ஜபம்-பதிவு-741
(சாவேயில்லாத
சிகண்டி-75)
பீஷ்மா
உன்னைப் பற்றி
பரசுராமருக்கு
தெரியவில்லை
உன் வீரம் என்ன
உன் அறிவு என்ன
உன் திறமை என்ன
என்பது பரசுராமருக்கு
தெரியவில்லை
தெரிந்திருந்தால்
உன்னை
குற்றவாளி என்று
சொல்லி
இருக்க மாட்டார்
இந்த உலகம்
எப்போதும்
சொன்னதைச்
செய்தவர்களைத் தான்
குற்றவாளி
என்று சொல்லும்
சொன்னவர்கள்
எதற்காக
சொன்னார்கள்
என்று ஆராய்ந்தும்
பார்க்காது
செய்தவர்களும்
எதற்காக
செய்தார்கள் என்று
யோசித்தும்
பார்க்காது
பீஷ்மா
நீயும் இதற்கு
விதிவிலக்கல்ல
சொன்னதைச்
செய்த உன்னை
பரசுராமர்
குற்றவாளி என்கிறார்
உன்னை
குற்றவாளி என்று
சொன்னதின் மூலம்
பரசுராமர்
மிகப்பெரிய
தவறினைச்
செய்து இருக்கிறார்
அவர்
செய்த தவறை
அவர் உணர்ந்து
கொள்ளும்படிச்
செய்ய வேண்டும்
நீ குற்றவாளி
இல்லை என்பதை
பரசுராமர்
ஏற்றுக் கொள்வதற்கு
நீ ஏதாவது
செய்தே ஆக
வேண்டும்
பீஷ்மர் :
என் விருப்பத்தின் படி
எதையும் செய்ய
முடியாது
நான் குற்றவாளி
இல்லை என்பதை
பரசுராமர்
ஏற்றுக் கொள்ள
வேண்டும் என்றால்
பரசுராமர்
சொன்னதை நான்
செய்ய வேண்டும்
சத்தியவதி :
என்ன செய்ய
வேண்டும்
பீஷ்மர் :
அம்பையை
திருமணம்
செய்ய வேண்டும்
சத்தியவதி :
முடிந்து விட்டது
என்று நினைத்தது
தொடர்ந்து கொண்டு
இருக்கிறது
உன்னை விடாமல்
துரத்திக் கொண்டு
இருக்கிறது
நீ எங்கே
சென்றாலும்
அம்பை உன்னை
விட மாட்டாள்
போலிருக்கிறது
இதற்கு முடிவு
தான் என்ன
பீஷ்மர் :
முடிவைத்
தேடித் தான்
அம்பை
பரசுராமரைச் சரண்
அடைந்து இருக்கிறாள்
சத்தியவதி :
உன்னைத் திருமணம்
செய்வது
அம்பையின் முடிவு
கிடையாதே
பரசுராமர்
வெளிப்படுத்தியவை
அம்பையின்
வார்த்தைகள்
கிடையாதே
அம்பை உன்னை
கொல்வதாகத் தானே
சபதம் எடுத்து
இருக்கிறாள்
உன்னை
திருமணம் செய்வேன்
என்று சபதம்
எடுக்கவில்லையே
பீஷ்மர் :
பரசுராமர்
அம்பையின் முடிவைச்
சொல்லவில்லை
தன்னுடைய
முடிவைச் சொல்லி
இருக்கிறார்
சத்தியவதி :
சரியான முடிவாகத்
தெரியவில்லையே
பீஷ்மர் :
அதைத் தான்
நானும் சொன்னேன்
உங்கள் முடிவு
சரியான முடிவு
கிடையாது
உங்கள் முடிவை
என்னால் ஏற்றுக்
கொள்ள முடியாது
என்று சொன்னேன்
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------16-04-2022
-------சனிக்கிழமை
//////////////////////////////////////////////////
No comments:
Post a Comment