January 15, 2023

ஜபம்-பதிவு-915- மரணமற்ற அஸ்வத்தாமன்-47 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-915-

மரணமற்ற

அஸ்வத்தாமன்-47

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

ஆனால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்போரில்

போர் செய்யும்

இருவரும்

வெவ்வேறு

இடத்தில்

தனித்தனியாக

இடைவெளி விட்டு

நின்று கொண்டு

ஒருவர் ஒரு

அஸ்திரத்தை

விடும் போது

அது எந்த அஸ்திரம்

என்பதையும்

அதற்கு

எதிர் அஸ்திரம்

எது என்பதையும்

சிந்தித்துப் பார்த்து

எதிர் அஸ்திரத்தை

விடுவது என்பது

சிந்திப்பதும்

செயல்படுவதும்

ஒரே சமயத்தில்

நடைபெறாமல்

வெவ்வேறு

சமயத்தில்

நடைபெறுவதால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்போர்

கடினமான போர்

கிடையாது

 

கதாயுதப்போர்

செய்வதற்கு

உடல் வலிமை

மன வலிமை

பார்வைத் திறன்

கவனிக்கும் திறன்

ஆகிய நான்கும்

கண்டிப்பாக

இருக்க வேண்டும்

 

ஆனால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்போரில்

உடல் வலிமையும்

மன வலிமையும்

தேவையில்லை

பார்வைத்திறனும்

கவனிக்கும்

திறனும்

இருந்தால்

போதும்

 

சிந்திப்பதும்

செயல்படுவதும்

ஒரே சமயத்தில்

நடைபெறும்

கடினமான

போரான

கதாயுதப்போரையே

நான் விரும்புகிறேன்

 

உடல் வலிமை

மன வலிமை

பார்க்கும் திறன்

கவனிக்கும் திறன்

ஆகியவை

கண்டிப்பாக

தேவைப்படும்

கடினமான

போரான

கதாயுதப்போரையே

நான் விரும்புகிறேன்

 

இத்தகைய

சிறப்பு மிக்க

கதாயுதப் போரில்

நான் சிறந்தவனாக

இருப்பதையே

விரும்புகிறேன்

 

கதாயுதப் போரில் 

உலகத்திலேயே

சிறந்த வீரனாக

ஆகவே நான்

ஆசைப்படுகிறேன்

 

அர்ஜுனன்:

துரியோதனா

அப்படி என்றால்

வில்லைப்

பயன்படுத்தி

செய்யப்படும்

அஸ்திரப்போரில்

சிறந்தவர்களாகக்

கருதப்படும்

குருதேவர்

துரோணரையும்

தாத்தா

பீஷ்மரையும்

நீ வீரர்கள்

இல்லை

என்கிறாயா

 

துரியோதனன் :

அர்ஜுனா

எப்போதும்

தப்பாகத் தான்

சிந்திப்பாயா

நல்லவிதமாக

சிந்திக்கவே

மாட்டாயா

 

நல்லதையே

நினைக்க

வேண்டும்

நல்லதையே

சொல்ல

வேண்டும்

என்ற எண்ணம்

உனக்கு

ஏற்படவே

ஏற்படாதா

 

எப்போதும்

உன்னுடைய

குள்ள நரி

புத்தியைத்

தான்

வெளிப்படுத்துவாயா

 

எனக்கும்

குரு தேவருக்கும்

இடையே

மன வேறுபாட்டை

உருவாக்காதே

எங்களுக்குள்

பிரிவை

ஏற்படுத்த

நினைக்காதே

 

இருவருக்கிடையே

சண்டையை

உண்டாக்கி

நல்ல பெயர்

வாங்க வேண்டும்

என்ற கேடு

கெட்ட புத்தி

உனக்கு ஏன்

இருக்கிறது

 

நீ நல்லவனாக

இருக்க வேண்டும்

என்றால்

நல்லவன் என்று

பெயர் எடுக்க

வேண்டும் என்றால்

அதற்குரிய

செயல்களைச் செய்

இருவருக்கிடையே

பகையை ஏற்படுத்தி

நல்லவன் என்று

பெயர் எடுக்க

நினைக்காதே

 

-----ஜபம் இன்னும் வரும்

 

-----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

----15-01-2023

----ஞாயிற்றுக் கிழமை

 

----பொங்கல் திருநாள்

  வாழ்த்துக்கள்

//////////////////////////////////////////////////

No comments:

Post a Comment