திரௌபதி- பட்டினத்தார்
பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்றதால் கௌரவர்களில் துச்சாதனன் திரௌபதியை சபைக்கு கூட்டி வந்து சபையில் அவள் சேலையை உருவும் போது கண்ணன் (கடவுள்) வந்து காப்பாற்றினான் என்பது அனைவரும் அறிந்த விஷயம்
இதில் ஒரு கருத்து மறைந்துள்ளது அது என்னவென்று இப்பொழுது பார்ப்போம்
திரௌபதி
திரௌபதி தன் இரண்டு கைகளாலும் தன் உடலை மூடி கடவுளே காப்பாற்று என்றாள் கடவுள் வரவில்லை
தன் உடலை ஒரு கையால் மூடி ஒரு கையை மேலே துhக்கி கடவுளே காப்பாற்று என்றாள் கடவுள் வர்வில்லைதிரௌபதி தன் இரண்டு கைகளாலும் தன் உடலை மூடி கடவுளே காப்பாற்று என்றாள் கடவுள் வரவில்லை
தன் இரண்டு கைகளையும் மேலே துhக்கி கடவுளே காப்பாற்று என்றாள் அப்பொழுது தான் கடவுள் வந்து புடவை கொடுத்து அவள் மானத்தைக் காப்பாற்றினார்
அதாவது தன் இரண்டு கைகளாலும் தன் உடலை மூடி தன் மானத்தை தானே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று திரௌபதி முயற்சி செய்யும் பொழுது கடவுள் வரவில்லை
ஒரு கையால் தன் உடலை மூடியாவது தன் உடலை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று திரௌபதி முயற்சி செய்யும் பொழுதும் கடவுள் வரவில்லை
இரண்டு கைகளையும் மேலே துhக்கி தன் மானத்தை தானே காப்பாற்றிக் கொள்ள முடியாது என்று திரௌபதி உணர்ந்து கடவுளே காப்பாற்று என்று கூறும் பொழுது கடவுள் வந்து திரௌபதிக்கு புடவை கொடுத்து அவள் மானத்தை காப்பாற்றினான்
இந்த கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியும் என்ற நிலை இருக்கும் வரை கடவுள் வர மாட்டார்
மனிதனை மனித சக்தியால் காப்பாற்ற முடியாது மனித சக்திக்கு அப்பாற்பட்ட கடவுள் சக்தியால் தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை வரும் பொழுது மட்டும் தான் கடவுள் வருவார் என்பது புலனாகிறது
இதைத் தான் சரணாகதி என்பார்கள்
பட்டினத்தார்
சரணாகதியைப் பற்றி இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் பட்டினாத்தார் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்
பட்டினத்தார் விநாயகர் ஆலயத்திற்குள் சென்று உள்ளே அமர்ந்து தியானத்திலிருந்தார் அவரைச் சுற்றி அந்த இடத்தைச் சுற்றி இருள் சூழ்ந்திருந்ததுஅம்மாதிரி அவர் தியானத்தில் அமர்ந்திருக்கும் வேளையில் அவ் வழியாக வந்த திருடர்கள் தியானத்தில் அமர்ந்திருந்த பட்டினத்தாரை பிள்ளையார் என்ற நினைத்து அவரிடம் வேண்டுதல் செய்தனர்
நாங்கள் இன்று இந்த ஊரை ஆண்டு கொண்டிருக்கும் பத்திரகிரி மன்னருடைய மாளிகையில் சென்று திருடப் போகிறோம் அப்படி திருடி நாங்கள் மாட்டாமல் வந்தால் உனக்கு அதாவது பிள்ளையாருக்கு ஒரு பங்கு தருகிறோம் என்று வணங்கி விட்டு சென்றனர்
