ஜபம்-பதிவு-739
(சாவேயில்லாத
சிகண்டி-73)
(தாய் சத்தியவதி
அறைக்குள்
பீஷ்மர் நுழைகிறார்.
பீஷ்மர் வருத்தத்தில்
இருப்பதைக்
கண்டு கொண்ட
தாய் சத்தியவதி
பீஷ்மரிடம் பேசத்
தொடங்குகிறாள்.)
சத்தியவதி :
எந்தப் பிரச்சினை
வந்தாலும் எதிர்த்து
நின்று போராடி
வெற்றி பெறக்கூடிய
வல்லமை படைத்த
பீஷ்மன்
வருத்தப்படுவதைப்
பார்க்கும் போது
எனக்கு
வியப்பாக இருக்கிறது
மகனே பீஷ்மா
உன்னை
வருத்தப்பட
வைத்தது எது
பீஷ்மர் :
என்னைப் பார்த்து
ஒருவர்
சொல்லிய சொல்
சத்தியவதி :
என்ன சொல்
பீஷ்மர் :
குற்றவாளி
என்ற சொல்
சத்தியவதி :
உன்னைப் பற்றி
அறியாதவர்
சொல்லி இருப்பார்
பீஷ்மர் :
என்னைப் பற்றி
அறிந்தவர் தான்
சொன்னார்
என்னை
குற்றவாளி என்று
சத்தியவதி :
சொன்னது யார்
பீஷ்மர் :
பரசுராமர்
சத்தியவதி :
எதற்காக
அவ்வாறு சொன்னார்
பீஷ்மர் :
அம்பையை
சிறை எடுத்த
தவறினைச் செய்து
அம்பையின்
வாழ்க்கை
பாதிப்பு அடைவதற்கு
நான் காரணமாகி
விட்டேனாம்
அதனால் என்னை
குற்றவாளி
என்கிறார்
சத்தியவதி :
வேறு என்ன
சொன்னார்
பீஷ்மர் :
குற்றவாளியான
என்னுடன் அவர்
தொடர்பு
கொண்டிருந்தால்
குற்றவாளியுடன்
தொடர்பு
கொண்டிருக்கிறார்
என்று இந்த
உலகம் அவரை
கேவலமாகப்
பேசும் என்கிறார்
அவருடைய புகழுக்கு
களங்கம்
ஏற்படும் என்கிறார்
அவருடைய பெயர்
பாதிப்பு அடையும்
என்கிறார்
அவருடைய
முன்னேற்றம்
தடைபடும் என்கிறார்
என் தரப்பு
நியாயங்களை
செவி கொடுத்தே
கேட்க மாட்டேன்
என்கிறார்
அவருக்கு என்று
ஒரு நியாயம்
வைத்திருக்கிறார்
அது சரியானது
தானா என்பதைக்
கூட ஆராயாமல்
பேசுகின்றார்.
தான் சொல்வது
தான் சரி
தான் செய்வது
தான் சரி என்று
இருக்கின்றார்
உண்மை எது
பொய் எது
என்று ஆராயாமல்
அவருடைய
வார்த்தைக்கு
நான் கட்டுப்பட
வேண்டும் என்கிறார்
அவர் சொல்வதை
நான் செய்ய
வேண்டும் என்கிறார்
சத்தியவதி :
பீஷ்மா
உன்னை குற்றவாளி
என்று சொல்வதற்கு
பரசுராமருக்கு எந்த
தகுதியும் கிடையாது
ஷத்திரியர்களைக்
கொன்று
பிணங்களாகக்
குவித்தவர்
அவர்களுடைய
இரத்ததை ஆறாக
ஓட விட்டவர்
கொல்வது ஒன்றையே
தொழிலாகக் கொண்டு
கணக்கிலடங்காத
குற்றங்களைச் செய்தவர்
உன்னை எப்படி
குற்றவாளி என்று
சொல்லலாம்
உன்னை குற்றவாளி
என்று சொல்வதற்கு
அவருக்கு என்ன
தகுதி இருக்கிறது
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------16-04-2022
-------சனிக்கிழமை
//////////////////////////////////////////////////
No comments:
Post a Comment