ஜபம்-பதிவு-700
(சாவேயில்லாத
சிகண்டி-34)
அம்பை
அப்படி என்றால்
சால்வன்
:
உங்களை ஏற்றுக்
கொள்ள முடியாது
நீங்கள் செல்லலாம்
அம்பை :
நான் உங்களை
எவ்வளவு
நேசித்திருந்தேன்
என்னுடைய உயிர்
நீங்கள் தான்
என்று
வாழ்ந்திருந்தேன்
அல்லும் பகலும்
உங்களையே
நினைத்திருந்தேன்
நீங்கள் இல்லாமல்
என் வாழ்க்கை
இல்லை என்று
முடிவெடுத்திருந்தேன்
ஆனால்
நீங்கள் என்னை
ஏற்றுக் கொள்ள
முடியாது என்கிறீர்கள்
அதற்காகப் பல
காரணங்களைச்
சொல்கிறீர்கள்
நம்முடைய
காதல்
சால்வன்
:
இறந்தது
இறந்தது தான்
அம்பை :
உயிர்ப்பெற
வழியில்லையா
சால்வன்
:
வழியேயில்லை
அம்பை :
உங்கள் முடிவை
மாற்றிக் கொள்ள
மாட்டீர்களா
சால்வன்
:
அதற்கு வாய்ப்பே
இல்லை
அம்பை :
இப்போது நான்
என்ன செய்ய
வேண்டும்
சால்வன்
:
நீங்கள் செல்லலாம்
(அம்பை செல்லாமல்
அமைதியாக நின்று
கொண்டிருந்தாள்)
சால்வன்
:
காவலர்களே
அவரை
வெளியேற்றுங்கள்
(காவலர்கள்
ஓடி வருகிறார்கள்)
அம்பை :
என் மேல்
கை
வைப்பவருடைய
கை
அவர்கள் உடலில்
இருக்காது
(காவலர்கள் பயந்து
விலகி நின்று
கொள்கிறார்கள்)
சால்வன்
:
தாங்கள்
அமைதியாக
வெளியேறி விட்டால்
உங்களுக்கு நல்லது
அம்பை :
நல்லது எது
என்று இப்போது
தான் தெரிந்து
கொண்டேன்.
காதலன்
எப்படிப்பட்டவன்
என்பதை இப்போது
தான் தெரிந்து
கொண்டேன்
காதலியை
கைப்பிடிப்பதற்காக
எந்த எதிர்ப்பு
வந்தாலும்
எதிர்த்து நின்று
போராடிய
காதலர்கள்
வாழ்ந்த நாட்டில்
காதலிக்காக
அனைத்தையும்
இழந்த
காதலர்கள்
வாழ்ந்த நாட்டில்
காதலிக்காக
தன்னுடைய
உயிரையே
கொடுத்த
காதலர்கள்
வாழ்ந்த நாட்டில்
காதலின்
புனிதம்
தெரியாமல்
என்னை
உதாசீனப்படுத்திய
சால்வ மன்னா
என்னுடைய
காதலை நீ
புரிந்து
கொள்ளும் போது
யாரும் தொட
முடியாத
மிக உயரத்தில்
இருப்பாள்
இந்த அம்பை
என்பதை மட்டும்
நினைவில் கொள்
(என்று சொல்லி
விட்டு அந்த
அறையை விட்டு
வெளியேறினாள்
அம்பை)
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----06-03-2022
-----ஞாயிற்றுக்கிழமை
////////////////////////////////////////
No comments:
Post a Comment