ஜபம்-பதிவு-870
மரணமற்ற
அஸ்வத்தாமன்-2
(கடவுளுக்கே சாபம்
கொடுத்தவனின் கதை)
துருபதன் :
இந்த மூன்றும்
வெவ்வேறு நிலைகளில்
இருந்து
இயங்கக் கூடியது
ஒன்றொக்கொன்று
சம்பந்தமே
இல்லாத இவைகள்
எப்படி ஒன்றாக
சந்திக்க முடியும்
அப்படியே
சந்தித்தாலும்
இவைகள் எப்படி
ஒன்றாக இணைந்து
இயங்க முடியும்
துரோணர் :
வெவ்வேறு
இடங்களில்
உற்பத்தியாகும்
ஆறுகள்
கடலில் ஒன்றாக
சங்கமிக்கவில்லையா
அதைப்போலத்
தான் இவைகள்
மூன்றும் ஒன்றாக
சங்கமிக்கும்
போது வெற்றி
என்பது கிடைக்கும்
துருபதன் :
எப்போது ஒன்றாக
சங்கமிக்கும்
துரோணர் :
அவமானங்கள்
அசிங்கங்கள்
ஏளனங்கள்
ஆகியவற்றால்
பாதிக்கப்படும் போது
கிடைக்கக்கூடிய
அனுபவமே
நம்முடைய மனதில்
வெற்றி பெற
வேண்டும் என்ற
வெறித்தனத்தை
கொழுந்து விட்டு
எரியச் செய்யும்
அந்த வெறித்தனமே
எந்த ஒன்றை
நாம் அடைய
முடியாது என்று
இந்த உலகம்
அவமானப் படுத்தியதோ
எந்த ஒன்றாக
நாம் ஆக
முடியாது என்று
இந்த உலகம்
அசிங்கப்படுத்தியதோ
எந்த ஒன்று நமக்கு
கிடைக்கவே
கிடைக்காது என்று
இந்த உலகம்
ஏளனப்படுத்தியதோ
அந்த ஒன்றை
நாம் அடைய
வேண்டும் என்பதற்காக
உண்ணாமல்
உறங்காமல்
அயராது உழைப்போம்
அந்த உழைப்பால்
கிடைக்கக்கூடிய
வெற்றி இருக்கிறது
அல்லவா
அந்த வெற்றி
வெற்றி மட்டும்
கிடையாது
சாதனையும் கூட
துருபதன் :
வெறித்தனத்திற்கு
பதில்
நாம் ஏன்
ஆர்வத்தைப்
பயன்படுத்தக்கூடாது
துரோணர் :
வெறித்தனத்தை
ஆரம்பித்து வைக்க
வேண்டிய அவசியம்
இல்லை
அனுபவம்
ஏற்படும் போது
வெறித்தனம்
தானாகவே
தோன்றி விடும்
அது தன்னுடைய
இலக்கை
அடையும் வரை
தன்னுடைய
இயக்கத்தை நிறுத்தாது
இயங்கிக் கொண்டே
தான் இருக்கும்
தன்னுடைய
இலக்கை அடைந்த
பிறகு தான்
தன்னுடைய
இயக்கத்தை நிறுத்தும்
ஆனால்
ஆர்வம் அப்படி
கிடையாது
அதை ஆரம்பித்து
வைக்க வேண்டும்
இலக்கை அடையும்
வரை தொடர்ந்து
இயங்கிக்
கொண்டிருக்காது
இலக்கை அடைவதற்கு
முன்பாகவே
தன்னுடைய
இயக்கத்தை
நிறுத்தி விடும்
----ஜபம் இன்னும் வரும்
----எழுத்தாளர்
-----K.பாலகங்காதரன்
-----17-10-2022
-----திங்கட்கிழமை
/////////////////////////////////////////////
No comments:
Post a Comment