April 21, 2024

ஜபம்-பதிவு-950 மரணமற்ற அஸ்வத்தாமன்-82 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

ஜபம்-பதிவு-950

மரணமற்ற அஸ்வத்தாமன்-82

(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 

அஸ்வத்தாமன் :  தந்தையே! தங்களிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்.

 

துரோணர் : என்ன பேச வேண்டும்?

 

அஸ்வத்தாமன் : என்ன பேச வேண்டும் என்று சொன்னால் தான் பேசுவீர்களா?

 

துரோணர் : நீ தேவையற்றதைத் தான் பேசுவாய் அதனால் தான்.

 

அஸ்வத்தாமன் : எதை தேவையற்றது என்கிறீர்கள்?

 

துரோணர் : அர்ஜுனனை திறமையற்றவன் என்பாய். பாண்டவர்களை கெட்டவர்கள் என்பாய்.

 

துரியோதனனை நண்பன் என்பாய், கௌரவர்களை நல்லவர்கள் என்பாய்.

 

இது நீ எப்போதும் சொல்லிக் கொண்டு இருக்கும் விஷயம் தானே.

 

புதிதாக என்னிடம் என்ன பேசப் போகிறாய், அதை நான் கேட்பதற்கு

 

அஸ்வத்தாமன் : உண்மையைத் தானே பேசுகிறேன்.

 

துரோணர் : ஆனால், நீ நினைப்பது போல் மக்கள் பேசுவதில்லையே! வேறு மாதிரி அல்லவா பேசுகிறார்கள்.

 

அஸ்வத்தாமன் : மக்கள் பேசுவது அனைத்தும் சரி என்கிறீர்களா?

அவர்கள் சரியானதைத் தான் பேசுகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

 

துரோணர் : இதில் தவறு கண்டுபிடிக்க என்ன இருக்கிறது. சரியாகத் தானே பேசுகிறார்கள்.

 

அஸ்வத்தாமன் : எதை சரி என்கிறீர்கள்

 

மக்கள் பேசுவது அனைத்தும் சரி என்கிறீர்களா?

 

துரியோதனனை பிடிக்காத சில பேர் துரியோதனனை கெட்டவன் என்று பேசுவதால் மக்கள் பேசுவது சரி என்று ஆகி விடுமா?

 

அதுவே பாண்டவர்கள் கெட்டவர்கள் என்று மக்கள் பேசினால் மக்கள் சரியாகத் தான் பேசுகிறார்கள் என்று சொல்வீர்களா?

 

சொல்ல மாட்டீர்கள்

 

ஏனென்றால், நீங்கள் விருப்பப்பட்டு பேசுவதையே மக்கள் பேசுவதால் மக்கள் பேசுவதை சரி என்கிறீர்கள்.

 

நீங்கள் விருப்பப்பட்டு பேசுவதை மக்கள் பேசவில்லை என்றால் மக்கள் பேசுவது தவறு என்பீர்கள்

 

இது மனித இயல்பு

 

நீங்களும் மனிதர் தானே

 

அப்படித் தான் பேசுவீர்கள்

 

மக்கள் ஒரு விஷயத்தை நல்லது என்று சொன்னால்

அது நல்லதாக இருந்து விடுமா?

 

கெட்டது என்று சொன்னால் அது கெட்டதாக இருந்து விடுமா?

 

துரோணர் : மக்களில் பெரும்பாலானவர்கள் அல்லவா சொல்கிறார்கள். சரியானதாகத் தான் இருக்கும்.

 

அஸ்வத்தாமன் : பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக

நல்லது கெட்டதாகி விடாது, கெட்டது நல்லதாகி விடாது.

 

துரோணர் : மக்கள் தவறாக சொல்கிறார்கள் என்கிறாயா?

 

அஸ்வத்தாமன் :  மக்களை ஆட்டுவிப்பவர்கள் தான் மக்களை தவறாக சொல்ல வைக்கிறார்கள்.

 

துரோணர் : யாரை ஆட்டுவிப்பவர்கள் என்கிறாய்?

 

 

------K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்,

 

------21-04-2024

-----ஞாயிற்றுக் கிழமை

 

////////////////////////////////////////////////////

 

 

No comments:

Post a Comment