பதிவு-1-புத்தேள்
திருக்குறள்-
“””புத்தேள்
உலகத்தும்
ஈண்டும்
பெறல்அரிதே
ஒப்புரவின்
நல்ல பிற”””
-------------திருக்குறள்
-------------திருவள்ளுவர்
“இந்த உலகத்திலும்,
வேறு எந்த
உலகத்திலும்
பிறருக்காகவே
வாழ்வதைப் போன்ற
செயலை விட
உயர்ந்த செயல்
வேறு ஒன்றும்
கிடையாது.”
என்பது தான்
இந்தத்
திருக்குறளுக்கு
சொல்லப்படும்
கருத்து
இதனைக்
கீழ்க்கண்டவாறு
பார்ப்போம்
இருவர் ஒன்றாக
இணைந்து இருந்தால்
அவர்கள்
நம்பிக்கையினால்
இணைக்கப்
பட்டிருக்கிறார்கள்
என்று பொருள்.
நம்பிக்கையில்
மாற்றம் என்பது
ஏற்படும் போது
இருவரிடையே
பிரிவு என்பது
ஏற்படுகிறது.
பிரிவை இரண்டு
நிலைகளில்
பிரித்து விடலாம்
ஒன்று :
இடைக்காலப் பிரிவு
இரண்டு :
நிரந்தரப் பிரிவு
இருவரிடையே
இருந்த நம்பிக்கை
குறையும் போது
இடைக்காலப் பிரிவு
என்பது ஏற்படுகிறது.
இருவரிடையே
இருந்த நம்பிக்கை
இறக்கும் போது
நிரந்தரப் பிரிவு
என்பது ஏற்படுகிறது
நம்பிக்கை
குறைவினால்
ஏற்படும்
விரோதத்தால்
ஒன்றாக இருந்த
இருவர்
விரோதிகளாகி
விடுகின்றனர்
நம்பிக்கை
குறைவினால்
ஏற்படக்கூடிய
இடைக்காலப் பிரிவு
நிரந்தரமானது அல்ல
தற்காலிகமானது தான்
இருவரிடையே
இருக்கும்
நம்பிக்கை
குறைவு நீங்கும்
போது பிரிந்தவர்
மீண்டும்
ஒன்று சேருவர்
ஆனால்
நிரந்தரப்பிரிவு
என்பது
நிரந்தரமானது
நம்பிக்கை
என்பது
இறக்கும் போது
மட்டுமே
நிரந்தரப்பிரிவு
ஏற்படுகிறது.
நிரந்தரப் பிரிவின்
மூலம் பிரிந்தவர்
மீண்டும் சேருவது
என்பது
இயலாத காரியம்
நிரந்தரப் பிரிவின்
மூலம் பிரிந்தவர்கள்
மீண்டும்
சேருவார்கள்
என்று சொல்ல
முடியாது
இருவருக்கிடையே
பிரிவு என்பது
ஏற்படாமல்
இருக்க வேண்டும்
என்றால்
ஒருவர் மீது
ஒருவர்
வைத்துள்ள
நம்பிக்கையில்
நம்பிக்கைக்
குறைவோ
அல்லது
நம்பிக்கையில்
இறப்போ
ஏற்படக் கூடாது
இருவர்
ஒருவரோடு
ஒருவராக
இணைந்து
இருந்தால்
அவர்கள்
நம்பிக்கையினால்
இணைக்கப்
பட்டிருக்கிறார்கள்
என்று பொருள்
முதல் நபர்
மீது
நம்பிக்கை
வைத்து
இரண்டாம் நபர்
முதல் நபருடன்
இணைந்து
இருக்கும் போது
முதல் நபர்
உயிரோடு
இருக்கும்
போது மட்டும்
இரண்டாம் நபர்
நம்பிக்கைக்கு
உரியவராக
இருந்தால்
போதாது
முதல் நபர்
இறந்த பிறகும் கூட
முதல் நபருடைய
நம்பிக்கையைக்
காப்பாற்றுபவராக
இரண்டாம் நபர்
இருக்க வேண்டும்
-----என்றும் அன்புடன்
-----எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----14-10-2021
/////////////////////////////////////////
No comments:
Post a Comment