March 06, 2022

ஜபம்-பதிவு-704 (சாவேயில்லாத சிகண்டி-38)

 ஜபம்-பதிவு-704

(சாவேயில்லாத

சிகண்டி-38)

 

அம்பை :

கோபத்தில்

இருக்கும் போது

அறிவென்பது

வேலை செய்யாது

அதனால்

நினைத்ததை

பேச முடியாது

தப்பாகத் தான்

பேசுவார்கள் என்று

எந்த அறிவு

கெட்டவன்

சொன்னான்

 

கோபத்தில்

இருக்கும் போது

தான் மனதில்

உள்ளதைப்

பேசுவார்கள்

 

தங்கள்

மனதில் மறைத்து

வைத்திருந்தவைகளைப்

பேசுவார்கள்

 

எதை

வெளிப்படுத்த

முடியாமல்

இருந்தார்களோ அதை

வெளிப்படுத்தி

பேசுவார்கள்

 

எதை எல்லாம்

சொல்ல முடியாமல்

தவித்துக்

கொண்டிருந்தார்களோ

அதைப் பேசுவார்கள்

 

தாங்கள்

என்ன பேச

வேண்டும் என்று

நினைத்திருந்தார்களோ

அதைப் பேசுவார்கள்

 

தங்களால் எந்த

உணர்வுகளை

வெளிப்படுத்த முடியாமல்

தவித்துக் கொண்டு

இருந்தார்களோ

அந்த உணர்வுகளை

வெளிப்படுத்தி

பேசுவார்கள்

 

பால்குனர்

ஆனால் அவைகள்

அனைத்தும்

உண்மையாக இருக்காதே

 

அம்பை :

அவைகள் உண்மையாக

இருக்கட்டும்

அல்லது

பொய்யாக

இருக்கட்டும்

எப்படி இருந்தாலும்

அவைகள் மனதில்

மறைத்து

வைத்திருந்தவைகள்

தானே

 

பால்குனர்

அதனால்

என்ன பலன்

ஏற்பட்டு

விடப்போகிறது

பகை தான் ஏற்படும்

 

கோபப்படும் போது

பகை ஏற்படும்

என்ற

காரணத்தினால் தான்

கோபப்படும் போது

பேச வேண்டாம்

என்று சொன்னார்கள்

 

அம்பை :

நான் கோபப்பட்டு

என்னுடைய மனதில்

உள்ளவைகளைப்

பேசிக் கொண்டு

இருக்கிறேன்

அதனால் பகை

ஏற்பட்டு விடும்

என்று பயப்படுகிறீர்களா

 

எந்தப் பகையையும்

கண்டு அஞ்சாதவள்

இந்த அம்பை

 

எந்த பகைக்கும்

பயப்படமாட்டாள்

இந்த அம்பை

 

பீமதேவன் :

அம்பிகை அம்பாலிகை

ஆகிய இருவரும்

தங்களுக்கு கிடைத்த

வாழ்க்கையை

எந்தவிதமான

எதிர்ப்பையும்

தெரிவிக்காமல்

ஏற்றுக் கொண்டார்கள்

அதனால்

அவர்கள் வாழ்க்கை

அமைதியாக சென்று

கொண்டிருக்கிறது

 

ஆனால்

நீங்கள் கோபப்பட்டு

உங்கள் வாழ்க்கையை

வீணாக இழந்து

கொண்டிருக்கிறீர்கள்

 

அம்பை :

இந்த உலகத்தில்

ஒரு பெண்

விரும்பியபடி

வாழக்கூடாதா

 

விரும்பியபடி

வாழ்க்கையை

அமைத்துக்

கொள்ளக்கூடாதா

 

விரும்பியவரை

திருமணம் செய்து

கொள்ளக் கூடாதா

 

தன்னுடைய

ஆசைகள்

அனைத்தையும்

குழி தோண்டி

புதைத்து விட்டுத் தான்

இந்த உலகத்தில்

ஒரு பெண்

வாழ வேண்டுமா

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

No comments:

Post a Comment