதிகம் சந்தித்தது
அவமானங்களையும்,
ஏளனங்களையும்,
மட்டுமே.
சக மாணவர்கள்
அவரை ஒரு
மனிதராகவே
மதிக்கவில்லை.
கிண்டல்
பரிகாசம் என்று
அவரை
ஏளனம் செய்தனர்.
கோயபெல்ஸ்
திக்கி திக்கி
பேசக்கூடியவர்.
உன்னால் ஒரு
போதும் சிறந்த
பேச்சாளராக
வர
முடியாது என்பது
பள்ளியின்
முதல்வர்
கோயபெல்ஸை
பார்த்துச்
சொன்னது
முதல் உலகப்
போர்
சமயத்தில்
ஜெர்மானிய
ராணுவத்தில்
தன்னை இணைத்துக்
கொள்ள விரும்பினார்
கோயபெல்ஸ்
அவரது உடல்
தகுதியைக்
காரணம் காட்டி
நிராகரித்தார்கள்
இத்தகைய
கோயபெல்ஸ் தான்
ஹிட்லரின்
நம்பிக்கைக்கு
உரியவராக இருந்தவர் ;
நம்பிக்கைக்கு
எடுத்துக் காட்டாய்
திகழ்ந்தவர் ;
நம்பிக்கைக்கு
உதாரணமாக
இருந்தவர் ;
என்று
வரலாற்றால்
அடையாளம்
காட்டப்பட்டவர்.
ஹிட்லர்
இந்த உலகத்தில்
இருந்த போதும் ;
ஹிட்லர்
இந்த உலகத்தில்
வாழ்ந்த போதும் ;
ஹிட்லர்
உயிரை விட்டு
இந்த உலகத்தை
விட்டு
சென்ற போதும் ;
அவருக்காகவே
வாழ்ந்தவர்.
ஹிட்லரின் மூளை
;
ஹிட்லரின் வலக்கரம்
;
ஹிட்லரின்
நம்பிக்கைக்குரியவர்
;
என்று
அழைக்கப் பட்டவர்.
-----என்றும் அன்புடன்
-----எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----14-10-2021
/////////////////////////////////////////
No comments:
Post a Comment