March 06, 2022

ஜபம்-பதிவு-701 (சாவேயில்லாத சிகண்டி-35)

 ஜபம்-பதிவு-701

(சாவேயில்லாத

சிகண்டி-35)

 

(சௌபால நாட்டை

விட்டு வெளியேறி

காசி நாட்டை

நோக்கி சென்றாள்

அம்பை

 

காசி நாட்டின்

அரண்மனைக்குள்

நுழைகிறாள்.

அவளை

அடையாளம்

கண்டு கொண்ட

அரண்மனைக்

காவலர்கள் விலகி

வழி விடுகிறார்கள்.

 

அம்பை காசி நாட்டு

மன்னன் பீமதேவன்

இருக்கும் அறைக்குள்

நுழைகிறாள்.

அங்கு

காசி நாட்டு

மன்னன் பீமதேவன்,

அவருடைய

மனைவி புராதேவி,

அமைச்சர் பால்குனர்

மற்றும் பலர்

பேசிக் கொண்டு

இருக்கின்றனர்.

அம்பை அறைக்குள்

வருவதைப் பார்த்ததும்

பீமதேவன்

அம்பையிடம் பேசத்

தொடங்கினான்)

 

பீமதேவன் :

எதற்காக

வந்திருக்கிறீர்கள்

 

அம்பை :

அடைக்கலம் தேடி

 

பீமதேவன் :

அடைக்கலம்

அனைத்தையும்

இழந்தவர்களுக்கு

அளிப்பது

 

அம்பை :

நானும்

அனைத்தையும்

இழந்தவள் தான்

 

பீமதேவன் :

அனைத்தையும்

பெற்ற

அஸ்தினாபுரத்தின்

அரசி எப்படி

அனைத்தையும்

இழந்தவளாக

இருக்க முடியும்

 

அம்பை :

சால்வனைக்

காதலித்ததால்

விசித்திர வீர்யனைத்

திருமணம் செய்து

கொள்ள மாட்டேன்

என்று

அஸ்தினாபுரத்தைப்

புறக்கணித்தேன்

 

சால்வன்

தனக்கென்று

ஒரு நியாயத்தை

வைத்திருக்கிறார்

தான் செய்வது

தான் சரி என்று

வாதிடுகிறார்

 

என்னை ஏற்றுக்

கொள்ள மாட்டேன்

என்று சொல்லி

விட்டார்

 

என்னுடைய மனதைப்

புண்படுத்தும்

வகையில்

பேசி விட்டார்

 

என் பக்கம் உள்ள

நியாயத்தைப்

புரிந்து கொள்ளாமல்

என்னைப்

புறக்கணித்து விட்டார்

 

புறக்கணித்த அவரிடம்

அடைக்கலமாக

இருப்பதை விட

புரிந்து கொண்ட

உங்களிடம்

அடைக்கலமாக

இருக்கலாம் என்று

அடைக்கலம் தேடி

உங்களிடம் வந்தேன்

 

பீமதேவன் :

சால்வன் உங்களை

ஏற்கமாட்டேன் என்று

சொன்ன பிறகு

நீங்கள் சென்றிருக்க

வேண்டியது

அஸ்தினாபுரத்திற்கு

 

அம்பை :

பிள்ளைகளுக்கு

மன வருத்தம்

என்றால்

அவர்கள் நாடிச்

செல்வது

பெற்றோர்களைத் தானே

 

அதனால் தான்

உங்களைத்

தேடி வந்தேன்

 

பீமதேவன் :

பீஷ்மரால் சிறை

எடுத்துச்

செல்லப்பட்டவர் நீங்கள்

பீஷ்மரின் அனுமதி

இல்லாமல்

உங்களை ஏற்றுக்

கொள்ள முடியாது

 

மீறி ஏற்றுக்

கொண்டால்

பீஷ்மரின் கடுமையான

கோபத்திற்கு

நானும்

காசி நாட்டு

மக்களும்

ஆளாக நேரிடும்

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

No comments:

Post a Comment