ஜபம்-பதிவு-773
(சாவேயில்லாத
சிகண்டி-107)
அம்பை :
நான் பிறவி
எடுக்கும் போது
எடுத்த அந்தப்
பிறவியில்
பீஷ்மனைக்
கொல்ல முடியாது
என்ற விஷயம்
எனக்குத் தெரிந்தவுடன்
எடுத்த இந்தப்
பிறவி எனக்குத்
தேவையில்லை
என்று முடிவு செய்து
தீயில் இறங்கி
இறப்பேன்
இப்படியே 999
பிறவியிலும்
இறப்பேன்
ஆயிரமாவது
பிறவியில்
பீஷ்மரைக் கொல்ல
முடியும் என்று
தெரிந்தவுடன்
ஆயிரமாவது
பிறவியில்
பீஷ்மரைக்
கொல்வேன்
சிவன் :
பாதிக்கப்பட்டவர்கள்
யாராக இருந்தாலும்
பாதிப்பு ஏற்பட்டவுடன்
ஓடி போய் ஒளிந்து
கொள்வார்கள்
சபதம் ஏற்றவர்கள்
ஏற்ற சபதத்தை
நிறைவேற்ற
முடியாமல்
மண்ணுக்குள்
மறைந்து போவார்கள்
கொள்கை
மேற்கொண்டவர்கள்
கொள்கையில் வெற்றி
பெற முடியாமல்
அழிந்து போவார்கள்
கொள்கையுடன்
இருக்கிறேன் என்று
சொல்லிக் கொண்டு
திரிந்து
கொண்டிருப்பவர்கள்
கொள்கையை விட
உயர்ந்த விஷயம்
கிடைத்தவுடன்
அவர்கள்
மேற்கொண்ட
கொள்கையை விட்டு
விட்டு சென்று
விடுவார்கள்
தன் கொள்கையை
நிறைவேற்ற
முடியவில்லை
என்று
நினைப்பவர்களும்
தன் கொள்கை
நிறைவேறாது என்று
முடிவு எடுப்பவர்களும்
தன் கொள்கைக்காக
அனைத்தையும்
இழக்க வேண்டி
இருக்கிறது என்று
நினைப்பவர்களும்
தாங்கள் மேற்கொண்ட
கொள்கையை
விட்டு விட்டு
சென்று விடுவார்கள்
ஆனால்
அம்பையே
நீ மேற்கொண்ட
கொள்கைக்காக
எவ்வளவு துன்பம்
வந்தாலும்
அதை எல்லாம்
எதிர்த்து நிற்கிறாய்
அனைத்தையும்
இழந்தாலும்
உன் கொள்கையில்
இருந்து மாறாமல்
இருக்கிறாய்
உலகத்திலேயே
உயர்ந்த விஷயம்
கிடைத்தும் அதை
வேண்டாம் என்கிறாய்
பிறப்பை அறுக்கும்
முக்தி கிடைத்தும்
அதை ஏற்க
மறுக்கிறாய்
வந்திருப்பது
கடவுளாக இருந்தாலும்
உன்
கொள்கைக்காக
எதிர்க்கிறாய்
உன்னைப் பார்த்து
நான் பிரமிக்கிறேன்
அம்பையே
உன்னைப் போல
ஒரு பெண் இந்த
உலகத்தில்
பிறக்கவும் இல்லை
இனி பிறக்கப்
போவதும் இல்லை
இந்த உலகம்
கண்டிராத புனிதப்
பிறவியம்மா நீ
உன்னுடைய இடத்தை
யாராலும்
நிரப்ப முடியாது
பாதிக்கப்பட்ட நீயே
உன்னுடைய
பாதிப்புக்கு
காரணமான
பீஷ்மனைக்
கொல்வதற்காக
நீயே இறங்கி
செயல்களைச்
செய்கிறாய்
என்று
நினைக்கும் போது
எனக்கே
பெருமையாக
இருக்கிறது
உனக்கு வரம்
கொடுப்பதால்
நானும் பெருமை
அடைகிறேன்
வரமும் பெருமை
அடைகிறது
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------03-06-2022
-------வெள்ளிக் கிழமை
///////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment