August 04, 2024

ஜபம்-பதிவு-1005 மரணமற்ற அஸ்வத்தாமன்-137 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-1005

மரணமற்ற அஸ்வத்தாமன்-137

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

இத்தகைய ஒரு போரைத் தான் இப்போது

இப்போது நான் நடத்திக் கொண்டிருக்கிறேன்

நான் செய்யும் இந்த போரைப் பின்பற்றித் தான்

வருங்காலத்தில் போர்கள் நடைபெறப்போகிறது

 

நான் செய்யும் போர் தான்

வருங்காலத்தில் செய்யப்படவிருக்கும் போருக்கு முன்னோடி

 

நான் சொல்வது உனக்குப் புரியாது

எதிர்காலத்தைப் பற்றிப் பேசினால் யாருக்கும் புரியாது

 

அனைவரும் நிகழ்காலத்தையும்

இறந்த காலத்தையும் தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்

எதிர்காலத்தைக் கனவு கண்டு கொண்டு இருக்கிறீர்கள்

 

என் தந்தையைக் கொல்வதற்காக அவதாரம் எடுத்து வந்தாய்

என் தந்தையிடமே சீடனாக சேர்ந்தாய்

என் தந்தையிடம் அனைத்து கலைகளையும் கற்றாய்

போர்க்கலைகளில் சிறந்தவனாக விளங்கினாய்

 

என் தந்தை  ஆயுதம் வைத்துக் கொண்டிருக்கும் போது

அவருடன் போரிட்டு அவரைக் கொன்று இருக்க வேண்டும்

ஒரு வீர மரணத்தை அவருக்கு அளித்திருக்க வேண்டும்

ஆனால் நீ என்னுடைய தந்தை ஆயுதம் எதுவும் இல்லாத போது

ஆயுதங்கள் எல்லாவற்றையும் கீழே போட்டு விட்டு

தியானத்தில் இருந்த போது அவரைக் கொன்று இருக்கிறாய்

 

பெரிய சாதனை செய்யப்போவது போல பிறந்தாய்

பெரிய சாதனை செய்யப்போவது போல வளர்ந்தாய்

சாதனை செய்வாய் என்று அனைவரும்

எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் போது

ஆயுதங்கள் அனைத்தையும் கீழே போட்டு விட்டு

ஆயுதம் எதுவும் இல்லாமல்

தவத்தில் இருந்த என்னுடைய தந்தையைக் கொன்றாய்

 

இந்த செயலைச் செய்வதற்கு நீ ஏன் பிறக்க வேண்டும்

நீ செய்த செயலை யார் வேண்டுமானாலும் செய்யலாம்

சாதாரண ஒரு மனிதனே நீ செய்த செயலைச் செய்வான்

 

நீ செய்த செயலுக்கு உனக்கு தண்டனை கொடுக்காமல் செல்ல மாட்டேன்

என்னுடைய தண்டனையிலிருந்து நீ தப்பிக்கவே முடியாது

 

மரண வேதனையை உனக்குக் கொடுக்கப் போகிறேன்

மரணம் எப்படி இருக்கும் என்பதை உனக்குக் காட்டப் போகிறேன்

என்னை கொன்று விடு என்னைக் கொன்று விடு என்று

நீ என்னைக் கெஞ்ச வேண்டும்.

மரண பயம் உன் முகத்தில் தெரிவதை நான் பார்க்க வேண்டும்

 

அஸ்வத்தாமன் அவனைக் கைகளால் குத்தினான் வயிற்றில் எட்டி உதைத்தான். முடியைப் படித்து தரையில் இழுத்து வந்தான் மார்பில் ஓங்கி ஓங்கி குத்தினான்

 

என்னை வாளால் வெட்டி விடு. இல்லை அம்பால் துளைத்து விடு. ஒரு வீரனுக்கு உரிய மரணத்தை எனக்குக் கொடு. என்னை சாக விடு.

 

என் தந்தையைக் கொன்ற உனக்கு வீர மரணம் கிடையாது. கொடிய மரணம் தான். இழிவான மரணம் தான்.

 

திருஷ்டத்யும்னனின் கழுத்தை நெறித்தான். நெறித்துக் கொண்டே இருந்தான். கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிதுங்கி வெளியே வந்தது. கொடுமையான முறையில் திருஷ்டத்யும்னன் இறந்தான்.

 

தொடர்ந்து அஸ்வத்தாமன் சிகண்டியைக் கொன்றான். பல வீரர்களைக் கொன்றான். உயிருக்கு பயந்து ஓடியவர்களை யானை மிதித்து கொன்றது. எஞ்சியவர்களை கிருபரும், கிருதவர்மனும் கொன்றார்கள்.

 

ஒரு கூடாரத்தில் ஐந்து நபர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். ஒரு மந்திரத்தை ஜெபித்து தனது வில்லிலிருந்து ஒரு பாணத்தை விடுகிறான். அந்த ஒன்று ஐந்து பாணங்களாகி அந்த ஐவரையும் கொன்று விடுகிறது.

 

அங்கிருந்து சென்று மந்திரத்தை ஜெபித்து ஒரு பாணத்தை விடுகிறான். அது ஒரு மாபெரும் தீ உருண்டையாக உருவாகி கீழே விழுகிறது. அது அனைத்து இடத்தையும் எரிக்கிறது. கூடாரத்தை எரிக்கிறது. விலங்குகளை எரிக்கிறது. மனிதர்களை உயிரோடு எரிக்கிறது. உயிருக்கு பயந்த ஓடுபவர்களை எரிக்கிறது. அங்குள்ள அனைத்தையும் எரிக்கிறது. அனைத்தும் எரிந்து சாம்பலாகி விடுகிறது. பேரழிவு ஏற்பட்டது போல் அந்த இடமே காட்சியளிக்கிறது. அந்த இடமே ஒன்றும் இல்லாமல் அழிந்து விட்டது.

 

அந்த பாசறையில் இருந்த ஒருவரும் மிஞ்சவில்லை. அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள். விலங்குகள் உட்பட அனைத்தும் கொல்லப்பட்டு விட்டது

 

18 நாள் நடைபெற்ற குருஷேத்திரப் போரை விட

அன்றைய இரவில் அஸ்வத்தாமன் நடத்திய போரே மிகக் கொடுமையானது

யாரும் நினைத்துப் பார்க்க முடியாத போர்

யாரும் இனி செய்ய முடியாத போர்

பேரழிவு உண்டாக்கப்பட்ட போர்

தனி ஒருவனால் நடத்தப்பட்டப் போர்

இத்தகைய ஒரு போரைத் தான் அஸ்த்தாமன் செய்து முடித்தான்

 

பாண்டவர்கள் இறந்த செய்தியை துரியோதனனிடம் சொல்வதற்கு துரியோதனனைத் தேடி விரைந்து வந்தான்

 

-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----04-08-2024

----ஞாயிற்றுக் கிழமை

/////////////////////////////////

 

 

 

No comments:

Post a Comment