பதிவு-5-புத்தேள்-
திருக்குறள்
தன்னுடைய
குறைகளையே
நிறைகளாக்கி
வாழ்க்கையின்
உயர்வான
நிலைகளை
அடைந்தவர்
ஆமாம்
அவமானங்களையும்
ஏளனங்களையும்
தாண்டி சரித்திரம்
படைத்தவர் தான்
கோயபெல்ஸ்
நினைவில் நிறுத்த
வேண்டிய பெயர்
கோயபெல்ஸ்
அத்தகைய
கோயபெல்ஸ்
தான் தகடு
பொருத்தப்பட்ட
குறையுடைய
தன்னுடைய
வலது காலால்
கெந்திக் கெந்தி
நடந்தபடி தன்
அறையில்
நுழைந்தார்
நம்முடைய
குழந்தைகளை
மட்டுமாவது
இந்த பெர்லினை
விட்டு வெளியேற்றி
அனுப்பி விடலாமா
அல்லது
நீயும் அவர்களுடன்
பெர்லினை விட்டு
வெளியேறி
செல்கிறாயா
என்று
கோயபெல்ஸ்
தன்னுடைய
மனைவி மக்டா
கோயபெல்ஸ்ஸைப்
பார்த்துக்
கேட்டார்
இப்படி செய்வது
ஹிட்லர் உயிரோடு
இருக்கும் போது
அவருக்கு
நம்பிக்கையாக
இருந்து விட்டு
ஹிட்லர்
இறந்த பிறகு
நான் பெர்லினை
விட்டு
வெளியேறுவதும்
நம்முடைய
குழந்தைகளை
பெர்லினை விட்டு
வெளியேற்றுவதும்
ஹிட்லருக்கு
நாம் செய்யும்
நம்பிக்கை துரோகமாக
இருக்காதா
உங்களை நம்பிக்கையாக
கூட வைத்திருந்த
உங்கள் தலைவர்
ஹிட்லருக்கு
நீங்கள் செய்யும்
நம்பிக்கைத்
துரோகமாக இருக்காதா
இப்படி சொன்னார்
அவருடைய மனைவி
மக்டா கோயபெல்ஸ்
என்னுடைய
தலைவர் ஹிட்லர்
அவர்களுக்கு
நான் தான்
நம்பிக்கைக்குரியவன்
என்று நினைத்தேன்
என்னுடைய
மனைவியான
நீயும் நம்பிக்கைக்கு
உரியவளாக
இருப்பது எனக்கு
மகிழ்ச்சியாக
இருக்கிறது
நீ எந்த
நிலையில்
இருக்கிறாய்
குழந்தைகளின்
மேல்
பாசம் கொண்ட
ஒரு தாயாக
இருக்கிறாயே
குழந்தைகளைக்
காப்பாற்றும்
எண்ணம்
உன்னுடைய
சிந்தனையில்
இருக்கிறதா
என்பதை
அறிந்து
கொள்வதற்காகத்
தான் கேட்டேன்
என்னுடைய தலைவர்
ஹிட்லர் உயிரோடு
இருக்கும் போதும்
இறந்த பிறகும்
நான் மட்டும்
இல்லை
என்னுடைய
மனைவியான நீயும்
நம்முடைய
குழந்தைகளும்
ஹிட்லருக்கு
நம்பிக்கைக்கு
உரியவர்களாக
இருந்திருக்கிறோம்
என்பது இப்போது
தெளிவாகி விட்டது
என்றார் கோயபெல்ஸ்
என்னுடைய தலைவர்
ஹிட்லர்
இறந்த பிறகு
என்னுடைய தலைவர்
ஹிட்லர்
வழிமுறையைப்
பின்பற்றி
என்னுடைய
மனைவியும்
என்னுடைய
குழந்தைகளும்
இறப்பதற்கு
சம்மதித்து
விட்டார்கள்
இவ்வாறு தன்னுடைய
மரண சாசனத்தை
எழுதினார்
கோயபெல்ஸ்
மே 1, 1945
முற்பகல் நேரம்
நிபந்தனை ஏதுமின்றி
சரணடைய
ரஷ்யப்
படைகளிடமிருந்து
அழைப்பு வந்திருந்தது.
அந்த அழைப்பை
நிரராகரித்தார்
கோயபெல்ஸ்.
அப்போது வரை
ஹிட்லரின்
இறப்புச் செய்தி
கசியவில்லை
ஹிட்லர்
இறந்து விட்டார்
என்ற செய்தி
உலகத்திற்கு
தெரியாது
-----என்றும் அன்புடன்
-----எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----14-10-2021
/////////////////////////////////////////
No comments:
Post a Comment