அவ்வாறே அவர்கள் அந்த ஊரை ஆளும் பத்திரகிரி மன்னருடைய மாளிகையில் புகுந்து பட்டாடைகளையும் அணிகலன்களையும் பிற பொருள்களையும் திருடிக் கொண்டு திரும்புகையில் மீண்டும்
அவ் விநாயகர் ஆலயம் அடைந்து விநாயகரிடம் வேண்டிக் கொண்டதின் படி விநாயகருக்கு ஒரு பங்கு தர நினைத்து ஒரு விலையுயர்ந்து மாலையை இருளில் தியானத்தில் அமைர்ந்து கொண்டு இருந்த பட்டினத்தாரை விநாயகர் என்று நினைத்து அந்த மாலையை பட்டினத்தார் அவர் கழுத்தில் அணிந்து விட்டு சென்றார்கள்
திருட்டுப் போன விஷயங்கள் தெரியவர காவலர்கள் ஊர் முழுவதும் சோதனை செய்து வரும் பொழுது தியானத்தில் இருந்த பட்டினத்தார் கழுத்தில் இருந்த மாலையைக் கண்டனர் பட்டினத்தார் தான் மாளிகையில் புகுந்து திருடினார் என்று முடிவு கட்டி அவரை பலவாறு துன்புறுத்தியதால் அவர் தியானத்தில் இருந்து விழித்துக் கொண்டார்
காவலாளிகள் பட்டினத்தாரை அழைத்துக் கொண்டு போய் அர்சமன்றமேற்றினர் அர்சர் உண்மை நிலை எது என்று அறியாத பட்டினத்தாரை கழு மர்த்தில் ஏற்ற ஆணை இட்டார்
தண்டனையை நிறைவேற்றுபவர்கள் பட்டினத்தாரை கழுமர்த்திற்கு கொண்டு சென்றார்கள்
அந்த இக்கட்டான சூழ்நிலையில் பட்டினத்தார் பாடிய பாடல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
“”””””என்செய லாவதியாதொன்று மில்லை இனித்தெய்வமேஉன்செய லெயென்றுணர்ப் பெற்றேன் இந்தஊனெடுத்த
பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்கு
முன்செய்த தீவினையோலிங் ஙனேவந்து மூண்டதுவே””””””””
----------பட்டினத்தார்;------------------
“””என்செய லாவதியாதொன்று மில்லை இனித்தெய்வமே
உன்செய லெயென்றுணர்ப் பெற்றேன்”””””;
நான் குற்றமற்றவன் என்பதை நிருபிக்க எத்தகைய உண்மைகளைச் சொல்ல வேண்டுமோ அந்த உண்மைகளை எல்லாம் சொல்லி விட்டேன்
எத்தகைய செயல்களை செய்தால் நான் குற்றமற்றவன் என்று நிருபிக்க முடியுமோ அத்தகைய செயல்களை எல்லாம் செய்து விட்டேன்
நான் குற்றமற்றவன் என்பதை நிருபிக்க எந்த அளவு முயற்சி எடுக்க முடியுமோ அந்த அளவு முயற்சி எடுத்து விட்டேன் ஆனால் நான் குற்றமற்றவன் என்பதை இந்த உலகமும் நம்பவில்லை இந்த ஊரில் உள்ள மன்னரும் நம்பவில்லை
அதனால் என்னுடைய உயிரை என்னால் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன் மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வ சக்தியால் அதாவது கடவுளால் மட்டுமே என்னுடைய உயிரை காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன்“”””பின்செய்த தீவினையாதொன்று மில்லை””””
பின் செய்த தீpவினை என்றால் பிறந்த பின் செய்த தீவினை என்று பொருள்
பிராரப்த கர்மம்
நாம் பிறந்தது முதல் இன்று வரை செய்த கர்ம வினைகள் பிராரப்த கர்மம் என்று அழைக்கப் படுகிறது
