ஜபம்-பதிவு-775
(சாவேயில்லாத
சிகண்டி-109)
சிவன் :
இந்தப் பிறவியை
முடித்துக் கொள்ளப்
போகிறாயா அம்பையே
அம்பை :
ஆமாம்
என்னுடைய
வாழ்க்கையின்
ஒரே லட்சியமே
பீஷ்மனைக்
கொல்வது தான்
பீஷ்மனைக்
கொல்ல முடியாத
இந்தப் பிறவி
எனக்கு எதற்கு
இப்பிறவியை
முடித்து விட்டு
அடுத்த பிறவிக்கு
சென்று பீஷ்மனைக்
கொல்வதற்கு எனக்கு
ஆசி கூறுங்கள்
(என்று சொல்லி
விட்டு அம்பை
சிவனின் காலடியில்
வீழ்ந்து வணங்கினாள்
என்ன சொல்வது
என்று தெரியாமல்
சிவன் அமைதியாக
இருந்தார்
பின் ஆசி
வழங்கினார்)
சிவன் :
பெண்களில்
பத்தினி தெய்வமாக
இருந்த நீ
இனி
தெய்வத் தாயாக
விளங்குவாய்
(என்று ஆசி
வழங்கி விட்டு
சிவன் மறைந்து
விட்டார்
சிவன்
மறைந்தவுடன்
அம்பை தீக்குளித்து
இறப்பதற்காக
குழி தோண்டி
முடித்து விட்டாள்
குழியைத் தோண்டி
முடித்த பிறகு
அதில் விறகுகளைப்
போட்டு
நெருப்பை மூட்டி
அந்த நெருப்பில்
இறங்கி உயிரை
விடுவதற்காக
அம்பை விறகுகளை
எடுக்க ஆரம்பித்தாள்
அம்பை நெருப்பில்
இறங்கி உயிர்
துறக்கப் போகிறார்
என்பதைக்
கேள்விப்பட்ட
அந்த இடத்தைச்
சுற்றி இருந்த பல
கிராமத்தைச்
சேர்ந்த மக்கள்
வேடர்கள்
நாடோடிகள் என்று
பல்வேறு
இனத்தைச் சேர்ந்த
பல்லாயிரக்கணக்கான
மக்கள்
அந்த இடத்தில்
ஒன்றாகக்
கூடி விட்டனர்
அந்தக் கூட்டத்தில்
இருந்த ஒருவர்
குனிந்து விறகுகளை
எடுத்துக் கொண்டு
இருந்த
அம்பையிடம் சென்று
பேசத் தொடங்கினார்
கூட்டத்தில்
ஒருவர் :
தாயே
நீங்கள் எங்கள்
இடத்திற்கு வந்த
நாள் முதல்
உங்களை நாங்கள்
கவனித்துக் கொண்டு
தான் இருந்தோம்
நீங்கள் யார்
என்பதையும்
எங்கிருந்து
வந்திருக்கிறீர்கள்
என்பதையும்
உங்கள் நோக்கம்
என்ன என்பதையும்
எதற்காக தவம்
செய்கிறீர்கள்
என்பதையும்
யாரை நோக்கி
தவம் செய்கிறீர்கள்
என்பதையும்
எல்லாம் ஆராய்ந்து
தெரிந்து கொண்டோம்
நீங்களும்
உங்களைச் சுற்றி
நடக்கும் எந்த ஒரு
நிகழ்ச்சியையும்
கவனத்தில்
கொள்ளாமல்
ஊன் உறக்கம்
கொள்ளாமல்
தவம் செய்வதிலேயே
உங்கள் முழு
கவனத்தையும்
செலுத்தினீர்கள்
நீங்கள் கடுமையாக
தவங்களை
செய்யும் போது
உங்களுக்கு ஏதேனும்
உதவிகள் செய்ய
வேண்டும் என்று
நினைத்தோம்
உங்கள் அருகில்
வந்தால் நீங்கள்
கோபப்படுவீர்களோ
என்று
நினைத்துத் தான்
உங்கள் அருகில்
நாங்கள் வரவில்லை
அதனால் உங்களுக்குத்
தேவையான
எந்த ஒரு
உதவியையும்
எங்களால் செய்ய
முடியவில்லை
--------ஜபம் இன்னும் வரும்
-------எழுத்தாளர்
-------K.பாலகங்காதரன்
-------03-06-2022
-------வெள்ளிக் கிழமை
///////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment