ஜபம்-பதிவு-735
(சாவேயில்லாத
சிகண்டி-69)
பரசுராமர்:
பிரம்மச்சரியத்தை
விட்டு விடுவதால்
ஒரு பெண்ணிற்கு
வாழ்க்கை
கிடைக்கிறது
என்றால்
பிரம்மச்சரியத்தை
விட்டு விடுவது
நல்லது தானே
உலகத்தில் யாரும்
மேற் கொள்ளாத
பிரம்மச்சரியத்தை
நீ ஒன்றும்
புதியதாக
மேற்கொள்ளவில்லை
எல்லோரும்
மேற்கொண்ட
பிரம்மச்சரியத்தைத்
தானே நீயும்
மேற்கொண்டிருக்கிறாய்
பிரம்மச்சரியம்
மேற்கொண்ட பலர்
பிரம்மச்சரியத்தை
விட்டு விட்டு
திருமணம் செய்து
கொள்ளவில்லையா
உலகத்தில் யாரும்
செய்யாததை
ஒன்றும்
உன்னை நான்
செய்யச்
சொல்லவில்லை
பலர் செய்ததைத்
தானே உன்னையும்
செய்யச் சொல்கிறேன்
நாம்
மேற்கொண்டிருக்கும்
பிரம்மச்சரியம்
ஒருவரை வாழ
வைப்பதற்காக
இருக்க வேண்டும்
ஒருவருடைய
வாழ்க்கையை
அழிப்பதற்காக
இருக்கக் கூடாது
உன்னுடைய
பயனற்ற
பிரம்மச்சரியத்தால்
யாருக்கும்
ஒரு பயனும்
ஏற்படப்போவதில்லை
பிரம்மச்சரியத்தை
விட்டு விட்டு
அம்பையை
திருமணம்
செய்து கொள்
பீஷ்மர்:
முடியாது
பரசுராமர்:
குருவின்
வார்த்தையை
செயல்படுத்துவது
தான் ஒரு
சீடனின் கடமை
பீஷ்மர்:
குருவின்
வார்த்தை சரியாக
இருக்கும் பட்சத்தில்
சீடன் அதை
நிறைவேற்றலாம்
குருவின் வார்த்தை
தவறாக இருந்தால்
சீடனால் எப்படி
நிறைவேற்ற முடியும்
பரசுராமர்:
குரு தவறான
வழியைக் காட்டுவார்
என்கிறாயா
பீஷ்மர்:
குரு காட்டும்
வழி சில
சமயங்களில்
சீடனுக்கு தவறாகத்
தெரியலாம் அல்லவா
பரசுராமர்:
நிகழ்காலத்தில்
நீ செய்திருக்கும்
தவறான செயலால்
உன்னுடைய
எதிர்காலம்
பாதிக்கப்படக் கூடாது
என்பதற்காகச்
சொன்னேன்
பீஷ்மர்:
எதிர்காலத்தை
நினைத்து
வருத்தப்பட்டுக்
கொண்டிருந்தால்
நிகழ்காலத்தில்
வாழ முடியாது
பரசுராமர்:
எதிர்காலத்தில்
நன்றாக வாழ
வேண்டும்
என்பதற்காகத் தான்
நிகழ்காலத்தில்
எப்படி வாழ
வேண்டும் என்று
சொன்னேன்
குருவின்
வார்த்தையை ஏற்றுக்
கொள்ள மாட்டாயா
பீஷ்மர்:
குருவின்
வார்த்தையை
ஏற்றுக் கொள்ள
முடியாத நிலையில்
இருக்கிறேன்
பரசுராமர்:
குருவின்
வார்த்தையை
ஏற்றுக் கொண்டு
சீடனாக இருந்து
நான்
சொன்னவைகளை
செய்ய முடியாது
என்றால்
சீடனாக
எனக்கு அருகில்
இருக்க முடியாது
எதிரியாக எனக்கு
எதிரில் நிற்க
வேண்டியது தான்
பீஷ்மர்:
என்னை சீடனாக
ஏற்றுக் கொண்டு
நால்வகை
ஆயுதங்களையும்
எப்படி கையாள
வேண்டும் என்ற
முறையினை
எனக்குக் கற்றுக்
கொடுத்தீர்கள்
அதனால் நீங்கள்
எப்போதும்
என்னுடைய
குரு தான்
நான் உங்களுடைய
சீடன் தான்
நான் எப்போதும்
உங்களை குருவாகத்
தான் பார்க்கிறேன்
நீங்கள் தான்
என்னை எதிரியாகப்
பார்க்கிறீர்கள்
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------11--04-2022
-------திங்கள் கிழமை
//////////////////////////////////////////////////
No comments:
Post a Comment