May 27, 2022

ஜபம்-பதிவு-761 (சாவேயில்லாத சிகண்டி-95)

 ஜபம்-பதிவு-761

(சாவேயில்லாத

சிகண்டி-95)

 

இமயமலை சாரலை

அடைந்த அம்பை

அங்குள்ள பாகூத

நதிக்கரையில்

ஒரு

முருகன் சிலை

இருப்பதைக்

கண்டாள்.

அந்த முருகன்

சிலைக்கும்

தனக்கும்

இடையே ஒரு

உயிர்த் தொடர்பு

இருப்பதை

உணர்ந்து

கொண்டாள்.

 

தனக்கும்

முருகன் சிலைக்கும்

இடையே

உயிர்க்கலப்பை

உருவாக்கி

அதன் மூலம்

முருகனை

வரவழைத்து

பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

என்ற வரத்தைப்

பெறுவதற்காக

மந்திர

உச்சாடனத்துடன்

கூடிய தவத்தை

செய்ய முடிவு

எடுத்தாள்

 

தனக்கும்

முருகன் சிலைக்கும்

இடையே

உயிர்க்கலப்பை

உருவாக்க

அம்பை முருகன்

சிலையை

யந்திரமாக மாற்றி

முருகன் மந்திரத்தை

உச்சாடனம் செய்து

கொண்டே

பன்னிரெண்டு

ஆண்டுகள்

கால் கட்டைவிரலை

ஊன்றி நின்று

கடுந்தவம்

செய்தாள்

 

இதனால்

இருவருக்கும்

இடையே

உயிர்க்கலப்பு

உண்டாகி

தந்திரம்

உயிர்ப்பெற்று

இயங்க

ஆரம்பித்தது.

 

மந்திரம் யந்திரம்

தந்திரம் மூன்றும்

ஒன்றாக இயங்கி

அம்பைக்கும்

முருகனுக்கும்

இடையே

உயிர்க்கலப்பு

உண்டாகி

விட்டதால்

அம்பைக்கு வரம்

அருளுவதற்கு

முருகப் பெருமானே

நேரில் வந்து

விட்டார்.

 

அம்பையின்

முன்னால் தோன்றிய

முருகப் பெருமான்

அம்பையை

நோக்கி பேசத்

தொடங்கினார்.

 

முருகன் :

அம்பையே

பக்தன்

எப்படிப்பட்டவர்

என்பது

முக்கியமில்லை

எதற்காக என்னை

அழைக்கிறார்

என்பது

முக்கியமில்லை

எப்படி

அழைக்கிறார்

என்பதே முக்கியம்

 

உன்னுடைய

தவ வலிமை

என்னை

இங்கே

அழைத்து

வரவில்லை

உன்னுடைய

எண்ணத்தின்

வலிமையே

என்னை இங்கே

அழைத்து

வந்திருக்கிறது

 

ஒரு ஆண் செய்ய

பயப்படும் தவத்தை

ஒரு ஆணாலும்

செய்ய முடியாத

தவத்தை

ஒரு பெண்ணான

நீ செய்திருக்கிறாய்

 

என்னிடம் வரம்

வேண்டி

பல ஆண்டு

காலம் தவம்

செய்தவர்களுக்கே

வரம் அருளாத

நான்

உன்னுடைய

எண்ணத்தின்

வலிமையால்

குறுகிய

காலத்திலேயே

வரம் அருள

வந்து விட்டேன்

 

உன்னுடைய

தவத்தின்

வலிமையை விட

எண்ணத்தின் வலிமை

வீரியம் மிக்கதாக

இருக்கிறது

 

ஆனால்

அம்பையே

ஞானம்

வேண்டித் தான்

அனைவரும் என்னை

நோக்கித் தவம்

செய்வார்கள்

ஒருவரைக்

கொல்ல வேண்டும்

என்று தவம்

செய்தது நீ தான்

பீஷ்மரைக் கொல்ல

வேண்டும்

என்று தவம்

செய்திருக்கிறாய்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------26-05-2022

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment