April 11, 2022

ஜபம்-பதிவு-734 (சாவேயில்லாத சிகண்டி-68)

 ஜபம்-பதிவு-734

(சாவேயில்லாத

சிகண்டி-68)

 

பரசுராமர்:

உன்னுடைய

தவறு தான்

நீ தான் தவறு

செய்திருக்கிறாய்

 

பீஷ்மர்:

சால்வன் தவறு

செய்யவில்லை

என்கிறீர்களா

 

பரசுராமர்:

ஆமாம்

சால்வன் தவறு

செய்யவில்லை

நீ தான் தவறு

செய்திருக்கிறாய்

 

பலர் முன்னிலையில்

அம்பையை

சிறை எடுத்துச்

சென்றிருக்கிறாய்

 

உன்னால் சிறை

எடுக்கப்பட்ட

அம்பையை

சால்வன் எப்படி

ஏற்றுக்

கொள்வான்

 

நீ போட்ட

பிச்சைப்

பொருளாகத் தானே

அம்பையைக்

கருதுவான்

 

சால்வன்

செய்ததில்

தவறில்லை

தவறு அனைத்தும்

உன்னிடம்

தான் இருக்கிறது

 

செய்த தவறினால்

ஏற்பட்ட பாவத்தை

போக்க நீ

பிராயச்சித்தம்

செய்தே

ஆக வேண்டும்

 

பீஷ்மர்:

எதை

பிராயச்சித்தம்

என்கிறீர்கள்

 

பரசுராமர்:

அம்பையை

திருமணம் செய்து

கொள்வதைத் தான்

 

பீஷ்மர்:

அதை என்னால்

செய்ய முடியாது

 

பரசுராமர்:

பிரம்மச்சரியம்

உன்னைத் தடுக்கிறது

என்கிறாயா

 

பீஷ்மர்:

ஆமாம்

 

பரசுராமர்:

நீ ஏற்றுக்

கொண்டுள்ள

பிரம்மச்சரியம்

யாருக்காவது

உதவியிருக்கிறதா

 

பீஷ்மர்:

அஸ்தினாபுரத்தின்

அரியணையை

காப்பாற்றிக்

கொண்டு இருக்கிறதே

 

பரசுராமர்:

ஒரு பெண்ணின்

வாழ்க்கையை விட

அஸ்தினாபுரத்தின்

அரியணை

முக்கியமானதா

 

ஒரு பெண்ணின்

வாழ்க்கையை

அழித்து விட்டு

அஸ்தினாபுரத்தின்

அரியணையை

காப்பாற்றி என்ன

செய்யப் போகிறாய்

 

நீ மட்டும் தான்

அஸ்தினாபுரத்தின்

அரியணையை

காப்பதற்காக

பிறந்தவனா

 

உன்னை விட்டால்

வேறு யாரும்

அஸ்தினாபுரத்தின்

அரியணையை

காப்பாற்ற முடியாதா

 

அஸ்தினாபுரத்தின்

அரியணை

காப்பாற்றப்பட

வேண்டும் என்றால்

நீ இருந்தாலும்

இல்லா விட்டாலும்

அது நடக்கத்

தான் போகிறது

 

உன்னால்

மட்டும் தான்

அஸ்தினாபுரத்தின்

அரியணை

காப்பாற்ற முடியும்

என்று நீ சொல்வது

உன்னுடைய

ஆணவத்தை

மட்டுமே காட்டுகிறது

 

பீஷ்மர்:

நான் மேற்கொண்ட

பிரம்மச்சரியத்தை

தவறு என்கிறீர்களா

 

பரசுராமர்:

உன்னுடைய

பிரம்மச்சரியத்தை

தவறு என்று

சொல்லவில்லை

 

உன்னுடைய

பிரம்மச்சரியத்தால்

ஒரு பெண்ணின்

வாழ்க்கை

பாதிக்கப்பட்டிருக்கிறதே

அதைச் சொன்னேன்

 

பீஷ்மர்:

பிரம்மச்சரியத்தை

விட்டு விட

வேண்டும்

என்கிறீர்களா

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------11--04-2022

-------திங்கள் கிழமை

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment