ஜபம்-பதிவு-707
(சாவேயில்லாத
சிகண்டி-41)
விசித்திர வீர்யன் :
பின்னர் எதற்காக
வந்திருக்கிறீர்கள்
அம்பை :
நியாயம் பெற்றுத்
தாருங்கள் என்பதைக்
கேட்கவே வந்திருக்கிறேன்
விசித்திர வீர்யன் :
தவறு செய்தது
யார் என்று
சொல்லுங்கள்
உண்மையாகவே
உங்களுக்கு அநீதி
இழைக்கப்பட்டிருந்தால்
கண்டிப்பாக
நியாயம் கிடைக்கும்
அம்பை :
எனக்கு அநீதி
இழைத்தது பீஷ்மர்
விசித்திர வீர்யன் :
என்னுடைய அண்ணன்
நீதியின் வடிவமாக
இருப்பவர்
அநீதி இழைக்க
மாட்டார்
அம்பை :
பீஷ்மர் அநீதி
இழைத்தாரா இல்லையா
என்பதை
பீஷ்மரால் பாதிக்கப்பட்ட
என்னால் தான்
சொல்ல முடியும்
விசித்திர வீர்யன் :
எப்படி
பாதிக்கப்பட்டீர்கள்
அம்பை :
நான்
சௌபால நாட்டு
மன்னன் சால்வனை
காதலித்தேன்
சுயம்வரத்தில் அவரை
மாலையிட்டு
திருமணம் செய்ய
முடிவு செய்தேன்
ஒரு பெண்ணை
சிறை எடுப்பதற்கு
முன்னர்
அந்தப் பெண்
யாரையாவது
காதலிக்கிறாளா
என்பதை
அறிந்து கொள்ளாமல்
பீஷ்மர் என்னை
சிறை எடுத்தார்
விசித்திர வீர்யன் :
உங்கள் விருப்பம்
தெரிந்த பின்
தான் உங்களை
சால்வனிடம் அனுப்பி
வைத்து விட்டாரே
அம்பை :
சால்வன்
சொல்கிறார்
பீஷ்மரை வீழ்த்தி
என்னை பெற்றிருந்தால்
அவருக்கு பெருமையாம்
பீஷ்மரால் அனுப்பி
வைக்கப்பட்டதால் நான்
பிச்சைப் பொருளாம்
பீஷ்மரால்
கொடுக்கப்பட்ட
பிச்சைப் பொருளை
ஏற்றுக் கொண்டால்
சௌபால நாட்டு
மக்கள் ஏளனம்
செய்வார்களாம்
அவருடைய வீரத்தை
இகழுவார்களாம்
என்னை
ஏற்றுக் கொண்டால்
அவருக்கு அவமானமாம்
யாரும் மதிக்க
மாட்டார்களாம்
அதனால் என்னை
ஏற்றுக் கொள்ள
மாட்டேன் என்று
என்னை
அவமானப்படுத்தி
அனுப்பி
வைத்து விட்டார்
வாழ்வதற்கு
வழி இன்றி
அடைக்கலத்திற்காக
பெற்றோர்களைத் தேடி
காசி நாடு சென்றேன்
பீஷ்மர் சிறை
எடுத்துச் சென்ற
என்னை
ஏற்றுக் கொண்டால்
காசி நாடு
பீஷ்மரின்
கோபத்திற்கு ஆளாக
நேரிடுமாம்
பீஷ்மரின் கோபத்திற்கு
ஆளாகாமல்
காசி நாட்டையும்
காசி நாட்டு
மக்களையும்
காப்பாற்றும் பொறுப்பு
என்னுடைய தந்தை
பீமதேவனுக்கு
இருக்கிறதாம்
மகளா நாடா
என்றால் அவருக்கு
நாடு தான்
முக்கியமாம்
நாட்டிற்காக
மகளையும் பலி
கொடுப்பாராம்
அதற்காகத்
தயாராகியும்
விட்டாராம்
------ஜபம் இன்னும் வரும்
------எழுத்தாளர்
------K.பாலகங்காதரன்
-----06-03-2022
-----ஞாயிற்றுக்கிழமை
////////////////////////////////////////
No comments:
Post a Comment