ஜபம்-பதிவு-460
(பரம்பொருள்-212)
“இந்த
சமுதாயத்தால்
தொடர்ந்து
காயப்படுத்தப்பட்டு
வாழ்வதற்கு
வழி
இல்லாமல்
அல்லாடிக்
கொண்டிருக்கும்
திருநங்கை
இனமே
மகிழ்ச்சி
அடையும்
வகையில்
செயலைச்
செய்து
விட்டு
எங்களை அழ
வைத்து
சென்று
விட்டீர்களே
! “
“இந்த
உலகத்தால்
அநாதையாக்கப்பட்ட
எங்களை
அன்பு
கரம்
நீட்டி
ஆதரவாக
இருந்தவரே
மீண்டும்
எங்களை
இந்த
உலகத்தில்
அநாதையாக
இருக்குமாறு
விட்டு விட்டு
விட்டு விட்டு
சென்று
விட்டீர்களே ! “
ஐயோ!
சென்று
விட்டீர்களே
! “
“இனி
இந்த உலகத்தில்
எங்களுக்கு
ஆதரவாக
இருக்கப்
போவது யார் ? “
“எங்களுடைய
மன
வலியை
புரிந்து
கொண்டு
எங்களுக்கு
துணையாக
இருக்கப்
போவது யார் ? “
“எங்களுக்கு
துணையாக
யாருமே
இல்லையே
இந்த
உலகத்தில்”
“நீங்கள்
இல்லாத
இந்த
உலகத்தில்
நான்
ஏன் இன்னும்
உயிரோடு
இருக்கிறேன் “
“என்னுடைய
இதயம்
ஏன்
இன்னும்
வெடிக்காமல்
இருக்கிறது
“
“என்னுடைய
இதயம்
வெடித்து
நான்
இறந்து
விடக்கூடாதா ? “
“ஐயோ
! நான்
என்
செய்வேன் என்று
அழுது
கொண்டே
அந்த
திருநங்கை
தன்னுடைய
தலையில்
சூடி
இருந்த
பூவை
எடுத்து
தரையில்
வீசினாள் ;
தன்னுடைய
நெற்றியில்
இட்டிருந்த
பொட்டை
அழித்தாள் ;
தன்னுடைய
கைகளில்
மாட்டி
வைத்திருந்த
வளையல்களை
தரையில்
மோதி
உடைத்தாள் ;
அவ்வாறு
உடைக்கும்
போது
கைகளில்
போட்டிருந்த
வளையல்
உடைந்து
வழிந்த
இரத்தம்
அந்த
திருநங்கையின்
கைகளை
நனைத்ததோடு
மட்டுமல்லாமல்
அரவானின்
உடலையும்
நனைத்தது “
“அரவான்
சிந்திய
இரத்தம்
இந்த
உலகத்தை
நனைத்து
குளிர்வித்தது ;
ஆனால்
திருநங்கை
சிந்திய
இரத்தம்
அரவானின்
உடலை
நனைத்து
அரவானுடைய
உடலை
குளிர்வித்தது ; “
“அவள்
அழுத
குரலைக்
கேட்டு
அரவானே
உயிர்பெற்று
வந்து
விடுவான்
என்று
சொல்லத்தக்க
வகையில்
அந்த
திருநங்கையின்
அழுகை
இருந்தது “
“அழுது
கொண்டிருந்த
திருநங்கை
தன்னுடைய
அழுகுரலை
நிறுத்தினாள் “
“சிறிது
நேரம்
அமைதியாக
இருந்தாள் “
“சட்டென்று
உணர்ச்சி
வந்தவள்
போல்
எழுந்து
நின்றாள் ;
ஆவேதத்துடன்
ஐயோ
! என்று
கூச்சலிட்டாள்
;
அவள்
கத்திய கூச்சல்
அந்த
இடத்தையே
அதிர
வைத்தது ;
கல்லும்
கரைந்து
விடும்
என்று
சொல்லத்தக்க
வகையில்
அந்த
திருநங்கையின்
ஆவேசமான
அழுகுரல்
இருந்தது ;
ஒரு
நிமிடம்
நிதானித்த
அந்த
திருநங்கை
தன்னுடைய
கழுத்தில்
இருந்த
தாலியை
தானே
அறுத்து
கீழே
போட்டாள் ;
அந்த
கணத்தில்
அந்த
திருநங்கை
ஓ
என்று கதறி
அரவான்
மேல்
மயங்கி
விழுந்தாள் “
“அழுகுரலால்
நிரம்பி
இருந்த
அந்த இடமே
மயான
அமைதியாக
மாறி
விட்டது”
“சிறிது
நேரத்தில்
அந்த
திருநங்கைக்கு
உணர்வுகள்
திரும்பிய
போது
அந்த
திருநங்கையின்
காதுகளில்
யாரோ
நடந்து
வரும்
காலடி
ஓசை கேட்டது “
“தன்னுடைய
தலையைத்
தூக்கி
யார்
வருகிறார்கள்
என்று
பார்த்தாள்
அந்தத்
திருநங்கை “
-----------
ஜபம் இன்னும் வரும்
-----------
K.பாலகங்காதரன்
-----------
26-04-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment