ஜபம்-பதிவு-428
(பரம்பொருள்-180)
(கிருஷ்ணன்
தர்மரை
அழைத்து
தர்மரிடம்
பேசினார்)
கிருஷ்ணன் :
“தர்மா ! நீ
அனைத்தும்
அறிந்தவன் ;
உண்மையை
உணர்ந்தவன் ;
தர்மத்தை
கடைபிடிப்பவன் ;
பஞ்ச
பாண்டவர்களில்
பெரியவன் ;
அதனால் தான்
அரவானுடைய
தலையை
வெட்டும்
மிகப்பெரிய
பொறுப்பை
உன்னிடம்
ஒப்படைத்திருக்கிறேன் “
“நீ தான்
அரவான்
தலையை
வெட்ட
வேண்டும் “
“வாளை
எடுத்துக் கொள்
தர்மா !
அரவானுடைய
தலையை
வெட்டுவதற்கு “
(தர்மர் வாளை
எடுக்கிறார் ;
அரவானைப்
பார்க்கிறார் ;
சிறிது நேரம்
நிற்கிறார் ;
கொஞ்ச நேரம்
யோசிக்கிறார் ;
வாளை
காளி தேவியின்
சிலையின்
முன்னால்
அப்படியே
வைத்து விட்டு
பின்னால்
அப்படியே
நடந்து வந்து
பழைய
இடத்திலேயே
நின்று
கொள்கிறார்)
தர்மர் :
“என்னால்
அரவான்
தலையை
வெட்ட
முடியவில்லை
வெட்டவும்
முடியாது”
கிருஷ்ணன் :
“அரவான்
தலையை
வெட்ட
முடியவில்லையா ?
அல்லது
வெட்ட
முடியாதா ? “
தர்மர் :
“வெட்ட
முடியவில்லை
என்ற
காரணத்தினால்
தான்
வெட்ட
முடியாது
என்றேன் “
கிருஷ்ணன் :
“அதைத் தான்
ஏன் என்று
கேட்கிறேன் “
தர்மர் :
“அரவான்
பச்சிளம்
பாலகனாக
இருக்கிறான்
அது
மட்டுமல்ல
அரவான்
உறவு
முறைக்குள்
இருக்கிறான் ;
உறவாகவே
இருக்கிறான் ; “
“உறவாக
இருக்கக்கூடிய
அரவானுடைய
தலையை
என்னால்
எப்படி
வெட்ட முடியும்”
“அதனால் தான்
அரவானுடைய
தலையை
என்னால்
வெட்ட
முடியவில்லை
என்றேன் ;
அதனால் தான்
அரவானை
என்னால்
வெட்ட
முடியாது
என்றேன் ; “
கிருஷ்ணன் :
“நாளை
நடக்கப்போகும்
குருஷேத்திரப்
போரில்
உனக்கு
எதிராக நின்று
போர் செய்யப்
போகிறவர்கள்
யார் என்று
நினைத்தாய் ? “
“எதிரிகள்
என்று
நினைத்தாயா
எதிரிகள்
இல்லையே !”
“அவர்கள்
அனைவரும்
உன்னுடைய
உறவினர்கள்
தானே ! “
----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்
----------- 07-04-2020
//////////////////////////////////////////
No comments:
Post a Comment