ஜபம்-பதிவு-738
(சாவேயில்லாத
சிகண்டி-72)
என்னால்
கொல்லப்பட்ட நீ
யாரும் இல்லாத
அனாதையாக
தரையில்
பிணமாகக்
கிடக்கப் போகிறாய்
காக்கைகளும்
கழுகளும் உன்னை
கொத்தப்
போகின்றன
விலங்குகள் உன்னை
உணவாகத்
தின்னப் போகின்றன
இந்தக் காட்சியைக்
கண்டு உன் தாய்
கங்கை கண்ணீர்
வடிக்கப் போகிறாள்
இந்த உலகத்தில்
என்னை எதிர்த்த
ஷத்திரியர்களை
எல்லாம் வென்று
பிராமணர்கள் தான்
இந்த உலகத்தில்
சிறந்தவர்கள்
என்று எப்படி
இந்த உலகத்திற்கு
நிரூபித்துக்
காட்டினேனோ
அப்படியே
உன்னையும் கொன்று
ஷத்திரியர்களை விட
பிராமணர்களே
உயர்ந்தவர்கள்
என்பதை
இந்த உலகத்திற்கு
நிரூபித்துக்
காட்டுவேன்
ஆணவத்தால்
அழிபவனே
குருவை மதிக்கத்
தெரியாதவனே
குருவின் சொற்படி
நடக்காதவனே
நாளை உனக்கும்
எனக்கும்
குருஷேத்திரத்தில்
போர்
செல்
எந்தக் கடவுளை
எல்லாம் வணங்க
வேண்டும் என்று
நினைக்கிறாயோ
அந்தக் கடவுளை
எல்லாம்
வணங்கிக் கொள்
யாரையெல்லாம்
பார்க்க
விரும்புகிறாயோ
அவர்களை
எல்லாம்
பார்த்துக் கொள்
யாரிடம் எல்லாம்
ஆசிர்வாதம் பெற
நினைக்கிறாயோ
அவர்களிடம்
எல்லாம்
ஆசிர்வாதம்
பெற்றுக் கொள்
இன்றுடன்
உன்னுடைய
சந்தோஷமான நாள்
முடியப் போகிறது
நாளை உன்னுடைய
மரணத்திற்கான நாள்
குறிக்கப்படப்
போகிறது
சென்று
மகிழ்ச்சியாக இருந்து
விட்டு வா
(என்று சொல்லி
விட்டு பீஷ்மரின்
பதிலை
எதிர்பார்க்காமல்
பரசுராமர் அந்த
இடத்தை விட்டு
சென்று விட்டார்
பீஷ்மர்
தன்னுடைய
குதிரையில் ஏறி
அஸ்தினாபுரத்தில்
சத்தியவதியைக்
காண புறப்பட்டார்)
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------11--04-2022
-------திங்கள் கிழமை
//////////////////////////////////////////////////
No comments:
Post a Comment