May 27, 2022

ஜபம்-பதிவு-762 (சாவேயில்லாத சிகண்டி-96)

 ஜபம்-பதிவு-762

(சாவேயில்லாத

சிகண்டி-96)

 

அம்பை :

யாருக்கு என்ன

வேண்டுமோ அதை

வேண்டித் தானே

தவம் செய்வார்கள்

 

முருகன் :

ஞானம் உனக்கு

வேண்டாமா

 

அம்பை :

அசிங்கங்கள்

அவமானங்கள்

ஏளனங்கள்

ஆகியவற்றால்

பாதிக்கப்பட்டு

விரக்தியின்

எல்லைக்குச் சென்ற

நான்

வாழ்க்கையில்

அனுபவத்தின்

மூலமாகவே

ஞானத்தைப்

பெற்று விட்டேன்

அதனால்

ஞானம் எனக்குத்

தேவையில்லை

 

முருகன் :

நான் ஞானத்தை

நிறைய பேருக்கு

கொடுத்து

இருக்கிறேனே

 

அம்பை :

வாழ்க்கையில்

அனுபவத்தின்

மூலமாக ஞானத்தை

பெற முடியாதவர்கள்

தவம் செய்து

உங்களிடமிருந்து

ஞானத்தைப்

பெற்று இருப்பார்கள்

 

முருகன் :

கடவுளிடம் இருக்கும்

உயர்ந்த குணமான

அன்பும் கருணையும்

பெண்களிடம்

தானே இருக்கிறது

 

அந்த அன்பையும்

கருணையையும்

கொண்டு

ஏன் நீ

பீஷ்மரை

மன்னிக்கக் கூடாது

 

அம்பை :

அன்பும் கருணையும்

என்னிடம்

இருந்த போது தான்

சால்வனைச்

சந்தித்து என்னை

ஏற்றுக் கொள்ளச்

சொன்னேன்

 

சால்வன் என்னை

ஏற்றுக் கொள்ளாமல்

என்னை

அவமானப்படுத்தி

அனுப்பி விட்டான்

 

அன்பும் கருணையும்

என்னிடம்

இருந்த போது தான்

என்னுடைய

பெற்றோர்களைச்

சந்தித்து எனக்கு

அடைக்கலம்

அளிக்கச்

சொன்னேன்

எனக்கு அடைக்கலம்

அளிக்காமல்

என்னை

அவமானப்படுத்தி

அனுப்பி விட்டார்கள்

 

அன்பும் கருணையும்

என்னிடம்

இருந்த போது தான்

என் வாழ்க்கை

பாதிக்கப்பட்டதற்கு

நீங்கள் தான்

காரணம்

நீங்கள் தான்

என்னை திருமணம்

செய்ய

வேண்டும் என்று

பீஷ்மரைக் கேட்டேன்

 

பலபேர்

முன்னிலையில்

என்னை திருமணம்

செய்து கொள்ள

மாட்டேன்

என்று சொல்லி

என்னை

அவமானப்படுத்தி

அனுப்பி விட்டான்

 

அன்பும்

கருணையும் கொண்டு

இந்த உலகத்தில்

ஒரு பெண்ணால்

வாழ முடியாது

என்பதைத்

தெரிந்து கொண்டேன்

 

அன்பும் கருணையும்

கொண்ட பெண்ணை

இந்த உலகத்தில்

உள்ள மக்கள்

வாழ விட

மாட்டார்கள்

என்பதைத்

தெரிந்து கொண்டேன்

 

அன்பையும்

கருணையையும்

விட்டு விட்டு

நான் எப்போது

வஞ்சினம்

கொண்டேனோ

அப்போது தான் 

பரசுராமர்

பீஷ்மரைக்

கொல்வதற்காக

பீஷ்மருடன்

போரிட்டார்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------26-05-2022

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment