May 27, 2022

ஜபம்-பதிவு-763 (சாவேயில்லாத சிகண்டி-97)

 ஜபம்-பதிவு-763

(சாவேயில்லாத

சிகண்டி-97)

 

அன்பையும்

கருணையையும்

விட்டு விட்டு

நான் எப்போது

வஞ்சினம்

கொண்டேனோ

அதன் காரணமாகத்

தான் நீங்கள்

இப்போது வரம்

கொடுக்க காட்சி

அளித்து இருக்கிறீர்கள்

 

இதனால்

அன்பும் கருணையும்

ஒரு பெண்ணைக்

காப்பாற்றாது

வஞ்சினம் தான்

ஒரு பெண்ணைக்

காப்பாற்றும்

என்ற முடிவுக்கு

வந்து விட்டேன்

 

முருகன் :

நீ எடுத்த

முடிவு தவறாக

இருக்கலாம்

அல்லவா

 

அம்பை :

அனுபவத்தின்

மூலம் கிடைத்த

முடிவு

எப்படி தவறாக

இருக்க முடியும்

தவறாக இருப்பதற்கு

வாய்ப்பே இல்லை

 

முருகன் :

பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

என்ற உன்னுடைய

எண்ணத்தில்

 

அம்பை :

எந்த மாற்றமும்

இல்லை

பீஷ்மரைக்

கொன்றே ஆக

வேண்டும்

 

என்னுடைய

எண்ணத்தை

நீங்கள் தான்

நிறைவேற்ற

வேண்டும்

 

முருகன் :

பீஷ்மரைக்

கொல்ல வேண்டும்

என்ற உன்னுடைய

எண்ணத்தை

நிறைவேற்றப்

போவது இந்த

மாலையே

 

அம்பையே

இந்த மாலை

வாடாத மாலை

தாமரை மலர்களால்

தொடுக்கப்பட்ட மாலை

இந்த மாலையை

உன் சார்பாக

யார் கழுத்தில்

போட்டு கொண்டு

பீஷ்மரை எதிர்த்து

போர் செய்கிறாரோ

அவரே போரில்

பீஷ்மரைக் கொல்வார்

 

அம்பை :

முருகப்பெருமானே

இந்த மாலையை

வேறு ஒருவர்

கழுத்தில்

போட்டு கொண்டு

பீஷ்மருடன் போரிட்டு

பீ‌ஷ்மரைக்

கொல்வதை விட

அந்த மாலையை

நானே

போட்டுக் கொண்டு

பீஷ்மருடன் போரிட்டு

பீஷ்மரைக்

கொல்ல

முடியாதா

 

முருகன் :

காலம் போட்டு

வைத்திருக்கும்

கணக்குப்படி

இப்போதைக்கு

அது சாத்தியமில்லை

 

விதிப்படி சில

விஷயங்கள்

நடக்க வேண்டி

இருக்கிறது

 

இப்போதைக்கு என்ன

நடக்க வேண்டுமோ

அது தான் நடக்க

வேண்டிய

சூழ்நிலை நிலவிக்

கொண்டு இருக்கிறது

 

பீஷ்மருக்கு இப்போது

நல்ல காலம்

நடந்து

கொண்டிருக்கிறது

 

கெட்ட காலம்

நடந்து

கொண்டிருக்கும்

உன்னால்

இந்த மாலையை

போட்டுக் கொண்டு

பீஷ்மரை எதிர்த்து

போரிட்டாலும்

உன்னால்

பீஷ்மரைப் போரில்

கொல்ல முடியாது

 

நல்ல காலம்

நடந்து

கொண்டிருக்கும்

ஒருவர்

உன் சார்பாக

இந்த மாலையை

போட்டுக் கொண்டு

பீஷ்மரை எதிர்த்து

போரிடும் போது

அவர் பீஷ்மரைக்

கொல்வார்

 

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------26-05-2022

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment