October 17, 2022

ஜபம்-பதிவு-876 மரணமற்ற அஸ்வத்தாமன்-8 (கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)

 ஜபம்-பதிவு-876

மரணமற்ற

அஸ்வத்தாமன்-8

(கடவுளுக்கே சாபம்

கொடுத்தவனின் கதை)

 

துருபதன் :

அரியணையைப் பற்றி

கவலைப்படாமல்

மக்களைப் பற்றி

கவலைப்படுபவர்களால்

தான்

மக்களுக்கு

தேவையானதைச்

செய்ய முடியும்

 

நான் அரியணையைப்

பற்றிக்

கவலைப்படாதவன்

 

நான் அரியணையில்

இருக்கும் வரை

என்னால் முடிந்தவரை

மக்களுக்கு

தேவையானதைச்

செய்வேன்

 

என்னை செய்ய

விடாமல் தடுத்தாலும்

செய்வேன்

 

இந்த உலகமே

எதிர்த்தாலும் நான்

சொன்னதை செய்து

முடிப்பேன்

 

வருங்காலத்தில் நான்

அரசனானதும்

என்னுடைய

ராஜ்ஜியத்தில் பாதியை

உனக்கு அளித்து

உன்னை அரசனாக்கி

ஷத்திரியர்கள்

மட்டுமே அரசாள

வேண்டும்

பிராமணர்கள்

அரசாளக்கூடாது

என்று இருக்கும்

நிலையை மாற்றுவேன்

 

புதிய பாதையை

உருவாக்குவேன்

 

இந்த உலகத்திற்கு

மாற்றம் என்றால்

என்ன என்று

உணர்த்துவேன்

 

நான் சொல்வதை

செய்வேன்

 

சத்தியம்

செய்கிறேன்

 

(அக்னிவேஸ்யர்

வருகிறார்)

 

அக்னிவேஸ்யர் :

துருபதா

 

சத்தியம்

செய்யக்கூடாது

 

அதுவும்

வருங்காலத்தைப்

பொறுத்து எந்த

ஒரு சத்தியமும்

செய்யக் கூடாது

 

வருங்காலத்தில்

என்ன நடக்கும் என்று

யாருக்கும் தெரியாது

 

வருங்காலத்தைப்

பொறுத்து சத்தியம்

செய்து விட்டு

நிறைவேற்ற

முடியாமல் போனால்

பகை உண்டாகி விடும்

அதனால்

முடிந்தால்

செய்கிறேன் என்று

தான் சொல்ல

வேண்டும்

 

முடிந்தால் செய்கிறேன்

என்று சொல்லி

விட்டு செய்ய

முடியாமல் போனால்

பகை என்பது ஏற்படாது

ஆனால்

சத்தியமாக

செய்கிறேன் என்று

சொல்லி விட்டு

செய்ய முடியாமல்

போனால்

பகை என்பது

ஏற்படும்

 

எனவே

முடிந்தால் செய்கிறேன்

என்று உன்னுடைய

நண்பனிடம் சொல்

 

ஆஸ்ரம வாசி:

குருதேவா

பாஞ்சால இளவரசரை

அழைத்துச் செல்ல

தேர் வந்திருக்கிறது

 

அக்னிவேஸ்யர் :

நீ கிளம்பலாம்

துருபதா

 

துருபதன் :

என்னை ஆசிர்வதித்து

வாழ்த்தி அனுப்புங்கள்

குருதேவா

 

அக்னிவேஸ்யர் :

துருபதா

 

அதிகாரம் உன்

கைக்கு வந்தவுடன்

அதை வைத்துக்

கொண்டு என்ன

நல்லவைகளை

எல்லாம் செய்ய

முடியுமோ

அந்த நல்லவைகளை

எல்லாம் செய்

 

அதிகாரத்தை 

வைத்துக் கொண்டு

எந்த

கெட்டவைகளையும்

செய்யாதே

 

(துருபதன் தேரில்

ஏறி அமர்கிறான்

துரோணர் அவரை

வழி அனுப்ப

அவன் அருகில்

வருகிறார்)

 

----ஜபம் இன்னும் வரும்

 

----எழுத்தாளர்

-----K.பாலகங்காதரன்

 

-----17-10-2022

-----திங்கட்கிழமை

 

/////////////////////////////////////////////

No comments:

Post a Comment