ஜபம்-பதிவு-1001
மரணமற்ற அஸ்வத்தாமன்-133
(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)
செத்த பாம்பைக் கூட அர்ஜுனன் நேருக்கு நேராக நின்று
அவனால் கொல்ல முடியவில்லை
சதி செய்து கொன்றான் அவன் எல்லாம் ஒரு வீரன்
வில்லுக்கு விஜயன் என்ற பட்டம் வேறு
இத்தகைய கர்ணனை
நட்புக்கு துரோகம் செய்த கர்ணனை
நட்பு என்றால் என்ன என்று தெரியாத கர்ணனை
துரோகியாக உன்னுடன் இருந்த கர்ணனை
இடையில் வந்த கர்ணனை நண்பன் என்றாய்
ஆனால் இளமைக்காலம் முதல் இருந்த என்னை
உனக்காக வாழ்ந்து கொண்டிருந்த என்னை
உனக்காக எதுவும் செய்யத் துணிந்த என்னை
சந்தேகம் கொண்டு என்னை
நண்பன் என்ற நிலையில் இருந்து விலக்கி வைத்தாய்
சந்தேகம் கொண்டாலும் அழிந்து விடுவர்
நம்முடன் இருப்பவர்களின் மதிப்பு தெரியாவிட்டாலும்
அழிந்து விடுவர் என்பதற்கு நீ மிகச் சிறந்த உதாரணம் ஆகிவிட்டாய்
துரியோதனன் : நடந்து விட்ட தவறுக்காக என்னை மன்னித்து
விடு
அஸ்வத்தாமன் : இப்போது மன்னிப்பு கேட்டு என்ன பயன் ஏற்படப்
போகிறது
உன் வாழ்க்கை முடியப் போகிறது
இருந்தாலும் நான் உன் நண்பன்
நீ உயிர் துறப்பதற்கு முன் உன் கனவுகளை நிறைவேற்றுகிறேன்
நீ என்ன நினைக்கிறாயோ அதை செய்து காட்டுகிறேன்
பாண்டவர்களை அழித்துக் காட்டுகிறேன்.
பாண்டவர்களுக்கு வீரம் என்றால் என்ன என்று காட்டுகிறேன்
வீரன் எப்படி இருப்பான் என்பதைக் காட்டுகிறேன்
நண்பன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை
இந்த உலகத்திற்கு நிரூபித்துக் காட்டுகிறேன்
நண்பா இது வரை யாரும் செய்யாத செயலை
இந்த உலகம் இது வரை கண்டிராத செயலை
இந்த உலகம் இனி காண முடியாத செயலை
நான் உனக்காக செய்து காட்டுகிறேன்
பாண்டவர்களை நான் கொன்று காட்டுகிறேன்
பாண்டவர்களின் படைகளை நான் அழித்துக் காட்டுகிறேன்
துரியோதனன் :
நண்பா உன்னை நான் கௌரவர்களின் படைத்தளபதியாக நியமிக்கிறேன்
அஸ்வத்தாமன் : பதவிக்காக ஆசைப்படும் பாண்டவர்கள் என்று
என்னை நினைத்து விட்டாயா?
எந்தப் பதவியும் எனக்குத் தேவையில்லை. எந்தப் பதவிக்கும் நான் ஆசைப்பட்டவன்
கிடையாது.
துரியோதனன் :
எனக்காக நீ கௌரவர்களின் படைத்தளபதியாக வேண்டும் இது என் விருப்பம்
உன்மேல் நான் கொண்ட சந்தேகம் தவறானது என்பதை உணர்ந்து கொண்ட ஒரு நண்பனின்
வேண்டுகோளாக இதை ஏற்றுக் கொள்.
அஸ்வத்தாமன் : அடிபட்டுக் கிடந்தாலும் சிங்கம் சிங்கம்
தான். சிறு நரியாகி விடாது.
வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டாலும் நீ எனக்கு எப்போதும் நண்பன் தான்
மன்னன் தான்
நண்பா நீ என்னைப் பற்றி உணர்ந்து கொள்ள வேண்டும்
என்பதற்காகத் தான் சொன்னேன்
என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்
என்பதற்காகத் தான் சொன்னேன்
என்னைப் பற்றி தெரியாமல் நீ இறந்து விட்டால்
என்னைப் பற்றி உணராமல் நீ இறந்து விட்டால்
என்னுடைய மதிப்பு உனக்குத் தெரியாமல் போய் விடும்
என்னுடைய நட்பின் பெருமை உனக்குத் தெரியாமல் போய் விடும்
என்ற காரணத்தினால் தான் நான் சொன்னேன்
நீ ஒரு அரசன் என்னிடம் மன்னிப்பு கேட்கக் கூடாது
நீ என்னிடம் கையேந்தக் கூடாது நீ கட்டளையிடு நான் செய்கிறேன்
துரியோதனன் :
அரசன் என்ற முறையில் நான் உனக்கு கட்டளையிட விரும்பவில்லை. நண்பன் என்ற முறையில்
நான் கேட்கிறேன்
கௌரவர்களின் படைத்தளபதியாக நீ ஆக வேண்டும்
அஸ்வத்தாமன் : நீ அரசனாக இருந்தாலும் நண்பனாக இருந்தாலும்
உன் பேச்சை நான் என்றும் தட்டியது இல்லை. உனக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் இந்த
நண்பன் படைத்தளபதியாக மாட்டானா
நான் ஆகிறேன்
கௌரவர்களின் படைத்தலைவனாக ஆகிறேன்
பாண்டவர்களை அழிக்கிறேன்
துரியோதனன் :
எனக்கு இது போதும்
துரியோதனன் அஸ்வத்தாமனை கௌரவர்களின் படைத்தளபதியாக
நியமிக்கிறான் பீஷ்மர், துரோணர், கர்ணன் ,சல்லியன்
என்ற வரிசையில் அஸ்வத்தாமன்
கௌரவர்களின் படைத்தளபதியாக ஐந்தாவதாக பொறுப்பேற்றான்
துரியோதனன் :
பாண்டவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்பதற்கு நான் காத்துக் கொண்டிருப்பேன்.
உயிரைப் பிடித்துக் கொண்டு உனக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன். விரைவாக வந்து விடு.
-----ஜபம்
இன்னும் வரும்
-----K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர்
----04-08-2024
----ஞாயிற்றுக் கிழமை
/////////////////////////////////
No comments:
Post a Comment