நாம் பிறந்து வாழும் காலத்தில் செய்யும் செயல்களின் விளைவுப் பதிவு தொழிலால் ஏற்பட்ட அறிவின் அனுபவம் ஆகியவை நம் ஆன்மாவில் பதிந்து திரும்ப திரும்ப ஆன்மாவுக்கு நினைவு ஊட்டி செயலுக்கு மாற்றும் விதியை பிராரப்த கர்மம் என்று கூறுகிறோம்நாம் பிறந்தது முதல் இன்று வரை செய்த கர்ம வினைகள் பிராரப்த கர்மம் என்று அழைக்கப் படுகிறது
ஆகாம்ய கர்மம்
ஆ என்றால் ஆன்மா காம்யம் என்றால் இச்சை ஆன்மாவுக்கு இச்சையை ஊட்டி செயலைச் செய்ய வைப்பது ஆகாம்ய கர்மம் எனப்படும்
சஞ்சித கர்மம் பிராரப்த கர்மம் ஆகிய இரண்டு வினைகளிலிருந்து வரக்கூடிய செயல்களின் பதிவுகளால் இனி என்ன செய்ய வேண்டும் என்று துhண்டப்படும் எண்ணங்களும் செயல்களும் ஆகாம்ய கர்மம் எனப்படும்ஆ என்றால் ஆன்மா காம்யம் என்றால் இச்சை ஆன்மாவுக்கு இச்சையை ஊட்டி செயலைச் செய்ய வைப்பது ஆகாம்ய கர்மம் எனப்படும்
பின்செய்த தீவினையாதொன்று மில்லை என்றால்
பின் செய்த தீவினை என்று சொல்லப்படக் கூடிய சஞ்சித கர்மம் பிராரப்த கர்மம் ஆகிய இரண்டு கர்ம வினைகளையும் என் தவ வலிமையால் எரித்து விட்டேன் எனவே பின்செய்த தீவினையால் எனக்கு இந்த துன்பம் நடைபெற எந்த காரணமும் இல்லை என்று பொருள்““”பிறப்பதற்கு முன்செய்த தீவினையோலிங் ஞனேவந்து மூண்டதுவே”””
முன் செய்த வினை என்பது பிறப்பதற்கு முன் செய்த வினை ஆகும் பிறப்பதற்கு முன் செய்த வினை சஞ்சித கர்மம் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது
சஞ்சித கர்மம்
சஞ்சித கர்மம் என்பது ஈரறிவு உயிர் முதல் பிறப்பதற்கு முன் வரை நீண்ட காலம் கருத்தொடராக பல பிறவிகளில் பெற்ற வினைப் பதிவுகள் அதாவது முன் பிறவிகளின் தொடராக வந்த வினைப்பதிவுகள் சஞ்சித கர்மம் என்று அழைக்கப் படுகிறது
பிறப்பதற்கு முன்செய்த தீவினையோலிங் ஙனேவந்து மூண்டதுவே என்றால் சஞ்சித கர்மம் என்பது ஈரறிவு உயிர் முதல் பிறப்பதற்கு முன் வரை நீண்ட காலம் கருத்தொடராக பல பிறவிகளில் பெற்ற வினைப் பதிவுகள் அதாவது முன் பிறவிகளின் தொடராக வந்த வினைப்பதிவுகள் சஞ்சித கர்மம் என்று அழைக்கப் படுகிறது
பிறப்பதற்கு முன் செய்த தீவினை என்று சொல்லப் படக்கூடிய சஞ்சித கர்மத்தால் ஏற்பட்ட விளைவே தான் கழுமரம் ஏற்றப்பட்டதற்குக் காரணம் என்று பொருள்
பட்டினத்தார் இந்த பாடலைப் பாடி முடித்ததும் உடனே கழுமரம் தீப்பிடித்து எரிந்து சாம்பலாயிற்று இச்செய்தி கேட்ட அந்த ஊரின் மன்னர் பத்திரகிரியார் விரைந்து வந்து அவர் பாதம் பணிந்து தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளும் படி வேண்டினான்
திரௌபதி தன் மானத்தை காக்க கடவுளிடம் சரணாகதி அடைந்தாள் அவள் மானம் காப்பாற்றப்பட்டது பட்டினத்தார் தன் உயிரை காக்க கடவுளிடம் சர்ணாகதி அடைந்தார் அவர் உயிர் காப்பாற்றப் பட்டது
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் மனித சக்தியால் ஒரு செயல் முடியாது என்ற நிலை வரும் பொழுது தான் தெய்வ சக்தி வந்து நம்மை காப்பாற்றும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment